சென்னையில் பட்ட படிப்பு முடித்து துபாயில் வேலை செய்து வந்த விஜயசேதுபதி, பின் வேலை பிடிக்காமல் சென்னை வந்தவர் சினிமா துறையில் நுழைந்தார், தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜயசேதுபதி, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நண்பராக சில காட்சிகளில் ஒரு ஓரமாக இடம் பிடித்திருப்பார், இதே போன்டர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார்.
சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டபட்டுள்ளார். இடையில் சிறு சிறு வேடங்கள் கூட கிடைக்காமல் வருமானம் இல்லாமல் சாப்பிட பணமில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். அதே சமயம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக்காக போராடி வந்த விஜய்சேதுபதி ஒரு கட்டத்தில் சினிமா துறையை விட்டு வெளியேறி மற்றொரு வேலைக்கு செல்ல தயாராகி வேலையும் தேட தொடங்கியுள்ளார்.
அப்போது தான் அவருக்கு தென் மேற்கு பருவக்காற்று படத்தில் கதநாயகனாக நடிக்கும் வாய்ப்பை அந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி கொடுத்தார். இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதில் கதாநாயகனாக நடித்த விஜய்சேதுபதிக்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தது. இதனை தொடர்ந்து கடும் போராட்டத்துக்கு பின்பு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தொடர்ந்து எந்த ஒரு கதாபத்திரமாக இருந்தாலும் தன்னுடைய இமேஜை பற்றி சிந்திக்காமல் நடித்து வந்தார்.
இதனிடையே தனக்கு வாழ்கை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை போன்ற படங்களில் நடித்தார். விஜய் சேதுபதி பல படங்களில் நடித்தாலும் அவருக்கென ஒரு அங்கீகாரம் பெற்று தந்த படம் சீனு ராமசாமி இயக்கத்தில் வந்த தென் மேற்கு பருவக்காற்று மற்றும் தர்மதுரை ஆகிய இரண்டு படங்கள் தான். தர்மதுரை படம் அனைவராலும் மிக பெரிய பாராட்டை பெற்று தந்தது.
இதனை தொடர்ந்து தர்மதுரை பார்ட் 2 எடுக்க இயக்குனர் சீனு ராமசாமி முடிவு செய்து நடிகர் விஜய சேதுபதியை அணுகியுள்ளார். ஆனால் விஜய் சேதுபதி தற்போது எந்த கதையாக இருந்தாலும் பரவாயில்லை, படம் வெற்றி, தோல்வி பற்றி கவலை படாமல் பணம் மட்டுமே குறிக்கோள் என முடிவு செய்து ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்தால் படம் வெற்றி பெரும் பாராட்டை பெறலாம்.
ஆனால் அவருக்கு கொடுக்கும் கால்ஷீட்டில் மூன்று படங்களில் நடித்து விடலாம், அதனால் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்தால் இரண்டு படத்தின் சம்பள தொகையை இழக்க நேரிடும் என்பதால் தர்மதுரை பார்ட் 2 படத்தில் நடிப்பதை தவிர்த்து அடுத்த இரண்டு வருடத்துக்கு தான் ரெம்ப பிசி என விஜய சேதுபதி தெரிவித்ததாக கூறபடுகிறது. இதனை தொடர்ந்து இரண்டு வருடம் வரை காத்திருக்க வேண்டுமா என சிந்தித்த சீனு ராமசாமி.
நடிகர் RK சுரேசை வைத்து தர்மதுரை பார்ட் 2 எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை RK சுரேஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று விஜய சேதுபதி பிசி நடிகராக ஒரே நேரத்தில் பல படஙகளில் நடித்து கோடி கணக்கில் சம்பளம் வாங்க காரணமாக இருந்த அவருக்கு வாழ்க்கை அளித்த இயக்குனர் சீனு ராமசாமியை இயக்கத்தில் மீண்டும் நடிக்க கால் சீட் இல்லை என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளது.
சினிமா வட்டாரத்தில் நன்றி மறந்த விஜய் சேதுபதி அடுத்த இரண்டு வருடத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து அடுத்தடுத்து வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் போது, சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமியை அணுகி படம் பண்ணலாம் சார் என கேட்கும் காலம் வரும். என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. இந்த செய்தி குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.