உங்க லாபத்துக்காக மக்களோட மனசுல வேற்றுமைய உருவாக்குறிங்க..! வாய் கொழுப்பெடுத்து வாங்கி கட்டி கொண்ட சூர்யா..!

0
Follow on Google News

நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது. சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவருடைய திரைப்படம் எதாவது ஓன்று வெளிவர இருக்கிறது என்றால், அந்த படம் வெளியாகும் சமையத்தில் சர்சைக்குரிய வகையில் பேசி பெரும் சர்ச்சையில் இவர்கள் சிக்கி வருகின்றனர், இது அவர்களின் புதிய படத்துக்கான விளம்பர யுக்தி என்று கூட பலர் பொது தளத்தில் விமர்சனம் வைத்தனர்.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கி எழுந்த சூர்யா மற்றும் ஜோதிகா தற்போது திமுக ஆட்சியில் அமைதியாக இருந்து வருவது மட்டுமின்றி கடந்த கால ஆட்சியில் பேசிய கருத்துக்கு எதிராமராக கருத்து தெரிவித்து அந்தர் பல்ட்டி அடித்து வருவது மக்கள் மத்தியில் இவர்களின் செல்வாக்கு பெருமளவில் சரிந்து வருவது குறிப்பிடதக்கது. கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டபோது.

”நீட் போன்ற ’மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. என நீட் தேர்வுக்கு எதிராகவும் ஆளும் அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா தற்போது திமுக ஆட்சியில் நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டபோது மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக “ஒரு பரீட்சை உயிரை விட பெரிது அல்ல” என வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது இரட்டை வேடத்தை வெளிப்படுத்தினர் சூர்யா.

இந்நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெய் பீம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது அதில் சூர்யா பேசிய வசனம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. திருடனுங்க இல்லாத ஜாதி இருக்கா?? உங்க ஜாதி எண் ஜாதி னு எல்லா ஜாதிலையுமே பெரிய பெரிய திருடனுக இருக்காங்க என்று சூர்யா பேசியுள்ள வசனம் பல்வேறு சமூகத்தின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நெட்டிசன்கள், ஏழைங்க இல்லாத ஜாதி இருக்கா…உங்க ஜாதி லயும் ஏழை இருகான் எங்க ஜாதி லையும் ஏழை இருக்கான்… ஏன் ஜாதி பேரை வச்சி மட்டும் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது என சூர்யா அவரது சினிமாவில் வசனமாக பேசுவாரா.? என்றும், மேலும் நீங்க முதலில் ஜாதி பத்தி பேசாத படமா எடுங்கயா. மக்களுக்கு கருத்து சொல்ல எதுக்கு படம் எடுக்குறிங்க வந்து மேடை போடுங்க பேசுங்க கேக்குறோம்.

அத விட்டுட்டு பொழுதுபோக்கு பாக்குறதுல உங்க லாபத்துக்காக மக்களோட மனசுல வேற்றுமைய உருவாக்குறிங்க என வாய் கொழுப்பெடுத்து சர்ச்சையில் சிக்கும் சூர்யாவுக்கு தக்க பதிலடியை நெட்டிசன்கள் கொடுத்து வருவது குறிப்பிடதக்கது. இதே போன்று இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.