செய்த தவறை நியாயப்படுத்தி திமிராக பதிலளித்து கெத்து காட்டும் சூர்யா..! உச்சகட்ட அவமானத்தில் அன்புமணி… கடும் கோபத்தில் வன்னிய இளைஞர்கள்….

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படத்தில் கொடூரமான காவல் ஆய்வாளராக வரும் கதாபத்திரத்தின் உண்மை பெயரான அந்தோனிசாமி என்கிற பெயரை குருமூர்த்தி என பெயரிட்டு சில குறியீடுகள் மூலம் அவர் வன்னியர் போன்று தவறாக சித்தரித்துள்ளதாக வன்னிய சமுதாயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடும் எதிப்புக்கு பின் சர்ச்சைக்குரிய அந்த காட்சிகள் மாற்றம் செய்தது ஜெய் பீம் படக்குழுவினர்.

இந்நிலையில் இது குறித்து அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும் கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது,

உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தான் தமிழ்நாட்டில் வாழும் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை என அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்து சில கேள்விகளும் எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் தரும் விதத்தில் நடிகர் சூர்யா இன்று அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார் அதில், ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், பெயர் அரசியலால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி’ என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் செய்த தவறை நியப்படுத்தி, தன் மீது எந்த தவறும் இல்லை என்பது போன்று சூர்யா பதிலளித்துள்ளது, ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்கும் வன்னிய சமூகத்தினரை மேலும் கோபம் அடைய செய்துள்ளது. இதனிடையே அன்புமணி கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்கமால் கேள்வி கேட்ட அன்புமணிக்கு அறிவுரை வழங்குவது போன்று சூர்யா பதிலடி கொடுத்துள்ளது. அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பொது தளத்தில் உச்சகட்ட அவமானத்தை பெற்று தந்துள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.

வடிவேலு மாதிரி பேச கூடாது முதல்வர் மாதிரி பேச வேண்டும்.. வெளுத்து வாங்கிய அண்ணாமலை ..