விஜயை வைத்து காமெடி செய்யும் புஸ்ஸி ஆனந்த்… ஹீரோவாக இருந்த விஜய் ஜோக்கரான கதை…

0
Follow on Google News

தமிழக வெற்றி கழகம் என தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அதிரடியாக அறிவித்து தன்னுடைய அரசியல் என்ட்ரியை உறுதி செய்துள்ள நடிகர் விஜயின் செயல்பாடுகள் அனைத்துமே மிகப்பெரிய கேலிக்கூத்தாக அமைந்து வருகிறது. வடிவேல் நகைச்சுவை காட்சிகளில் வருவது போன்று, ஏய் என்னை வைத்து ஒண்ணும் காமெடி சீமடி பண்ணலையே என்று வடிவேல் சொல்வது போன்று.

விஜயை வைத்து அவரை சுற்றி இருக்கக் கூடியவர்கள் அரசியலில் இறக்கிவிட்டு காமெடி கிமடி பண்ண வில்லையே என்று கேட்கும் அளவிற்கு உள்ளது விஜயின் அரசியல் செயல் பாடுகள்.தமிழக அரசியலில் சாதி மதம் பேதம் அற்ற அரசியலை முன்னெடுப்பதாக தன்னுடைய அரசியல் அறிவிப்பில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ள நடிகர் விஜய். ஆனால் தமிழக அரசியலில் சாதியை தவிர்த்து அரசியல் இல்லை என்கின்ற ஒரு எதார்த்தம் நடிகர் விஜய்க்கு தெரியவில்லையா அல்லது அறியாமையில் இருக்கிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு மருத்துவரான டாக்டர் ராமதாஸ் அவர் சார்ந்த வன்னிய சமூகத்தின் மக்களின் உரிமைக்காக போராடி, வட மாவட்டத்தில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக உருவாகி, திராவிட கட்சிகள் ஆட்சி அமைக்க முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. அதே போன்று தலித் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் களம் கண்டு, இன்று தலித் சமூகத்தின் தலைவராக அரசியல் களத்தில் இருந்து வருகிறார் தொல் திருமாவளவன்.

இப்படி தமிழக அரசியலில் இதற்கு முன்பு ஆண்ட, அழுகின்ற காட்சிகள் கூட, சாதியின் அடிப்படையில் தான், அவர்களின் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவது கூட அந்த தொகுதியில் எந்த சாதியை சேர்ந்தவருக்கு சீட் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்று ஆய்வு செய்து தான், சீட் வழங்கப்படுகிறது, அப்படி இருக்கையில் சாதியை தவிர்த்து சாதி பேதம் இல்லாத அரசியலை முன்னெடுப்பேன் என்பது சாத்தியமில்லை என்பதை விஜய் உணர வேண்டும் என அட்வைஸ் செய்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இப்படி விஜய் அரசியல் அறிவிப்பில் வெளியான அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வரும் நிலையில், இந்த அறிக்கையை கூட விஜய் தயார் செய்திருக்க மாட்டார் அவர் கூட சுற்றி இருக்கும் புஸ்ஸி ஆனந்த் போன்றவர்கள் தான் தயார் செய்திருக்க வேண்டும், அதில் விஜய் கையெழுத்திடுவதற்கு முன்பு அந்த அறிக்கையை ஒரு முறை படித்து பார்த்தாரா விஜய் என்கிற விமர்சனமும் எழுந்து வருகிறது.

மேலும் விஜய் சமீப காலமாக அரசியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னோட்டமாக திறக்கப்பட்ட தளபதி நூலகம் கேலி கூத்தாகியுள்ளது, மாணவர்களுக்கான இரவு பாடசாலை திட்டத்தில் பால்வாடி பசங்களை அழைத்து வந்து காமெடி செய்த சம்பவமும் அரங்கேறியது, விஜய்க்கு உண்மையிலே மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் பொது தேர்வுக்கு தயாராகும் கிராம பகுதியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு பயன் தரும் விதத்தில் பாடசாலைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அல்லது ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் கோச்சிங் மையத்தை உருவாக்கியிருக்க வேண்டும்,

இப்படி விஜயின் அரசியல் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது அவரை சுற்றி கோமாளி கூட்டங்கள் தான் சூழ்ந்து இருப்பது போன்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அறிவு சார்ந்த ஒரு கூட்டத்தை விஜய் கூட வைத்து கொண்டால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும், காரணம் சினிமாவில் இருந்து எம் ஜி ஆர், விஜயகாந்த் போன்ற தலைவர்கள் அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கும் போது அவர்களை சுற்றி முதிர்ச்சியான அரசியல் தலைவர்கள் இருந்தார்கள், அதே போன்று முதிர்ச்சியான தலைவர்களை அருகில் வைத்து கொண்டு விஜய் ஆலோசனையை கேட்காமல், புஸ்ஸி ஆனந்த் போன்ற ஒரு கோமாளி கூட்டத்தை வைத்து கொண்டு விஜய் செயல்பட்டு வந்தால் விஜய்யை அரசியலில் நகைச்சுவை நாயகனாக தான் மக்கள் பார்ப்பார்கள் என விமர்சனம் எழுத்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.