ரத்த அழுத்தமா? கொரோனாவா ? காமெடி நடிகர் பவர்ஸ்டார் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இதே மருத்துவமனையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் இவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவர் ஸ்டாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ரிசல்ட் வந்தபிறகு கொரோனாவா இல்லை ரத்த அழுத்தமா? என்று தெரியவரும்.

லத்திகா படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் முழுவதும் பஞ்சர் ஆகும் அளவுக்கு பஞ்ச்சை தட்டி விடுவார். இவர் நடித்த படங்களில் காதலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல பஞ்ச்சுகளை பேசுவதால் இவருக்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் உருவாகினர். பவர் ஸ்டார் என்ற பெயரை தான் இயக்கிய முதல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

குழந்தைகளை மிகவும் கவர்ந்த நடிகர் பவர் ஸ்டார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை கேட்டு ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.