விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் வரவேண்டும் என்பதை மக்கள் வாக்களித்து முடிவு செய்வார்கள் என்ற ஒரு பிம்பம் இருந்தாலும், அங்கே டைட்டில் வின்னராக யாரை வர வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது பிக் பாஸ் குழுவினர் தான் . இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இவர் தான் டைட்டிலை வெல்ல வேண்டும் என்று முடிவு செய்யும் பிக் பாஸ்.
அவரைப் பற்றி பாசிட்டிவாக மக்களுக்கு காண்பிப்பது, அவரை பெரிய அளவில் ப்ரோமோட் செய்வது, என்கின்ற வேலையைத்தான் விஜய் டிவி பிக் பாஸ் மூலம் செய்து வருகிறது என்கின்ற விமர்சனம் உண்டு. இப்படி பிக் பாஸ் குழுவினர் செய்யும் சதி வலைகளை எல்லாம் கடந்து தான், அவர்கள் விருப்பமில்லாத ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்கின்ற சூழல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 8-ல் முத்துக்குமரன் – ஜாக்குலின் இவர்கள் இருவருமே இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில், இவர்கள் இருவரும் டாப் 3 உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக, இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து பல சதி வலைகள் அவர்களை சுற்றி பிக் பாஸ் குழுவினர் செய்து வருகிறார்கள், அதையும் உடைத்தெறிந்து தான் இவர்கள் இருவரும் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இவர்களை நாமினேட் செய்து வாக்குகள் மூலம் எலிமினேட் ஆக்க முடியாது, காரணம் மக்கள் இவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்து வாக்களித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரச் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இவர்களை ஒரு டாஸ்க் மூலம் தான் வெளியேற்ற வேண்டும், அதுவும் அந்த டாஸ்க் நேர்மையாக நடைபெற்றால் இவர்கள் வென்று விடுவார்கள், அதற்கான திறமை அவர்களுக்கு உண்டு.
அதனால் இவர்களை தில்லாலங்கடி செய்துதான் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற முடியும் என்று திட்டமிட்டு நடத்தப்பட்டது தான் பணப்பெட்டி டாஸ்க் என்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள். அந்த வகையில் மற்ற போட்டியாளர்கள் ஓடி சென்று அந்த பணப்பெட்டியை எடுத்து விட்டு திரும்பும் பாதையில், எந்த ஒரு சகதியோ தண்ணீரோ இல்லை.
ஆனால் முத்துக்குமரன் ஓடி சென்று 15 வினாடிகளில் அந்த பணப்பெட்டியை எடுத்து வரும் வழியில், சேரும் தண்ணீரும் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் 60 மீட்டரை 15 வினாடியில் முத்துக்குமரன் நிச்சயம் கடந்து விடுவார், ஆனால் சேரும் சகதிமாய் இருக்கும்போது அவர் வலிக்கு கீழே விழுந்து விட்டால், எழுந்து வருவதற்குள் தாமதமாகிவிடும், அதனால் அந்த டாஸ்க்ல் தோத்து விடுவார்.
இவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிவிடலாம் என்ற திட்டத்துடன் தான், முத்துக்குமரனுக்கு எதிராக ஒரு தில்லாலங்கடி டாஸ்கை பிக் பாஸ் செய்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி முத்துக்குமரன் வெற்றி பெற்று பிக் பாஸ் போட்ட சதி வலையில் முத்துக்குமரன் தப்பித்தாலும் ஜாக்குலின் சிக்கி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார்.
அதாவது மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் பொழுது ஜாக்குலின் 160 மீட்டரை கடந்து வர வேண்டுமென்றால் அவருக்கு குறைந்தது 40 செகண்ட் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 35 செகண்ட் மட்டும் ஜாக்லீனுக்கு கொடுத்து , அவர் வருவதற்கு இரண்டு செகண்ட் கூடுதல் ஆகிவிட்டது என்கின்ற ஒரு காரணத்தைச் சொல்லி ஜாக்குலினை திட்டமிட்டு வெளியேற்றி இருக்கிறது பிக் பாஸ்.அந்த வகையில் ஜாக்குலின் – முத்துக்குமரன் இருவர்களை டாஸ்க் மூலம் வெளியேற்ற போட்ட பிக் பாஸ் சதியை முத்துகுமரன் உடைத்து வெற்றி பெற்றாலும் ஜாக்லின் அந்த சதியில் சிக்கி வெளியேற்ற பட்டுள்ளார்.