பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர் விக்ரமன் மீது, தலித் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான பெண் ஒருவர் கடத்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரமன் மீது பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்தார். என்னை மனைவியாக உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்த விக்ரமன், என்னுடைய கிரெடிட் கார்டில் ரூ.80 ஆயிரம் செலவு செய்தது பற்றி கேட்டபோது சாதி ரீதியாக இழிவுப்படுத்தினார் என தெரிவித்த அந்த பெண்.
மேலும் தலித் பெண்ணான என்னை வாழ்க்கையை கொச்சைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும். இதுவரையிலும் 12 லட்சத்திற்கு மேல் பணம் பறித்துள்ளதாகவும் , விக்ரம் தன்னிடம் செய்யும் பண மோசடி தொடர்பாக கேள்வி கேட்ட போது, விக்ரமன் என்னை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும்,மேலும் அவரை விட்டு விலகும் நேரத்தில் எல்லாம், தன்னிடம் வந்து கெஞ்சுவது,
இனி சரியாக நடப்பேன் என விக்ரமன் தெரிவித்ததாக தெரிவித்த அந்த பெண், இருந்தாலும் அவரின் குணம் தொடர்ந்து மாறாமல் இருந்தது. 2 வருடமாக அவருடன் உறவில் இருந்த நான் விக்ரமனுக்கு சப்போர்ட் செய்வதை நிறுத்தினேன். அவர் திருப்பி தருவதாக கூறிய பணத்தை கேட்ட போது என்னை பிளாக் செய்தார். 3 மாத முயற்சிக்குப் பின் பிக்பாஸ் செல்வதற்கு முன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
அதன்பின் நாங்கள் ஒன்றாக இருந்தோம்.பிக்பாஸ் முடிந்து எங்கள் காதல் தொடர்ந்தது. மேலும் தன்னுடைய. மேனேஜர் என சொல்லும் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தார். என்னை ஏமாற்றினார் என கண்டுபிடித்தேன். நான் கான்பிரன்ஸ் கால் செய்து நேரடியாக கேட்டபோது உண்மையை ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணுடன் காதலில் விக்ரமன் ஒன்றரை ஆண்டுகாலாமாக இருந்ததை நான் அறிந்தேன்.
அதன் பின்னர் விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலிகள் என்று சொன்ன 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பேசினேன். அதில் விக்ரமன் பலரை ஏமாற்றியது எனக்கு தெரியவந்தது. அவர்களில் பலருக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. அதே போல் சில ஆண்களை கூட இவர் ஏமாற்றி உள்ளார். மேலும் தன்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச், என பல பொருட்களை வாங்கிய விக்ரமன் அத்துடன், யூடியூப் சேனல் நடத்தப்போவதாக கூறி ஆப்பிள் லேப்டாப்பை வாங்கிதரும்படி விக்ரமன் தொல்லை கொடுத்தார்.
ஆனால் அவர் அதை தொடங்க கூட இல்லை. விக்ரமன் தனது சொந்த காருக்கான டவுன் பேமெண்ட் மற்றும் இ.எம்.ஐகளை என்னிடம் இருந்து கட்டயப்படுத்தி வாங்கி கொண்டார் என விக்ரமன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு குற்றசாட்டுகளை வைத்து இருந்தார். இந்நிலையில் குற்றசாட்டுகளை முன் வைத்த அந்த பெண் தற்பொழுது விக்ரமன் மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில், விக்ரமன் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் மொபைல் வாங்கினார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார்.
இதுபற்றி விக்ரமனிடம் கேட்டபோது என்னை சாதி ரீதியாக பேசி துன்புறுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து அப்பெண் நீதிமன்றம் சென்ற நிலையில். உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தற்போது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விக்ரமன் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 13-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். இதனால் விக்ரமன் எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என கூறப்படுகிறது.