பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ள முத்துக்குமரன் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து சென்னையில் வேலைக்கு வந்த பின்பு அவருடைய தந்தை , மகன் சிரமப்படக் கூடாது என்பதற்காக, ஒரு பழைய இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கித் தருவதாக சொல்கிறார், அதற்கு முத்துக்குமரன் வேண்டாம் அப்பா நான் வாங்கினால், புது வண்டி தான் வாங்குவேன்.
நானே சம்பாதித்து ஒரு புல்லட் வாங்குவேன் என்று முத்துக்குமரன் தன் தந்தையிடம் சொன்னது போன்று சுயமாக சம்பாதித்து ஒரு புல்லட்டை வாங்கி அதை முதன் முதலில் அவருடைய தந்தையிடம் கொடுத்து ஓட்டச் சொல்லி தன்னுடைய ஆசையை நிறைவேற்றுகிறார் முத்துக்குமரன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களை கவர்வதற்காக பல தந்திரங்களை கையாண்டு இருப்பார் முத்துக்குமரன்.
பிக் பாஸ் வீட்டிற்கு போன முதல் வாரம் யார் இந்த வாரத்துக்கான கேப்டன் என்றதும் உடனே முத்துக்குமரன் நான் தான் என்று கைய தூக்குவார், இதன் நோக்கமே யார் கேப்டன் என்று எழுந்து நிற்கிறார்களோ, அவர்களை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து கேமராவும் ஃபோகஸ் செய்யும். அந்த வகையில் அனைத்து கேமராக்களும் தன்னை நோக்கி போக்கஸ் செய்யும் பொழுது. நாம் மக்கள் மத்தியில் எளிதாக ரீச் அடைவோம் என்பதுதான் முத்துக்குமாரின் விளையாட்டு தந்திரம்.
அதேபோன்று ஒவ்வொரு டாஸ்கின் போது முத்துக்குமரன் அந்த டாஸ்க் குறித்து எழுந்து பல விஷயங்களை முண்டியடித்துக் கொண்டு பேசுவார், இதற்கும் காரணம் கூட நாம் ஒரு விஷயத்தை சொல்ல வரும் பொழுது, பிக் பாஸ் வீட்டில் இருக்கிற கூடிய கேமரா நம்மை நோக்கி திரும்பும், அது மக்கள் பார்வைக்கு செல்லும் என்பதுதான் முத்துக்குமாரின் விளையாட்டு தந்திரம்.
இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் சீசன் பைனலுக்கு 15 நாட்களுக்கு முன்பே முத்துக்குமரன் தான் இதில் வெற்றியடையப் போகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. அந்த வகையில் முத்துக்குமரனுக்கு முழுமையாக கிடைக்கக்கூடிய அந்த முதல் பரிசு 50 லட்சம் சென்று விடக்கூடாது என்பதற்காக விஜய் டிவி ஒரு சாதுரியமான ஒரு விஷயத்தை கையாண்டு இருக்கிறது.
இதுவே வேறு ஒரு போட்டியாளர் ஃபைனலுக்கு வருவார் என்று தெரிந்திருந்தால் விஜய் டிவி இப்படி செய்திருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. காரணம் இதற்கு முன்பு நடந்த சீசனில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு அந்த தொகை முழுமையாக கொடுக்கப்பட்டது. கடந்த ஏழாவது பிக் பாஸ் சீசனிலும் அர்ச்சனாவுக்கு 50 லட்சம் முழுமையாக கொடுக்கப்பட்டது, அதில் 33 சதவீதம் வரி போக மீத பணம் அர்ச்சனா கைக்கு வந்து சேர்ந்தது.
ஆனால் இந்த முறை பணப்பெட்டி என்ற டாஸ்க் மூலம் அங்கே பங்கேற்ற போட்டியாளர்கள் கைக்கு சில தொகைகள் சென்றது. இப்படி மொத்தம் ஒன்பது லட்சம் சென்ற நிலையில், அந்த ஒன்பது லட்சத்தை கழித்து மீதம் இருக்கும் 41 லட்சம் தான் முத்துக்குமரன் கைக்கு கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் 33 சதவீதம் வரி போக மீதம் வெறும் 30 லட்சம் மட்டுமே முத்துக்குமரனின் கைக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இது திட்டமிட்டு முத்துக்குமரனை கட்டம் கட்டி அவருக்கு இந்த தொகை முழுமையாக சென்று விடக்கூடாது என்பதற்காகவே விஜய் டிவி இவ்வாறு செய்ததாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், முத்துக்குமரன் ஒரு தமிழ் உணர்வாளர் என்கின்ற ஒரே காரணத்திற்காக விஜய் தொலைக்காட்சி இப்படி வன்மத்துடன் நடந்து கொண்டதா.? என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.