இரவு ஒரு மணிக்கு வனிதாவுக்கு விழுந்த தர்ம அடி… எதற்காக அடித்து துவைத்தார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் தோன்றிய சில முகங்களும், சில டிஜிட்டல் முகங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக உள்ளனர்.

இதயனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்குகளில் சவாலான போட்டியாளராக விளங்கினார். ஆனால் இடையில் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் பெரும் புயலை இணையத்தில் கிளப்பியது. பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், கமல்ஹாசனையும் பிரதீப் ஆண்டனிக்கு சப்போர்ட் செய்து விமர்சித்தனர்.

மறுபுறம் இந்த பிக்பாஸ் 7 வது சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவாக பிக்பாஸ் விமர்சனம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் பேசி வருகிறார். அதேபோல் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா, நடிகர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தன்னை தாக்கியதாக முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த நிலையில், தன்னை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டதாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். என்னை கொடூரமாக தாக்கியது யார் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அந்த நபர் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்று சொல்லி கொள்பவர். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என் காரில் இறங்கி நடந்துக் கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டருகே இருட்டான பகுதியில் நிறுத்தியிருந்தேன். எங்கிருந்தோ ஒரு ஆள் தோன்றி ரெட் கார்டு குடுக்ரீங்களா னு சப்போர்ட் வேரா என்று சொல்லி என் முகத்தில் பலமாக அடித்துவிட்டு ஓடிவிட்டார். வனிதா அப்பதிவில் கூறியுள்ளார்.

இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தம் வழிந்து பயங்கர வலியாக இருந்தது. நநள்ளிரவு 1 மணியளவில் அருகில் யாரும் இல்லை. நான் என் சகோதரியை கீழே வரும்படி அழைத்தேன், பிறகு அவர் இந்தச் சம்பவத்தைப் போலீஸில் தெரிவிக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் நான் அவளிடம், போலீஸில் தெரிவிப்பதில் நம்பிக்கை இழந்து விட்டேன் என தெரிவித்தேன். மேலும் அந்த மர்ம நபரின் கோரமான சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்றும் வனிதா பதிவிட்டுள்ளார்.

நான் முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன், தாக்கியவரை அடையாளம் காண முடியவில்லை. அந்த நபர் பைத்தியக்காரத்தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. நான் திரையில் தோன்றும் உடல் நிலையில் இல்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். இதுபோன்று விஷயங்களில் ஈடுபடுபவர்களை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, அந்த நபர் மீது போலீஸில் புகார் கொடுப்பது குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் என் மகள் ஜெயிக்க வேண்டும் என பப்ளிசிட்டிக்காக நடந்ததாக சிலர் சொல்வது வேதனையாக இருக்கிறது. இதனால்தான் தங்களுக்கு ஏதாவது நடந்தால் யாரும் போலீஸுக்கு போவதே இல்லை. பாதிக்கப்பட்டவரை கிண்டல் செய்வதற்கு வெட்கப்பட வேண்டும். நான் ஓய்வு எடுத்து வருகிறேன். தனியார் இரவு நேரத்தில் போனது எனது தவறு. பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டியது எனது பொறுப்பு.

இது போல் குண்டர்கள் வாழும் உலகில் நாம் வாழ்வது வேதனையாக இருக்கிறது. நான் வளர்த்த என் மகள் எனக்காக எதையும் தூக்கி எறிந்துவிட்டு ஓடிவந்துவிடுவார். எனக்கு இப்படி நடந்துவிட்டது என தெரிந்தால் அவரால் தாங்க முடியாது. பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கவே கூடாது என அவரையே குற்றம்சாட்டிக் கொள்வார். ஜோவிகா உலகின் சிறந்த மகள். அவளை விட்டுவிடுங்கள். இந்த தாக்குதலுடன் அவளை முடித்து போடாதீர்கள். இது என் பிரச்சினை என கூறியுள்ளார்.