விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெரும் காட்சிகள், ஒவ்வொன்றும் இது பிக் பாஸ் ஷோவா இல்லை பலான படமா என்று கேட்கும் அளவுக்கும் படு கேவலமான பேச்சுக்களும், முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளும் அரங்கேறி வருவது, சமூக அக்கறை கொண்டவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சியில்.
பிக் பாஸில் இருக்கும் போட்டியாளர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்களில் ஒவ்வொருவரும் யாரும் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அமைத்துள்ளது ஒவ்வொரு கட்சியும். விஷ்ணு தான் பாத்ரூமில் தாழ்ப்பாள் போடாமல் குளித்ததை பூர்ணிமா பார்த்துவிட்டதாக கூறி மாயாவிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பூர்ணிமா, ‘உங்களை யாரும் பாத்ரூமில் தாழ்ப்பாள் போடாம குளிக்க சொன்னது’ என்று விஷ்ணுவிடம் கேட்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் வேற நடக்குதா என கமென்ட் செய்து வந்தனர். அதே போன்று, பிக்பாஸ் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த நிக்சன், தூசி மூக்கினுள் போகாமல் இருப்பதற்காக மாஸ்க் இருந்தால் கொஞ்சம் எடுத்துக் கொடுங்க என மாயாவிடம் கேட்டுள்ளார்.
ஆனால், மாயா கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் தனது ஸ்போர்ட்ஸ் பிராவை எடுத்து நிக்சனிடம் நீட்டி சிரிக்கிறார். இது ஒரு புறம் இருக்க, பிக் பாஸ் வீட்டில் ஒரு பக்கம் ஐஷு இருக்க, மறுப்பக்கம் கண்ணாடிக்குள் இருக்கும் நிக்சனைப் ஐஷு கிஸ் அடிக்க முயற்சிக்கிறார் ஆனால் கண்ணாடி தடுக்கிறது. அதே போன்று நிக்சன் – ஐஷு இருவரும் ஸ்மோக்கிங் ஏரியாவிற்குள் சென்று விட்டு அங்கே பேசுகின்றனர்.
அங்கு கேமரா மைக் கிடையாது. எனவே நமக்கு சில சத்தம் மட்டுமே கேட்க்கும். அதன் படி அவர்கள் ஏதோ முத்தம் கொடுப்பது போன்ற சத்தம் வருவதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாண்டியன் ஸ்டார் சரவணன், பூர்ணிமா பெட்டில் படுத்து இருக்கும் போது பக்கத்தில் சென்று பூர்ணிமாவிடம் எனக்கு உன்னை ஏற்கனவே ரொம்ப பிடிக்கும் என தெரிவிக்கும் சரவணன். மேலும் அன்னைக்கு நீ என்ன கட்டி பிடிச்ச போது எனக்கு ஒரு மாதிரி ஆகிருச்சு என பேசுகிறார், அதற்கு பூர்ணிமா என்ன மூட் ஆகிட்டா என கேட்க, அதற்கு சரவணன் அப்படி எப்படின்னு என்னால சொல்ல முடியல, ஆனா ஒரு மாதிரி இருந்துச்சு என்கிறார்.
மேலும் ஏற்கனவே உன்னை பிடிக்கும். ஆனாலும் அதையெல்லாம் மனசுக்குள்ள மறைச்சு வச்சுட்டு தான் இருக்கேன், நீயா வந்து என்னை கட்டிப்பிடித்த போது எனக்குள் வந்த ஃபீலிங்கை சொல்ல முடியல என பாண்டியன் ஸ்டார் சரவணன் பூர்ணிமாவிடம் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே நிக்சன் – ஐசு இருவரின் அட்ராசிட்டி எல்லை மீறி சென்ற நிலையில், தற்பொழுது பாண்டியன் ஸ்டார் சரவணன் மற்றும் பூர்ணிமா ஜோடி இருவரும் புதுசா அவர்களின் அட்ராசிட்டியை தொடங்கியுள்ளனர்.
இப்படியே போனால், பிக் பாஸ் ஷோ நிகச்சியை 18 வயசு கீழே உள்ளவர்கள் பார்க்க கூடாது என அறிவிப்பு வெளியிட்ட பின்பே இனி நிகச்சியை ஒளிபரப்ப வேண்டும் போல, அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் காதல் லீலைகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தானாக செய்கிறார்களா.? அல்லது TRP ரேட்டிங்காக விஜய் டீவியே இப்படியெல்லாம் பண்ணுக என ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்கிறார்களா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பித்தக்கது.