பாத்ரூம்ல முத்தம்.. படுக்கையில முத்தம்… உடனே பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்து… முக்கிய தலைவரிடம் இருந்து எச்சரிக்கை…

0
Follow on Google News

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதீப் விஷயத்தில் ரெட் கார்டு, நிக்சனின் பாடி ஷேமிங் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன். இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியால் கலாசார சீரழிவு ஏற்படுவதாக கொதித்தெழுந்துள்ளார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், “பொழுதுபோக்கிற்காக துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது படுக்கை அறை காட்சிகளையும், ஆபாச காட்சிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இதனை விஜய் டிவி உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

பிக் பாஸில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அரைகுறை ஆடைகளோடு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாத்ரூம் போனால் முத்தம்.. படுக்கையில் முத்தம்.. இதுதானா தமிழ் சமூகத்திற்கு நீங்கள் செய்தது? இந்தக் கூட்டத்திலிருந்து விஜய் டிவி தொலைக்காட்சிக்கு எச்சரிக்கிறேன். என் தமிழுக்கென்று ஒரு தனி குணம் உண்டு. இந்த தமிழ் சமூகத்தை கேவலமான அநாகரிகமான பண்பாட்டு சீரழிவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள்.

இந்த அவலங்கள் தொடர்ந்து நீடிக்கும் எனில் ஒரு நாள் பிக் பாஸ் என்கிற அந்த கூடம் இருக்காது. எந்த பண்பாட்டை எனது இளைய தலைமுறையினருக்கு விதைக்கிறீர்கள்? எந்த நாகரிகத்தை எனது இளைய தலைமுறையினருக்கு சொல்லித் தருகிறீர்கள்? எவ்வளவு பெரிய அநியாயம் அக்கிரமம். கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் அந்நிகழ்ச்சியில் வெறும் இரட்டை வசனங்கள் நிரம்பி இருக்கின்றன.

உங்களால் வேறு தரமான நிகழ்ச்சி தயாரிக்க முடியாதா? அப்படி முடியவில்லையெனில் இழுத்து மூடிவிட்டுப் போங்கள் என தெரிவித்த வேல்முருகன். மேலும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் பெரும் விளம்பர சுரண்டலுக்கு என் மொழியையும் என் இனத்தையும் என் பண்பாட்டையும் மோசமாக காட்சிப்படுத்தும் கலாச்சார சீரழிவை கொண்டு வந்து என் மக்கள் மீது திணிக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகள் சமூக சூழல்களிலிருந்தும், குடும்ப சூழலிருந்தும்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள் எனும் கூறும் குழந்தைகள் நல ஆர்வலர்கள், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் உருவகேலி சிந்தனைகளை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் இடத்திற்கு அவர்கள் வந்துவிடுவதாக எச்சரித்துள்ளனர். அதுமட்டுமின்றி தரமான நிகழ்ச்சியை உங்களால் தயாரிக்க முடியவில்லை என்றால், விஜய் டிவி சேனலை இழுத்து மூடிட்டு போகணும்.

மொழி, பண்பாடு, ஆண்- பெண் உறவு, இவற்றில் மோசமான சீர்கேட்டை மக்களுக்கு திணிக்காதீர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன டார்கெட் கொடுப்பது? நான் அந்த நிகழ்ச்சிக்கு டார்கெட் கொடுக்கிறேன். ஒரு மாத காலத்திற்குள் விஜய் டிவியும் கமல்ஹாசனும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒழுங்கு படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்த நிகழ்ச்சி நடக்கும் ஸ்டூடியோ, படப்பிடிப்பு கூடம் எதுவுமே இருக்காது என்று எச்சரித்துள்ளார் வேலுமுருகன். ஏற்கெனவே பிக் பாஸ் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது வேல்முருகன் பேசிய பேச்சு மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.