பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளே சென்றுள்ளார்கள். அங்கே சென்ற போட்டியாளர்கள் ஒவ்வொரு முகத்தையும் பார்த்து ஓ நீங்களா என்று ஆச்சரியத்துடன், என்னமோ இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருவது இவர்களுக்கு தெரியாது போன்றும் புதியதாக பார்ப்பது போன்று எல்லாம் பில்டப் கொடுப்பது எல்லாமே நாடகம் என்று தகவல் வெளியாகிறது.
காரணம் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே வருவதற்கு முன்பு கேரவன் உள்ளே அவர்கள் இருக்கும் போது யார் யார் போட்டியாளர்கள் வருகின்ற தகவல் அவர்களுக்கு தெரியும் என்றும், ஆனால் உள்ளே சென்றவுடன் இந்த மாதிரி பார்த்து பேச வேண்டும் என்பது கூட ஒரு ஸ்கிரிப்ட் தான் என்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசனில் தடவை டார்ச்சர் டாஸ்க் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
அதாவது இதற்கு முன்பு டார்ச்சர் டாசை பிக் பாஸ் குழுவினர் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தபோது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. காரணம் டார்ச்சர் டாஸ் என்பது ஒருவரை டார்ச்சர் செய்து அவர்களை கோபப்படுத்தி அந்த கோபத்தின் மூலம் சண்டையிட தூண்டுவது தான் டார்ச்சர் டாஸ்.
அந்த வகையில் ஹிந்தி பிக் பாஸில் உடலில் மிளகாய் பொடியை அப்புவது, மாட்டு சாணியில் குளிக்க வைப்பது, நாய் பால் குடிக்கும் பவுலின் தண்ணீர் குடிக்க வைப்பது இதெல்லாம் தான் டார்ச்சர் டாஸ் என்பார்கள். இப்படி ஒரு டாசை கொண்டு வரும் போது அவர்களின் கோபத்தை தூண்டி சண்டையிட வைத்து, டிஆர்பி ரேட் எகிற வைப்பது தான் பிக் பாஸ் குழுவினரின் திட்டமாக இருந்துள்ளது. இப்படி இந்தி பிக் பாஸில் நடைபெறும் இந்த டார்ச்சர் பலமுறை பிக் பாஸ் குழுவினர் முயற்சித்தனர்.
அதில் ஒரு காட்சி தான் தாடி பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றபோது, அவர் தலையில் குப்பையை கொட்டிய நிகழ்வு, ஆனால் இது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது கமல்ஹாசனே கூட இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார்.அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய கண்டனத்திற்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என கமல்ஹாசன் பிக் பாஸ் குழுவினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டார்ச்சர் டாஸ் என்கின்ற ஒரு டாஸ்கவே பிக் பாஸ் குழுவினர் கடந்த ஏழு சீசனங்களாக கொண்டுவர முயற்சித்தும் அதற்கு கமல்ஹாசன் இடம் கொடுக்கவில்லை, இந்த நிலையில் தற்பொழுது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால், இம்முறை டிஆர்பி ரேட்டிங்காக டார்ச்சர் டாஸ் என்கின்ற ஒரு டஸ்க்கை பிக் பாஸ் குழுவினர் கொண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கு என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இம்முறை முக்கோண காதலை கொண்டு வந்து டிஆர்பி ரேட்டிங் ஏற்படுத்தவும் பிக் பாஸ் தரப்பு திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு நடந்த காதல் ஸ்கிரிப்டில் ஆரவ் – ஓவியா காதல் டிஆர்பி ரேட்டிங்கை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தூக்கி கொடுத்தது. அதேபோன்று கவின் – லோஸ்லியா இவர்களின் காதலும் பிக் பாஸ் நிகழ்ச்சி டிஆர்பிக்கு உதவியது. ஆனால் அடுத்தடுத்து சீசன்களின் யாருடைய காதல் ஸ்கிரிப்ட் அந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்களுக்கு காதல் ஸ்கிரிப்ட் கொடுக்கப்படும் பொழுது, நீங்கள் காதலிக்க வேண்டும் ஆனால் காதலை சொல்ல கூடாது என்று தான் சொல்லி இவர்களை அந்த காதல் ஸ்கிரிப்ட் செய்ய சொல்வார்கள் என்கின்றனர், இந்த நிலையில் பல சீசன்களாக காதல் ஸ்கிரிப்ட் எடுபடாத நிலையில் இம்முறை முக்கோண காதலை பிக் பாஸில் ஏற்படுத்தி டிஆர்பி ரேட்ட அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாம் பிக் பாஸ் குழுவினர்.