பிக் பாஸ் வீட்டில் எல்லை மீறிய தீபக்… தரமான சம்பவம் செய்த ரஞ்சித்… பாவம் முக்குடைபட்ட தீபக்..

0
Follow on Google News

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீக்கிரம் டாஸ்க் வைத்து தொலைங்கப்பா இவர்கள் அடிக்கிற அக்கப்போரை பார்க்க முடியல என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருவரின் அட்ராசிட்டி முதல் நாரே எல்லை மீறி சென்று கொண்டு விட்டது, இதில் அர்ஷிதா தனக்கு வெளியில் ஹாட்டர்ஸ் அதிகமாக உருவாகி விட்டார்கள், அதை எல்லாம் முறியடிக்க தான் நான் பிக் பாஸ் வீட்டில் உள்ளே வந்தேன் என்றும் நான் ரொம்ப நல்ல பெண், மிகவும் பாசிட்டிவான பெண்.

அதனால் எனக்கு ஏற்பட்டு இருக்கிற எதிர்ப்புகளை மாற்றுவதற்காக தான் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறேன் என்று ஆர்சிதா தெரிவிக்கிறார். ஆனால் அதற்குள்ளேயும் இதற்கு முன்பு அர்ஷிதா குறித்து வெளியான ஆடியோ வீடியோ எல்லாம் வைரல் செய்து நீயாமா பாசிட்டிவான பெண் என்று செம்மையாக ட்ரோல் செய்து வருகிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.

அடுத்ததாக ஆர்நோ பேசுகையில் நானும் மிகவும் நல்ல மனிதர் பாசிட்டிவான மனித. நல்லதை தேடி பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறேன். நல்லது எனக்கு கிடைக்கும் குறிப்பாக வீட்டிற்குள் மிகவும் நேர்மையாக இருப்பேன் என்று தெரிவித்தார். மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் யாரும் நடிக்கவே முடியாது, ஒவ்வொருவரின் உண்மையான முகம் நிச்சயம் வெளிய வரும். அந்த வகையில் நான் பிக் பாஸ் வீட்டில் நடிக்காமல் தன்னுடைய உண்மை முகத்தை வெளியில் காட்டி, இந்த பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருப்பேன் என்று ஆர்னோவ் பேசினார்.

ஆனால் அர்னோவ் ஒரிஜினல் கேரக்டர் என்ன என்று அவருடைய ஆடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது அந்த வகையில் ஆடியோல வந்தது தான் அந்த ஒரிஜினல் கேரக்டரா அதை வெளியில் காட்டினாலும் காட்டுவார் என்கின்ற எதிர்பார்ப்பில் பிக் பாஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த மாதிரி ஒவ்வொரு போட்டியாளர்களும் நான் ரொம்ப நல்ல பையன் நான் ரொம்ப நல்ல பொண்ணு நான் ரொம்ப பாசிடிவ் ஆன மனிதர் என்றெல்லாம் இஷ்டத்துக்கு அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதை பார்க்கும் சினிமா ரசிகர்கள் இதெல்லாம் எங்களால பார்க்க முடியல சீக்கிரம் ஒரு டாஸ்க் வைங்கப்பா என்று பிக் பாஸ் நோக்கி கேள்வி எழுப்பி வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் டாஸ்க் இல்லாததால் இது போன்ற பில்டப் கொடுப்பதற்கு கன்டென்ட் கிரியேட் செய்வதற்கு முக்கிய காரணமே ரவீந்திரனும் தீபக் தான் என்பதை பிக் பாஸ் வீட்டில் பார்க்க முடிகிறது. இவர்கள் இருவரும் போட்டியாளர்களை குழப்பி விட்டு செமையாக கேம் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் குறிப்பாக பிக் பாஸ் சீசனில் தீபக் மற்றவர்களை டாமினேட் செய்வதை பார்க்க முடிகிறது. எந்த போட்டியாளர் பேச வந்தாலும் உடனே குறுக்கிட்டு இவர் அவர்களை டாமினேட் பண்ணுவது போன்று பேசுகிறார். போட்டியாளர் சத்யா நான் பணம் சம்பாதிக்க தான் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தேன், என்னுடைய பையனுக்கு ஏதாவது நான் செய்ய வேண்டும், பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் இருந்து மிகப் பெரிய பணத்தை சம்பாதித்து என் பையனிடம் கொடுக்க வேண்டும்.

என் பையனுக்காக தான் வந்திருக்கேன் என்று சத்யா பேசும்போது உடனே தீபா சூப்பர் மச்சான் என்று பேசி முடிக்கிறார், இப்படி ஒவ்வொருவரும் பேசி முடிப்பதற்குள் தீபக் அவர்களை டாமினேட் பண்ணு வகையில் உள்ளே புகுந்து விடுகிறார். அதே போன்று ஆர்நோவை டாமினேட் பண்ணு வகையில் தீபக் குறிப்பிட்டு பேசும்போது, குறுக்கிட்ட நடிகர் ரஞ்சித், செல்லம் இரு செல்லம், அவர் பேசி முடிக்கட்டு செல்லம், அவர பேச விடுங்க செல்லம், என்று டாமினேட் செய்யும் தீபகை தரமான சம்பவம் செய்து அமைதிப்படுத்துகிறார் ரஞ்சித். இப்படி தொடர்ந்து தீபக் டாமினேட் செய்வது போன்று உங்களுக்கும் தோன்றினால் கீழே கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here