பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக பூர்ணிமா உடன் நிக்சன் சேர்ந்து செய்யும் செயல்கள் பலரை முகம் சுளிக்க வைத்து வருகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி வருகிறது என்றால், ஒரு காதல் கதை நிச்சயம் இடம்பெற்றுவிடும். அந்த வகையில் இந்த சீசனில் நிக்சன், ஐசு இருவரின் விஷயம் தான் காதல் கண்டன்ட்டாக இருந்து வந்தது.
ஐசு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, நிக்சன் மட்டும் எப்போதுமே ஐசுவின் பின்னாடியே சுற்றுவதை வேலையாக பார்த்துக் கொண்டிருதார். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுத்து வந்தனர். இருப்பினும், நாளுக்கு நாள் நிக்சன் செய்யும் சேட்டைகள் அதிகமாகவே தான் இருந்தது.
ஒரு முறை பிக்பாஸ் வீட்டில் ஒரு பெட்டில் மாயா, பூர்ணிமா, ஐசு ஆகியோர் படுத்து இருக்கின்றனர். அப்போது அங்கு வந்த நிக்சன் ஐசுவின் காலை பிடித்து தரத்தரவென்று இழுக்கிறார்.உடனே ஆத்திரம் அடைந்த ஐஷு, நைட்லயும் தூங்க விட மாட்ட பகல்லையும் தூங்க விடமாட்டேன்கிற என்று பலத்த குரலில் கத்துகிறார். இந்த வீடியோ காட்சிகள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அந்த அளவிற்கு நிக்சன் அபாயகரமாக ஐசுவை இழுத்திருக்கிறார்.
இந்நிலையில் ஐசு வெளியேறியதிற்கு நிக்சன் மீது தான் பல போட்டியாளர்கள் குறை சொன்னார்கள். ஆனால், மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் நிக்சனுக்கு ஆதரவாக பேசி வந்தனர். அதிலும் நிக்சன் தன்னுடைய தம்பி மாதிரி என்றும் இருவரும் அக்கா, தம்பி என்றும் பூர்ணிமா பொலிந்து வருகின்றனர். ஆனால், இவர்கள் இருவரும் நடந்துகொள்ளும் விதத்தை பார்க்கும் போது அக்கா, தம்பி போல தெரியவில்லை என்பதே பிக் பாஸ் பார்க்கும் ரசிகர்களின் கருத்து தெரிவித்து வருகிறார்.
அதற்கு காரணம் இவர்கள் இருவரும் எல்லை மீறி நடந்துகொண்டு வருவது தான், நிக்சன் அடிக்கடி பூர்ணிமாவை வர்ணிப்பது, அவரை கட்டிபிடிப்பித்து, மடியில் அமர்ந்து படுத்துக்கொள்வது, உங்களை யாரும் லவ் பண்ணவில்லையா நீங்கள் ஆடும் போது அழகாக இருக்கிறீர்கள் என்று வர்ணிப்பது என நிக்சன் மீண்டும் தனது காஜி தனத்தை காட்டி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பூர்ணிமா, விஷ்ணுவை வெறுப்பேற்ற நிக்சனுடன் வெண்ணிலவே பாடலுக்கு ஒட்டி உரசி டான்ஸ் ஆடியது பலரை முகம் சுழிக்க வைத்தது. மேலும் பூர்ணிமாவும், நிக்சனும் பண்ண ரிகர்சலை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். என்னடா கெமிஸ்ட்ரி இப்படி பக்காவா வொர்க்கவுட் ஆகுதே என்றும் அக்கா அக்கா என மீண்டும் பேசியே நிக்சன் ஐசுவை கவிழ்த்தது போல பூர்ணிமாவையும் கரெக்ட் செய்து விட்டாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
பூர்ணிமா படுத்துக் கொண்டிருக்கும் படுக்கையில் அவர் அருகே ஒட்டி உரசி உட்கார்ந்துக் கொண்டு பெண்கள், இன்னொரு பெண்களுக்கு தலை கோதி விடுவது போல தலையை கோதிக் கொண்டே விஷ்ணு பற்றி பேசி வரும் நிக்சன் காட்சியை ஷேர் செய்த நெட்டிசன்கள் இதெல்லாம் எவ்வளவு கேவலமானது தெரியுமா? என திட்டி வருகின்றனர்.
அதில், ஒரு கட்டத்துக்கு மேல் தலையில் முடியை பிடித்து இழுத்து நிக்சன் விளையாட, அப்படியெல்லாம் பண்ணாத, நான் உனக்கு பண்ணவான்னு பூர்ணிமா நிக்சன் முடியை பிடித்து இழுக்கும் காட்சிகள் தீயாக பரவி வருகின்றன. ஏற்கனவே பெண்களின் பாதுகாப்பை கருதி போட்டியாளர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய கமலஹாசன் கண்ணுக்கு நிக்சன் செய்யும் அட்ரா சிட்டிகள் தெரியவில்லையா என பலரும் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.