பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர் லிஸ்ட் இதோ… அய்யோ இவரா.? ஒரே ரணகளம் தான் போங்க…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 7 சீசன்களை கடந்து 8 வது சீசனை தொடங்க இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் .? யார்.? என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதில் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 8 வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். வேற மாதிரி ஆபீஸ் தொடரில் நடித்த சௌந்தரியா நஞ்சுண்டன், மாடலிங் மூலம் தமிழ் சினிமா உள்ளே வந்த சௌந்தரியா நஞ்சுண்டன் , நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்த ஆதித்ய வர்மா படத்தில் சௌந்த்ர்யா வ துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதன்பின்னர் ஓவியா நடிப்பில் வெளியான 90 எம்.எல். படத்தில் கிறிஸ் என்ற ஓரின சேர்க்கை பெண்ணாக நடித்திருந்த சௌந்தரியா நஞ்சுண்டன் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே செல்கிறார். அடுத்து திருச்சி சரவணகுமார் என்கிற தன்னுடைய பெயரை TSK என்று சுருக்கி கொண்ட காமெடியனாக திகழ் கூடிய TSK இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டின் உள்ளே செல்கிறார். இவருக்கு பிக் பாஸ் வீட்டில் காமெடி ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்ததாக செல்லமா சீரியலில் நடித்த ஆஷிதா மற்றும் அர்னவ் இருவரும் பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்கிறார்கள், இவர்கள் உருவாக்கும் லவ் ஸ்கிரிப்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஓவிய – ஆரவ் மாதிரி பிக் பாஸ் வீட்டில் காதல் செய்து TRP ரேட்டிங் ஏற்றுவதர்க்கு ஆள் வேண்டும் என்பதால், செல்லமா சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த ஆஷிதா மற்றும் அர்னவ் இருவரையும் பிக் பாஸ் போட்டியாளராக தேர்தெடுக்கப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செல்லமா சீரியல் நடிகை அர்ஷிதாவிடம் உங்களுக்கு லவ் பன்றதில் ஒன்றும் ஆட்சேபனம் இல்லையே என பிக் பாஸ் தரப்பில் கேட்க, அதற்கு அவர் நோ அப்ஜெக்சன் என தெரிவித்து விட்டாராம். அதனால் அவருக்கு லவ் கன்டென்ட் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தொடர்ந்து அடுத்து குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்க உள்ளார்.

அவரை தொடர்ந்து பாரதி கண்ணம்மா நாடகத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அருண் பிரசாத் பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்க்க உள்ளார், இவரை கடந்த சீசனில் பங்கேற்க பிக் பாஸ் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது ஆனால், அப்போது தன்னுடைய தோழி VJ அர்ச்சனாவுக்கு அந்த வாய்ப்பை வழங்கும்படி கேட்டுக்கொண்டார், அதன் படி VJ அர்ச்சனா கடந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்று வெற்றியும் பெற்றார்.

அடுத்த இயக்குனர், நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டின் உள்ளே செல்ல இருக்கிறார், இவர் தற்பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், சமீபத்தில் அவர் நடித்து இயக்கிய கவுண்டன் பாளையம் திரைப்படம் மிக பெரிய சர்ச்சையில் சிக்கியது, மேலும் ரஞ்சித் பேசும் பல கருத்துக்கள் சர்ச்சையில் சிக்கி அது மிக பெரிய விவாத பொருளாக மாரி வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டின் உள்ளே செல்ல இருக்கும் ரஞ்சித் என்னெல்லாம் ரணகளம் செய்ய இருக்கிறார் என்கிற பரபரப்பு நீடித்துள்ளது.

அவரை தொடர்ந்து விஜய் டிவி புகழ் சுனிதா கோகாய் பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்கிறார், சுனிதா கோகாய் நன்கு நடனம் ஆட கூடியவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசும் தமிழ் கேலி கிண்டலுக்கு உள்ளானது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகாய் இந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பின்பு நிரந்தரமாக பஞ்சாபில் செட்டிலாக போவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here