பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து அவரை போட்டியில் தொடர விடாமல் வீட்டை விட்டு வெளியேற்றியதற்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து சமூகவலைதள பக்கங்களில் பிரதீப்பிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா கேங் இப்போது கமல் மீது மொத்த பழியையும் சுமத்தி வருகிறது. நாங்க ரெட் கார்டு விஷயத்தை ஆரம்பிக்கல கமல் சார் தான் சொன்னார் என்று வண்டியை திருப்பி விட்ட கதையையும் நாம் பார்த்தோம். இப்படி அந்தர் பல்டி அடித்த கூட்டத்திற்கு பிரதீப்பின் மீண்டும் வந்தால் மரண பயத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதனால் இந்த வாரம் முழுக்க மாயா மற்றும் அவருடைய கூட்டாளிகளின் முகத்திரையை கிழிக்கும் பணியில் பிக்பாஸ் ஈடுபட்டு வருகிறார். மறுபக்கம் வீட்டிலிருந்து வெளியே வந்த பிரதீப் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் `தீர விசாரிப்பதே மெய்!’ என்கிற ஹேஷ்டேக்குடன் சூசகமாகப் பதிவிட்டிருந்தார். அவரை விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக கமல்ஹாசன் வீட்டிலிருந்து அவரை வெளியில் அனுப்பிவிட்டார் என்பதை தான் பிரதீப் இந்த ட்வீட் வெளிப்படுத்துகிறது.
பிரதீப்பை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டது, பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமல்ஹாசனுக்கு எதிராக கடும் எதிப்பு கிளம்பியுள்ள நிலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டின் உள்ளே பிரதீப்பை கொண்டு வந்து, தங்கள் பெயருக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பிக் பாஸ் குழுவினர். மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும்படி பிரதீப்யிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பிரதீப் என்னால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அபாண்டமாக குற்றம் சுமத்தி, உங்கள் TRP ரேட்டிங்காக என்னை இந்த சமூகத்தில் கெட்டவனாக காட்ட நீங்கள் செய்த செயலை எப்படி என்னால் ஏற்று கொள்ள முடியும் என பிடிவாதமாக மீண்டும் உள்ளே வரமாட்டேன் என மறுத்துவிட்டாராம் பிரதீப். இருந்தாலும் பிக் பாஸ் தரப்பு தொடர்ந்து தொந்தரவு செய்து, ஒரு கட்டத்தில் இதுவரை உங்களுக்கு பிக் பாஸ் வீட்டில் கொடுத்த சம்பளத்தை விட இரண்டு மடங்கு தருகிறோம் என தெரிவித்துள்ளது.
இருந்தும் பிரதீப் திட்டவட்டமாக மருத்துத்துள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் மீண்டும் விஜய் டிவி தரப்பு பிரதீப்யிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது ஆனால், பிரதீப்பை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ’என்னை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே அனுப்பினால் நிபந்தனைகள் சில வெளியிட்டுள்ளார் பிரதீப்.
அதாவது நீங்கள் என்னை உள்ளே அனுப்ப நினைத்தால் எனக்கு எதிராக சதி செய்த இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற இரண்டு சிவப்பு அட்டைகள் எனக்கு வேண்டும். மேலும் நான் பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக ஒரு வாரம் இருக்க விரும்புகிறேன்’ என பிரதீப் தெரிவித்துள்ளார். மேலும் “நான் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் சென்றேன் என்றால், அது ஒரு படத்தின் இரண்டாம் பாதியில் வருகின்ற Revenge காட்சிகள் எப்படி இருக்குமோ? என ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார் பிரதீப்.
இந்த சூழலில் பிரதீப் மீது தவறு இல்லை என பல வீடியோ ஆதாரங்கள் சமூக வலை தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பிரதீப் விவகாரத்தில் தப்பு செய்து விட்டோம் என விஜய் டிவி மற்றும் கமலுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்ததில் சேனல் தரப்பு கொஞ்சம் தடுமாறித்தான் போயிருக்கிறது.