விஜய் சேதுபதி இந்த வாரம் முத்துக்குமரிடம் கேப்டன் ஷிப் எப்படி இருந்தது என்று கேள்வி கேட்டவர், முத்துக்குமரனை பேச விடாமல் அவரே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த வகையில் விஜய் சேதுபதி முத்துக்குமரன் மீது தனிப்பட்ட முறையில் செம்ம காண்டில் இருப்பது போன்று இருந்தது அவருடைய பேச்சுக்கள். போட்டியாளர்களுக்கெல்லாம் ஒரு ஸ்டேடஜி போடுவது போன்று எனக்கு பதில் முத்துக்குமரனே ரிவ்யூ கொடுத்து விட்டார்.
இதற்கு மேல் நான் கேட்க என்ன இருக்கு என முத்துக்குமரனை விஜய் சேதுபதி தலையில் நச்சுன்னு ஒரு கொட்டு கொட்டி தான் முத்துக்குமாரிடம் தன்னுடைய பேச்சையே ஆரம்பித்தார் விஜய் சேதுபதி. இதனை தொடர்ந்து முத்துக்குமரன் கேப்டன்சியில நான் ஒரு சில விஷயங்களை மாற்றிக் கொண்டேன் அதை பத்தி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிஞ்சுக்கணும் என்பதற்காக அவர்களிடம் கேட்டேன்.
அதன் பின்பு தெளிவாக சொல்லிவிட்டேன் இதுதானா, என்ன நான் மாத்திக்க மாட்டேன் என்று தெரிவித்து விட்டேன் என்று முத்துக்குமரன் தெரிவிக்க, அதற்கு விஜய் சேதுபதி சரி நீ மாற்றிக்க மாட்டேன் என்று முடிவு பண்ணிட்ட அப்புறம் எதுக்கு மக்களிடம் எதற்கு நீ கேட்க வேண்டும், மேலும் இந்த கேள்வி எல்லாம் கேட்க வேண்டியது நான், அதை நீங்க செய்கிறீர்கள், என்னுடைய வேலையை சுலபமாக்கி வருகிறாயா என்று முத்துக்குமரனை கேள்விகளால் இறுக்கிப்பிடித்தார் விஜய் சேதுபதி.
முத்துக்குமரனின் அதிக பசிங்க தனத்திற்கு பலத்த அடி கொடுப்பது போன்று இருந்தது விஜய் சேதுபதியின் இந்த பேச்சு, இதனை தொடர்ந்து கேப்டன் அழைத்தால் வருவோம், ஆனால் நீ அனைவரையும் அழைத்து அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறாய் என முத்துக்குமரனை செம்ம ரைடு விட்ட விஜய் சேதுபதி, இரண்டு நாளைக்கு முன்பு இரவு அனைவரையும் அழைத்து இருக்க.
ஒரு சிலர் வந்திருக்கிறார்கள், ஒரு சிலர் வரவில்லை, ஒரு சிலர் வேலையின் காரணமாக தாமதமாக வந்திருக்கிறார்கள், அப்படி வருகின்றவர்களை வரவேண்டாம் என்று சொல்ல சொன்னியா.? இல்லையா.? என்று மீண்டும் விஜய் சேதுபதி கேட்க அதற்கு ஆமாம் என்று முத்துக்குமரன் சொல்கிறார். அதற்கு விஜய் சேது எதற்கு சொன்ன என்று கேட்கிறார்.
அதற்கு முத்துக்குமரன் என்னுடைய சுயமரியாதையை சீண்டுவது போன்று இருந்தது அதனால் தான் நான் ரொம்ப நேரமாகவும் அழைத்து வரவில்லை என முத்துக்குமரன் பதில் சொல்ல, அதற்கு விஜய் சேதுபதி உனக்கு அனைவரையும் கூப்ட வச்சு பேச வேண்டியது காலையில வச்சு பேசணும் தோணலை, ஏன் இரவு வச்சு பேசுற என விஜய் சேதுபதி கேட்க, அதற்கு முத்துக்குமரன் இல்ல சார் எனக்கு அப்போது தான் அது சிந்தனையை வந்தது என்று தெரிவித்தார்.
அதற்கு விஜய் சேதுபதி மத்தவங்கள சிரமப்படுத்துரோம் என உனக்கு தோணலையா, நீ சாப்பிடும் பொழுது அவர்கள் வந்தார்கள், அப்ப நீ சாப்பிட்டுக் கொண்டிருந்த அது ஒரு வேலை. அதே மாதிரி அவர்களுக்கும் ஒரு வேலை இருக்கும் அந்த நேரத்தில் நீ அழைத்து வரவில்லை என்றால் இப்படித்தான் நீ அசிங்கப்படுத்துவாயா? உடனே சௌந்தர்யாவை பார்த்து விஜய் சேதுபதி உன்னை எத்தனை தடவை முத்துக்குமரன் அழைத்தார் என்று கேட்க அதற்கு ஒரு தடவை தான் சார் அழைத்தார் என்று சொன்னார் .
ஜெபிரியும் ஒரு தடவ தான் கூப்பிட்டார் என்று சொல்ல அதற்கு விஜய் சேதுபதி முத்துக்குமரன் இதெல்லாம் என்ன, நீ சஞ்சனாவுக்கு நடந்தது தெரியுமா.? யாகாவாராயினும் நா காக்க என்று அப்படினா என்ன என்று விஜய் சேதுபதி கேட்க. அதற்கு யாராக இருந்தாலும் நாவை அடக்க வேண்டும் என்று முத்துக்குமரன் சொல்ல அதற்கு அதை உனக்கே நீ சொல்லிக்கோ என்று முத்துகுமாரனை டோட்டல் டேமேஜ் செய்த விஜய் சேதுபதி பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.