முத்துக்குமரன் தந்திரம்… ஜாக்குலின் பிக் பாஸில் இருந்து வெளியேற்றம்..

0
Follow on Google News

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளரையும் பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேற்றி வருகிறது பிக் பாஸ். இதற்க்காக மிக கடுமையான டாஸ்குகள் அங்கே கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பெண் ஆண் என்று பாரபட்சம் பாராமல் அனைவர்க்கும் ஒரே மாதிரியான டாஸ்குகளை அநியாயமாக பிக் பாஸ் கொடுப்பதாக ரசிகர்கள் குற்றசாட்டுகளை வைத்து வருகிறார்கள்.

இதுவரைக்கும் இல்லாத வகையில் புதுமையாக டாஸ்க் பிக் பாஸ் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு அறைக்குள் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தின் தொகை அதிகரிக்கிறது. ஆனால் அதற்கு அந்த பெட்டிக்கான தூரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் பெட்டியை தூக்கிக்கொண்டு போட்டியாளர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விட வேண்டும் என்பதுதான் டாஸ்க் அப்படி வரவில்லை என்ற அந்த போட்டியாளர் எலிமினேட் ஆவார்.

ஆனால் இம்முறை பணப்பெட்டியை எடுப்பதில் பயங்கர ட்விஸ்ட் ஒன்றை வைத்தார் பிக் பாஸ். வழக்கமாக பணப்பெட்டி வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அதன் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும். ஆனால் இம்முறை பணப்பெட்டியை எடுக்க முதன்முறையாக டாஸ்க் வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே குறிப்பிட்ட தொலைவில் பணப்பெட்டி வைக்கப்படும்.

அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த பெட்டியை எடுத்து வருபவர்களுக்கு அந்த பணம் சொந்தமாகும். ஒரு வேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே வராவிட்டால், அந்த போட்டியாளர் அப்படியே வெளியேற்றப்படுவார். அந்த வகையில் முதலில் 50 ஆயிரத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டது. அதை முத்துக்குமரன் வெற்றிகரமாக எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார்.

பின்னர் 2 லட்சத்திற்கான பணப்பெட்டியை ரயான் எடுக்க சென்றார். அவருக்கு 25 விநாடிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் 17 விநாடிகளிலேயே அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டுவந்து 2 லட்சத்தை தன் வசப்படுத்தினார். இந்த டாஸ்கில் போகப் போகப் பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்பட்டு வந்தது. அப்படி 8 லட்சத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த பணப்பெட்டியை எடுத்து வர 35 விநாடிகள் கொடுக்கப்பட்டது. அதை எடுக்க சென்ற ஜாக்குலின், பணப்பெட்டியை எடுத்து வர 37 விநாடிகள் எடுத்துக் கொண்டதால் அவர் உள்ளே வருவதற்குள் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் ஜாக்குலின் எலிமினேட் செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

டைட்டில் ஜெயிக்கும் கனவோடு இருந்த ஜாக்குலின் பணப்பெட்டி டாஸ்கில் எலிமினேட் ஆகி இருப்பது சக பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 15ஆவது வாரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் 15 வாரமும் இவர் நாமினேஷனில் இடம் பிடித்திருந்தார் ஜாக்குலின்.

ஆனால் எல்லா வரமும் இவரை மக்கள் காப்பாற்றி இருந்தனர். ஆனால் கடைசி வாரத்தில் இவர் எடுத்த முடிவே இவருக்கு வினையாக வந்திருக்கிறது. அதனால் இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அனைவரையும், அதே நேரத்தில் பெண்கள் ஆண்கள் என பாரபட்சம் இல்லாமல், சமமான பண்பெட்டி டாஸ்கில் சமமான வினாடிகளை பிக் பாஸ் கொடுப்பது அநியாயம் என்றும், பெண்களுக்கு அதிகபட்ச வினாடிகள் கொடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறித்து கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here