பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று கலக்கி வரும் முத்துக்குமரன் சிவகங்கை மாவட்டம் கல்லல் என்கின்ற கிராமத்தில் இரட்டை குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர். ஒரு பெண் ஒரு ஆண் என இரட்டை குழந்தைகளின் ஒருவரான முத்துக்குமரனின் அப்பா பூசாரி வேலை செய்து வருகிறார், அப்போது அவருடைய அம்மா வீட்டு வேலையும் செய்து வந்துள்ளார்.
கிராமங்களில் ஒரு வழக்கம் ஆன ஒரு பேச்சு உண்டு. இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்படும் என்கின்ற ஒரு பேச்சு உள்ளது. அதை முத்துக்குமாரின் தாயார் நம்பிக் கொண்டு இரட்டை குழந்தைகளில் தன்னுடைய மகள் நல்ல ஆரோக்கியமாக இருப்பது போன்றும் முத்துக்குமரனுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருப்பது போன்று ஒரு சந்தேக அவருக்கு இருந்து வந்துள்ளது.
அந்த சந்தேகத்தை நிரூபிக்கும் வகையில் முத்துக்குமரனும் ஒரு மன நலம் குன்றியவர் போன்று அவருடைய நடவடிக்கைகளும் சிறுவயதில் இருந்துள்ளது. முத்துக்குமரன் டிப்ளமோ படித்துவிட்டு ராம்நாட்டில் இன்ஜினியரிங் படிக்கிறார். முத்துக்குமரன் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவருக்கு 19 வயது க்கு மேல் நாம் செலவுக்கு நாம் பெற்றோரிடம் பணம் வாங்கக்கூடாது என முடிவு செய்கிறார்.
லோக்கல் கேபிள் சேனலில் அம்பது ரூபா சம்பளத்துக்கு பேசுவது இப்படி தன்னுடைய பேச்சாற்றல் மூலம் படித்துக் கொண்டிருக்கும் போதே செலவுக்கு பணம் சம்பாதித்துக் வந்துள்ளார் முத்துக்குமரன். இன்ஜினியரிங் படித்து முடித்த முத்துகுமரனிடம் அவருடைய தாய் தந்தை வெளிநாட்டிற்கு சென்று அன்று சம்பாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.
ஆனால் முத்துக்குமரன் அவருடைய தாய் தந்தையிடம் ஒரு வருடம் எனக்கு டைம் கொடுங்க. நான் என்னுடைய பேச்சாற்றல் மூலம் ஏதாவது ஒரு சேனலில் என்னுடைய திறமையை நிரூபித்து காட்டுகிறேன் என்ற பெற்றோரின் சம்மதத்துடன் சென்னை வருகிறார் முத்துக்குமரன். முதல் முதலில் ஒரு பிரபல youtube சேனல் வேலைக்கு சென்ற முத்துக்குமரனுக்கு அங்கே வேலைவாய்ப்பு இல்லாததால் திரும்ப வருகிறார்.
தன்னுடைய நண்பர் வீட்டில் இரண்டு நாட்கள், மற்றொரு நண்பர் வீட்டில் இரண்டு மாதம் இப்படி தன்னுடைய பழக்கத்தின் மூலம் நட்புகளை பெரிதாகிக் கொண்டு நண்பர்கள் வீட்டிலிருந்து கொண்டே சென்னையில் வேலையை பார்த்து வருகிறார் முத்துக்குமரன், அவருக்கு ஒரு தனியார் youtube சேனலில் ட்விட்டர் அக்கவுண்டை மெயின்டைன் செய்யும் வேலை கிடைக்கிறது.
இரண்டு நாளில் அந்த வேலை அவருக்கு செட் ஆகவில்லை. உடனே முத்துக்குமரனின் பேச்சாற்றலை பார்த்த அந்த சேனல், அங்கே அவருக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கும் வாய்ப்பை கொடுக்கிறார்கள், தொடர்ந்து பல நியூஸ் கண்டண்டுகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து வருகிறார் முத்துக்குமரன். இப்படி வாய்ஸ் ஓவர் மட்டுமே திரை மறைவில் கொடுத்து வந்த முத்துக்குமர்னுக்கு ஓவர் நைட்டில் மிகப்பெரிய வாய்ப்பை கிடைக்கிறது.
ஒரு முக்கியமான செய்தி நடு இரவில் சூட்டோடு சூட்டாக அந்த செய்தியை போட வேண்டும், அப்படி ஒரு சூழலில் அந்த சேனலில் அப்போதைக்கு எல்லோரும் வேலை முடிந்து சென்று விட்டதால் வாய்ஸ் ஒரு கொடுக்கும் முத்துக்குமரனை நீங்களே இந்த செய்தியை தயார் செய்து பேசுங்கள் என்று அந்த சேனல் வாய்ப்பு கொடுக்கிறது. அந்த செய்திக்கு பின்பு தான் முத்துக்குமரனின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.
வாயால் கெட்டவர்கள் என்ற ஒரு பழமொழி உண்டு, ஆனால் முத்துக்குமரன் தன்னுடைய வாயால் வாழ்ந்து கொண்டிருக்கிறார், என்பதை விட வாயால் உச்சம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும் அந்த வகையில் தன்னுடைய பேச்சாற்றல் மூலம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்த முத்துக்குமரன் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.