பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து வெற்றி பெற்றுள்ள முத்துக்குமரன். இந்த போட்டி தொடங்கியஆரம்ப கட்டத்தில் இருந்தே, பிக் பாஸ் வீட்டில் முக்கியத்துவம் வாய்ந்த நபராக திகழ தொடங்கினார், அதற்காக பல விளையாட்டு தந்திரங்களை கையாள தொடங்கினார் முத்துக்குமரன். அந்த வகையில் எப்படியும் டாப் 3 போட்டியாளர்களின் ஒருவராக முத்துக்குமரன் இருப்பார் என்பது அனைவரின் கணிப்பாக இருந்தது.
இந்நிலையில், முத்துக்குமரனுக்கு தலைமைத்துவத்துக்கான பண்பு, அவர் பள்ளியில் படிக்கும் காலகட்டத்திலேயே இருந்திருக்கிறது, ஒரு கபடி போட்டிக்கு ஜோனல் லெவலில் ப்ளயராக சென்றால், அடுத்த டிஸ்ட்ரிக்ட் லெவலில் கேப்டனாக உருவெடுத்து விடுவார் முத்துக்குமரன், அந்த அளவுக்கு அவருக்கு திறமையும் உண்டு, ஒரு கட்டத்தில் அதிகம் பேசுகிறார் என்பதற்காகவே அவர் பள்ளியில் உள்ள பி டி அத்தியார் இவரை கிளாசில் லீடராகவும் மாற்றியிருக்கிறார்.
இப்படி தலைமைத்துவத்துக்கான பண்பு அவருக்கு பள்ளியில் இருந்து வந்துள்ளது, இந்த நிலையில் முத்துக்குமரன் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார், அப்போது முத்துக்குமரன் ஆங்கில வழி கல்வியை படித்து வந்திருக்கிறார், ஒரு கட்டத்தில் முத்துக்குமரனுடைய தந்தை வெளிநாட்டில் உடல்நிலை பிரச்சினை காரணமாக, அவரால் வெளிநாட்டில் வேலை செய்யமுடியாமல், இந்தியா திரும்பலாம் என்று முடிவு செய்கிறார்.
அதே நேரத்தில் முத்துக்குமரன் தந்தை வெளிநாட்டில் பெரிதாக ஏதும் சம்பாதிக்கவில்லை, அங்கே அவருடைய சம்பளம் மாதம் 25 ரூபாய் மட்டுமே, இந்த நிலையில் இரண்டு பிள்ளைகளும் ஆங்கில வழி கல்வி படித்துக் கொண்டிருக்கிறார்கள், இந்தியா திரும்பிய முத்துக்குமரன் தந்தையிடம், நீங்கள் இப்படி இந்தியா திரும்பி வந்து விட்டீர்களே.1
மீண்டும் நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று அவருடைய தாய்க்கும் முத்துக்குமரனின் தந்தைக்கும் வாக்குவாதம் பெரிய அளவில் முட்டுகிறது, ஒரு கட்டத்தில் முத்துக்குமாரின் தாயாரை அவருடைய தந்தை பளார் என்று அறைந்து விடுகிறார், பின்பு முத்துக்குமரனையும் அவருடைய சகோதரியையும் பார்த்து நீங்கள் ஆங்கில வழி கல்வி கற்கின்றீர்களா, தமிழ் வழி கல்வி கற்றீர்களா என்று கேட்டிருக்கிறார்கள் அவருடைய தந்தை.
உடனே தமிழ் மீடியமே படிக்கிறேன் என்று முத்துக்குமரனும் சொல்லி இருக்கிறார், அந்த வகையில் ஆறாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி படித்த முத்துக்குமரன், ஏழாம் வகுப்பிலிருந்து தமிழ் வழி கல்விக்கு மாறிய பின்பு தான் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. ஆங்கில வழி கற்கும் பொழுது, அங்கே இருக்கும் வாத்தியார் எப்ப பார்த்தாலும் பேசிக்கொண்டே இருக்க நீ பேசுறதுக்கு தான் லாயக்கு என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதே தமிழ் மீடியத்தில், நீ நல்லா பேசுறியே என்று ஊக்கம் கொடுத்து மேடைப் பேச்சுக்கு தயார் செய்திருக்கிறார்கள் முத்துக்குமரனை, அப்படி அங்கே முத்துக்குமரன் படித்த பள்ளியிலே ஸ்டாலின் என்ற ஒரு தமிழ் வாத்தியார் தான், அவருக்கு பேச்சுப் பயிற்சிகள் அளித்து, பல மேடைகளை ஏற்றி முத்துக்குமரன் திறமையை வெளிப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
அந்த வகையில் முத்துக்குமரனின் அப்பா அவருடைய தாயாரை பளார் என்று அடித்த பின்பு, முத்துக்குமரன் தமிழ் மீடியம் கல்விக்கு மாறி, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.