இதுவரை பிக் பாஸ் வீட்டில் 15 பேர் இருந்து வந்த நிலையில், தற்பொழுது வோயல் ககார்டு மூலம் மேலும் ஆறு போட்டியாளர்களை உள்ளே அனுப்பி தற்போது மொத்தம் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவர் வருகிறார்கள், ஏற்கனவே 15 பேர் வீட்டில் எதற்கு இருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு எந்த ஒரு கண்டன்டும் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது மேலும் 6 பேரை அனுப்பி ஏதாவது கண்டன்டு கிரியேட் ஆகுமா என்கின்ற கடும் முயற்சியில் இறங்கியுள்ளது பிக் பாஸ் குழுவினர்.
சமீபத்திய நாட்களில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் முத்துக்குமரனின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது ஆரம்ப கட்டத்தில் இருந்த முத்துக்குமரன் இவர் இல்லை என்கின்ற மாற்றம் அதிக அளவில் தென்படுகிறது. இதற்கு காரணம் முத்துக்குமரன் கேப்டன் ஆக வந்த பின்பு தலைக்கனத்துடன் நடந்து கொள்கிறார் என்கின்ற விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த வாரம் விஜய் சேதுபதி பேசும்போது கேப்டன் பதவி வந்தவுடன் தலைக்கனம் வந்துவிடக் கூடாது என்று முத்து குமரனுக்கு நேரடியாகவே அட்வைஸ் செய்தார் விஜய் சேதுபதி.
மேலும் கடந்த வாரம் ஆண்கள் அணியினர் அனைவரும் முத்துக்குமரன் பேச்சைதான் கேட்கிறீர்கள் என்று விஜய் சேதுபதி ஆண்கள் அணியினர் இருப்பவர்களிடம் ஒரு அலாட் கொடுத்தார், அதாவது எதற்கெடுத்தாலும் முத்துக்குமரன் முத்துக்குமரன் என்கிறீர்களே அப்ப நீங்க எல்லாம் எதற்கு இங்கே வந்தீர்கள் என்று விஜய் சேதுபதி கொடுத்த அலாட்டுக்கு பின்பு, ஆண்கள் அணியினர் முத்துக்குமரனை ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த வகையில் விளையாட்டும் மாறியது முத்துக்குமரனின் நடவடிக்கைகளும் மாறியது. இந்த நிலையில் முத்துக்குமரன் என்னை வைத்து கண்டன் கிரியேட் பண்ண முயற்சி செய்கிறார் என்று அருள் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அங்கு இருக்க ஆண்களும் அருணுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே அருணுக்கும் ஜாக்லினிக்கும் பிரச்சனை இருந்த நிலையில் அவர்கள் இருவரும் சமரசம் ஆகிவிட்டார்கள்.
அதேபோன்று அருணும் முத்துக்குமரனும் இருந்த பிரச்சனையை சரி செய்ய சமரச முயற்சியில் ஈடுபட்டபோது அது மேலும் இவர்கள் பிரச்சனையை பெரிதாக்கி கொழுந்து விட்டு எரிய தொடங்கிவிட்டது. அருணிடம் வந்து முத்துக்குமரன் நான் உங்களுக்காக தான் பேசினேன், நண்பனாக பேசினேன் என்று முத்துக்குமரன் பேசியபோது, அதற்கு அருண் எனக்காக ஒன்றும் நீங்கள் பேச தேவையில்லை எனக்கு வாய் இருக்கு நானே எனக்காக பேசிக் கொள்வேன் என்று சொன்னதும்,
உடனே முத்துக்குமரன் அவ்வளவுதானே இனிமே நான் பேசமாட்டேன் என்று சொல்கிறார், அதற்கு அருண் பேச மாட்டேன் இல்ல பேசக்கூடாது என்று கட்டளை இடுகிறார் அருண், திரும்ப அதான் நான் பேச மாட்டேன் என்கிறேன்ல என முத்துக்குமார் தெரிவிக்க, மாட்டேன் கிடையாது கூடாது என்று மீண்டும் அருண் சொல்கிறார், இப்படி இருவரும் இடையிலான மோதல் கடும் உச்சகட்டத்தை எட்டியது.
ஒரு கட்டத்தில் முத்துக்குமரன் நான் என்னதான் பண்ணனும் என்று கேட்க, அதற்கு அருண் கொஞ்சம் உங்க கேமை கம்மி பண்ணுங்க என்று கிளம்பிவிட்டார். அந்த வகையில் ஒன்றுமே இல்லாத மேட்டரை ஊதி பெரும் பெரிதாக்கும் வகையில் முத்துக்குமரன் நடந்து கொண்ட விதம் ஒரு முள்ளு மேல போட்ட புடவை கிழிந்தது போன்று அமைந்து விட்டது.
இந்த பிரச்சனை எங்க தொடங்குகிறது என்றால் அருண் சொன்னதுக்கு ஜாக் ரெஸ்பான்ஸ் பண்ண வில்லை என்றால் அருண் தான் மனது கஷ்டப்பட்டு இருக்கணும். ஆனால் அவரே எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற பின்பு முத்துக்குமரன் தேவையில்லாமல் உள்ளே நுழைந்து வாயை கொடுத்து முதுகை புண்ணாகி கொண்டு விட்டது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.