கடன் சுமையில் தத்தளிக்கு ஜாக்குலின்… பிக் போயும் ப்ரெஜனம் இல்லை…

0
Follow on Google News

கடுமையான கடன் சுமையினால் தவித்து வந்த ஜாக்குலின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு, அதில் வரும் பணத்தில் தன்னுடைய கடன் மற்றும் பாக்கி உள்ள EMI யை கட்டி விட்டு, மேலும் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய திறமையினால் மேலும் அடுத்தடுத்து மீடியாவில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும், அப்படியே பிக்கப் செய்து விடலாம் என்கின்ற ஒரு மிகப்பெரிய கனவில் தான், ஜாக்குலின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்திருக்கிறார்.

ஒரு மீடியா துறையில் பிரபலமாக இருந்த ஜாக்லின் எப்படி இவ்வளவு கடன் ஆனது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும், விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக விளங்கிக் கொண்டிருந்த ஜாக்களின், நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடித்து மிகப் பெரிய பெயரையும் பெற்றார், அதன் பின்பு தேன்மொழி என்கின்ற ஒரு சீரியலில் நடித்தார்.

ஆனால் அடுத்தடுத்து அவருக்கு மீடியாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி பிரியங்காவை தாண்டி எந்த ஒரு திறமை வாய்ந்த பெண் தொகுப்பாளினிகள் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது. உதாரணத்துக்கு டிடி, மணிமேகலை போன்ற பலரும் பிரியங்காவின் லாபியால் வெளியேறியவர்கள், அதே சூழல்தான் ஜாக்குலீனுக்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஜாக்லின் ஒரு ரெஸ்டாரன்ட் ஒன்றை தொடங்கியிருக்கிறார், ஆனால் அந்த ரெஸ்டாரன்ட் மிகப்பெரிய நஷ்டத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, இப்படி மீடியாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தொழில் செய்து சம்பாதித்து விடலாம் என்ற ஜாக்குலின் எண்ணம், கடைசியில் அவரை கடனாளியாக ஆக்கியிருக்கிறது.

மூன்று வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கடுமையாக முயற்சித்தும், ஜாக்குலீனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்த நிலையில் இம்முறை பிக் பாஸில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், இந்த மீடியாவை விட்டுவிட்டு வேற தொழில் செய்யலாம் என்ற முடிவில் இருந்த ஜாக்குலீனுக்கு, கிடைத்த மிகப்பெரிய வரம் தான் பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு.

பிக் பாஸில் டைட்டில் வின்னர் ஆக வேண்டும், அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்க வேண்டும், மேலும் இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் தன்னுடைய திறமையை நிரூபித்து மீண்டும் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வலம் வர வேண்டும் என்கின்ற மிகப்பெரிய கனவில் ஜாக்குலின் சென்றார். ஆனால் தொடர்ந்து பிக் பாஸ் குழுவினர் ஒருதலைபட்சமாக ஜாக்குலினுக்கு எதிராகவே பல சதி வலைகள் பின்னியதை பார்க்க முடிந்தது.

அதையும் உடைத்து இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் ஜாக்லினை டாஸ்க் என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி இருக்கிறது பிக் பாஸ். ஒரு நாள் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்காக 25000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், மொத்தம் 101 நாட்கள் 25 லட்சத்தி இருவத்தி ஐயாயிரம் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை ஜாக்லின் கடனை அடைப்பதற்கு பெரும் உதவியாக நிச்சயம் இருக்கும் என கூறப்பட்டாலும். ஜாக்குலின் பிக் பாஸ் வீட்டில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக வில்லை என்றாலும் மக்களின் மனங்களை வென்று விட்டார், அந்த வகையில் ஜாக்குலின்னுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பார்த்து அவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுக்குமா.? அல்லது பிரியங்காவின் லாபி ஜாக்குலினை வாய்ப்பை தடுத்து நிறுத்துமா என்கின்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.