பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது. இதில் இந்த வாரம் நடந்த பணப்பெட்டி டாஸ்க்கில் பிக்பாஸ் கொடுத்த நேரத்திற்குள் பணப்பெட்டி டாஸ்க் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த டாஸ்கில் ஜாக்குலின் நடந்த சம்பவம், ஜாக்குலின் மட்டுமல்லாது சக போட்டியாளர்களும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில், டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அருண் பிரசாத், தீபக் ஆகியோர் வெளியேறியதைத் தொடர்ந்து இப்போதும் ஜாக்குலினும் வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் 8 ஆவது சீசன் தொடங்கியதில் இருந்து அனைத்து வாரங்களிலும் ஜாக்குலின் பிக் பாஸ் வீட்டில் உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு கொண்டிருந்தார்.
மேலும் ஜாக்குலின் டாப் போட்டியாளர், ஒரு செலிபிரிட்டி என்றாலும் கூட, அவர் எந்த வாரமும் கேப்டனாகவும் இல்லை, இதற்கு காரணம் கேப்டனாக வருவதற்கு ஜாக்குலின் எந்த ஒரு நரி வேலையும் செய்யவில்லை என்பது நிகழ்ச்சியை பார்க்கும் அனைவர்க்கும் தெரியும், குறிப்பாக ஜாகுலின் ஒரு நேர்மையான போட்டியாளர் என்பதாலே அவருக்கு ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
அந்த வகையில் ஜாகுலின் 15 வாரங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும், அவரது வலுவான விளையாட்டு காரணமாக ஜாக்குலினை பார்வையாளர்கள் தொடர்ந்து சேவ் செய்தனர். இது எந்த ஒரு போட்டியாளருக்கு நடக்காத ஒரு விஷயம், இந்நிலையில் பணப்பெட்டி டஸ்கில் கடைசியாக 8 லட்சத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டது.
இந்த டாஸ்கில் ஜாக்குலின் கலந்து கொள்ளும்போது கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது பிக் பாஸ் எதற்காக என்று கேட்டபோது என்னால் இந்த வீட்டிற்குள் மீண்டும் வராமல் போய்விடுமோ என்று எனக்கு பயமாய் இருக்கிறது பிக்பாஸ் என்று சொல்லியிருந்தார். அதற்கு எல்லா போட்டியாளர்களும், பிக் பாஸும் ஆறுதல் கூறி தான் அவரை இந்த டாஸ்கில் கலந்து கொள்ள வைத்தனர்.
இந்த நிலையில் ஜாக்குலின் 35 வினாடிகளில் 80 மீட்டர் தொலைவில் இருக்கும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே வரவேண்டும் என்கிற சவாலை ஏற்று ஓடிய ஜாக்குலின் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாலும், அவர் இரண்டு வினாடிகள் கால தாமதமாக வந்தார் என்று ஜாக்குலினை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.
இந்த நிலையில் ஜாக்குலின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது பிக் பாஸ் ரசிகர்களை மிக பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தாலும் ஒரு சில போட்டியாளர்கால மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். இந்நிலையில் கடும் சோகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜாகுலின் அவருடைய தோல்வியை அவரால் ஏற்று கொள்ளவே முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளான ஜாகுலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜாகுலின் பிக் பாஸ் வீட்டில் , எந்த ஒரு வெளி உலக தொடர்பு இல்லாமல் இருந்து, எதிர்ப்பாராத தோல்வி, இதெல்லாம் அவரை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதால், மருத்துவர்கள் ஜாகுலினுக்கு கவுன்சலிங் கொடுத்து வருவதாக கூறப்படுகிது. இந்நிலையில் இது போன்ற மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என பலரும் தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.