ஒரே பெட்ல கசமுசா… மாயா – பூர்ணிமா அட்டூழியம்… வெட்கமே இல்லாமல் அப்படியே டெலிகாஸ்ட் செய்யும் பிக் பாஸ்…

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீஸனின் தொடக்கத்தில் கொஞ்சம் மெதுவாக சென்ற சீசன் பிரதீப் வெளியேற்றத்தில் இருந்து சீசன் சூடு பிடித்து உள்ளது. பிக் பாஸ் சீசன் 7ல் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த சீசனில் நடிகை மாயா மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆள் சேர்த்துக்கொண்டு உள்ளே இருப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது முதல் புகார்.

மேலும் மாயா மற்றும் அவரின் குழுவினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பிரதீப் மீது வைத்து அவருக்கு ரெட் கார்டு வழங்க காரணமாக இருந்தனர். இதன்காரணமாக ஒட்டுமொத்த ரசிகர்களும் மாயா மற்றும் பூர்ணிமா மீது வெறுப்பில் இருக்கின்றனர். குறிப்பாக மாயா செய்யும் விஷயங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவே இல்லை. மற்ற போட்டியாளர்களிடம் மாயா மற்றும் பூர்ணிமா நடந்துகொள்ளும் விதம் ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கி வருகின்றது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமா செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் விமர்சனங்களையும் சர்ச்சையையும் உண்டாக்கி வருகின்றது. இந்நிலையில் பாடகி சுச்சி லீக்ஸ் சுசித்ரா மாயா ஒரு லெஸ்பியன், அவருக்கு பூர்ணிமா மேல் ஈர்ப்பு என்கிற குண்டை தூக்கிப் போட்டிருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே பெட்டில் மாயா மீது பூர்ணிமா மேலே ஏறி படுத்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

அதாவது மாயாவின் மேல் பூர்ணிமா கை, கால் என பாதி உடலை போட்டுக்கொண்டு அணைத்தபடி படுத்திருக்கிறார்.ஏற்கனவே மாயா தனக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்ததாக நடிகை அனன்யா சோசியல் மீடியாவில் வெளிப்படையாக கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து பாடகி சுசித்ராவும் மாயா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறியிருந்தார்.

இப்படி பல விஷயங்கள் அவர் பற்றி வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்த டார்கெட் பூர்ணிமா தான் என்ற ஒரு யூகமும் கிளம்பியது. அதற்கேற்றார் போல் தற்போது பூர்ணிமா மாயாவின் வலைக்குள் மொத்தமாக சிக்கி இருக்கிறார் மாயா- பூர்ணிமா இருவரும் ஆரம்பத்தில் ஒன்றாக இணைந்து கிசுகிசு பேச ஆரம்பித்ததில் இருந்து இருவரும் நெருக்கமாகவே உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இருவருக்கும் நல்ல பழக்கம் இருக்கும் என்றே ரசிகர்கள் கருதி வருகின்றனர். அதனால், தான் பிக் பாஸ் வீட்டில் மாயாவும் பூர்ணிமாவும் எப்போதுமே ஒன்றாக உள்ளனர் என்றும் பெட்ஷீட் போர்த்திக் கொண்டு மைக்கை கழட்டி வைத்து விட்டு இருவரும் பேசும் காட்சிகளையும் ரசிகர்கள் ஷேர் செய்து என்னடா நடக்குது பிக் பாஸ் வீட்டுக்குள்ள என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த வாரம் கேப்டனாக இருந்த மாயா செய்த வேலைகளை கமல் ஹாசன் தட்டிக்கேட்ட காரணத்தினால் இந்த வாரம் சற்று வீட்டில் கொஞ்சம் அமைதி நிலவுகிறது. அதற்கு ஏற்றார் போல் தீபாவளி வாரம் என்பதால் ஸ்மால் பாஸ், பிக் பாஸ் வீடு என இரண்டு இல்லாமல் ஒரே வீடு தான் என அறிவித்துவிட்டார் பிக் பாஸ். இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட மாயா குழுவை ஒரு கை பார்க்கலாம் என நினைத்த நிலையில் அதை பிக் பாஸ் முடித்துவிட்டார்.

மேலும் கமல்ஹாசனின் பெரிய சப்போர்ட் மாயாவுக்கு இருப்பதால் தான் அவருக்கு எதிராக கமல் ஒரு வார்த்தை கூட கடுமையாக கண்டித்து பேசாமல் ஜோவிகாவையும் பூர்ணிமாவையும் தான் விளாசி எடுத்தார் என்றும் மாயாவை அப்படியே கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுகிறார் என்றும் இந்த சீசனின் டைட்டில் வின்னரே மாயா தான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.