ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 8 கோலாகலமாக தொடங்கி பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் சென்று விட்டார்கள். பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பேட்மேன் ரவீந்தர், நடிகர் ரஞ்சித் மற்றும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகைகள் என மிகப் பெரிய பட்டாளமே பிக் பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்கள்.
இதில் தொகுப்பாளர் ஜாக்குலின் மற்றும் தமிழை மிக தூய்மையாக பேசக்கூடிய தமிழ் பேச்சாளர் முத்துக்குமார் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாராக கலந்து கொண்டுள்ளார்கள். இப்படி பரபரப்பான இந்த பிக் பாஸ் சீசன் 8-ல் சம்பளம் என்பது சினிமா நடிகர் நடிகைகள் என்றால் அவர்களுக்கு ஒரு சம்பளமாகவும், சீரியல் நடிகர் நடிகைகளுக்கு அவர்களுக்கு ஒரு கேட்டகிரியாகவும் மற்றும் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய அவர்கள் அது ஒரு கேட்டகிரியாகவும் பிரித்து இப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் நிறைவு செய்து விட்டால் அவர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும் அது அவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய சப்போட்டாக இருக்கும் என்பதற்காகவே பலரும் பிக் பாஸில் பல்லை கடித்துக்கொண்டாவது 100 நாட்கள் கடந்து விட வேண்டும் என்று கடுமையாக போராடுவார்கள். மேலும் சினிமா வாய்ப்புகளுக்காக தேடிக் கொண்டிருக்கும் பலரும் தங்களுடைய திறமையை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்று காண்பித்தால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவே பலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய நடிகர் விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் என்கின்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது . பொதுவாக விஜய் சேதுபதி இதற்கு முன்பு தொலைக்காட்சி தொடரில் மாஸ்டர் செஃப் என்கின்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி அதில் தத்துவம் எல்லாம் பேசியும் அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்த நிலையில் கமலஹாசனுக்கு அடுத்து இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்கின்ற மிகப்பெரிய பரபரப்பு வந்த நிலையில்.
விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் கமலஹாசன் போன்று விஜய் சேதுபதியால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியுமா என்கின்ற பலரும் சந்தேகம் இருந்த நிலையில், கமலஹாசன் இதுக்கு முன்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை பலமுறை பார்த்து இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கற்றுக் கொண்டதாகவும்.
மேலும் இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு சுமார் 10 நாட்கள் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி பேச வேண்டும் என்று பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மொத்தம் 100 நாட்கள் நடக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 வாரம் சனி ஞாயிறு மட்டும் விஜய் சேதுபதி கலந்து கொள்ள வேண்டும். அவர் வார வாரம் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பிக் பாஸ் செட் அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி இவிபி ஃபிலிம் சிட்டிக்கு போக தேவையில்லை.
விஜய் தொலைக்காட்சியில் உள்ள ஒரு அரங்கமோ அல்லது பிரசாத் ஸ்டுடியோ ஏதோ ஒரு அரங்கத்தில் அவர் கலந்து கொண்டால் போதும். ஆனால் பிக் பாஸ் இறுதி நாளன்று நடைபெறும் நிகழ்ச்சிக்கு மட்டும் அவர் பூந்தமல்லியில் உள்ள இவிபி ஃபிலிம் சிட்டிக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இப்படி 15 வாரங்கள் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக அவருக்கு சுமார் 18 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.