பிக் பாஸ் போட்டியாளராக மணிமேகலை… கடும் கோபத்தில் கமல்ஹாசன்…

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 8 வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கோலாலமாக தொடங்க இருக்கிறது. அதற்குகாக பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டின் உள்ளே செல்ல தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏழு சீசனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது இந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார், விஜய் சேதுபதி ஏற்கனவே இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.

ஆனால் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய அந்த இரண்டு நிகழ்ச்சியுமே தோல்வியை தழுவியிருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பது, எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை நிகழ்ச்சி தொடங்கிய பின்பு தான் தெரியவரும். இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது கமலஹாசன் உலக நாயகன் என்கிற அடைமொழியுடன் தமிழ் சினிமாவின் பல்கலைக்கழகம் என்று போற்றக்கூடிய வகையில் கொண்டாடப்பட்டு வருகின்றவர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அங்கு சிறு சிறு தவறுகளால் அவர் ஒட்டுமொத்தமாக ட்ரோல் செய்யப்பட்டார். கமல்ஹாசன் உடை மற்றும் அவருடைய பேச்சு என அவருடைய பிக் பாஸ் நடவடிக்கைகள் ட்ரோல் செய்யப்படும் பொழுது அவருடைய இமேஜ் மிகப் பெரிய அளவில் டேமேஜ் ஆனது.

அதுவே இந்தியன் 2 படத்திற்கான தோல்வியாக கருதப்படுகிறது, காரணம் இந்தியன் 2 படம் வெளியான பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இந்தியன் 2வையும் ஒப்பிட்டு பல ரோல் காமெடிகள் வந்தது. அந்த வகையில் அடுத்தடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதன் மூலம் தன்னுடைய அடுத்தடுத்து படங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும், மேலும் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்ததால் கமல்ஹாசன் இமேஜை டோட்டலாக டேமேஜ் செய்யும் வகையில் அமைந்து விட்டது என்கின்ற ஒரு கடும் கோபத்துடன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு கமல்ஹாசன் வெளியேறினதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தயார் நிலையில் இருக்கும் நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவராக சமீபத்தில் விஜய் டிவியில் ப்ரியங்காவுடன் சண்டையிட்டு வெளியேறிய மணிமேகலை கலந்து கொள்கிறாரா என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது, அதே நேரத்தில் மணிமேகலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறாரா இல்லையா என்று நாம் தீவிரமாக விசாரித்தோம்.

அதில் நூறு சதவீதம் மணிமேகலை மீண்டும் விஜய் டிவியில் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்ல வேறு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் மணிமேகலைக்கு ஜி தமிழ் தொலைக்காட்சியில் இருந்து மிகப் பெரிய ஆஃபர் வந்துள்ளது. அதாவது விஜய் ஆண்டனி விளம்பரத்தில் வரும் மகா நடிகை என்கின்ற நிகழ்ச்சியை தொகுப்பாளர் விஜய் உடன் இணைந்து மணிமேகலை நடத்துவதற்கான மிகப்பெரிய ஆபர் மணிமேகலைக்கு வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி நடிகைகளை தேர்ந்தெடுக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஆகும். ஆனால் மணிமேகலை இதுவரை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்பந்தம் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வருகிறார். மேலும் சன் டிவியில் ஒரு கேம் ஷோவுக்கு மணிமேகலையை நெறியாளராக கொண்டுவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் விஜய் டிவி விட்டு வெளியேறிய மணிமேகலை மீண்டும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here