கோலாகல கொண்டாட்டத்துடன் இரண்டு கமல்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 7ஐ தொடங்கி வைத்தனர். பிக்பாஸ் சீசன் 7ஐ ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியுள்ளது. ஏற்கனவே, விஜய் டிவியில் ஆறு முறை வெற்றிகரமாகப் பயணித்த பிக்பாஸ் ஏழாவது சீசனில் 18 போட்டியாளர்களுடன் அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது.
இந்த சீசன் 106 நாள் பயணம் ஆகும், மற்றும் இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடுகள் என்பதால் போட்டியாளர்களிடையேயான ரகளைகளும் பிரச்சினைகளும் இரு மடங்காக உள்ளது. ஆம், இதனால் இந்த சீசன் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும், விறுவிறுப்பாகவும் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த முறை ஜூனியர் சீனியர் என அனைத்து வயதினரும் போட்டியாலர்கலாகக் களமிறங்கியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே பெரும் வாக்குவாதம், சண்டை வருவதுதான் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு. அந்த வகையில், இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் புதுபுதுப் பிரச்சினைகள் மூலம், ரசிகர்களை நன்றாக என்டர்டெயின் செய்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, பிக் பாஸ் தொடங்கி ஒரு வாரமே ஆகியுள்ள தன்னை காமப் பார்வையுடன் பார்க்கிறார் என்று நடிகை மாயா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
அதாவது, மாயா கூல் சுரேஷை தாண்டி போகும் போதெல்லாம் , அப்படியே அவரது பின்னழகை கூல் சுரேஷ் வெறிக்க வெறிக்க பார்த்திருக்கிறார். இதையே கூல் சுரேஷ் அடிக்கடி செய்யவே, அதை மாயா பார்த்து விட்டார். இதனால் பொங்கியெழுந்த மாயா, திரும்பி வந்து கூல் சுரேஷிடம் ஏன் அப்படி பார்க்குறீங்க, உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என கேட்டு விவாதம் செய்து வந்தார்.
ஆனால், கூல் சுரேஷ் யாருடனும் சண்டை போடாமல் செம அமைதியாக சேட்டைகளை செய்து வருகிறார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மாயா ஓவர் சீன் போடுகிறார் என்று கமென்ட் செய்து வருகின்றனர். இந்த சூழலில், பிக்பாஸ் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த நிக்சனிடம் மாயா நடந்து கொண்ட விதம் பலரையும் எரிச்சலூட்டியுள்ளது. மேலும், மாயாவின் இந்த செயலைக் கண்டு ரசிகர்கள் பலரும் கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.
‘கூல் சுரேஷை குற்றம் சொல்லி விட்டு, இப்போ நீங்க இப்டி நடந்துக்குவது நல்லா இருக்கா’ என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் விவாதம் போய்க் கொண்டிருக்கின்றன. பிக்பாஸ் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த நிக்சன், தூசி மூக்கினுள் போகாமல் இருப்பதற்காக மாஸ்க் இருந்தால் கொஞ்சம் எடுத்துக் கொடுங்க என மாயாவிடம் கேட்டுள்ளார். ஆனால், மாயா கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் தனது ஸ்போர்ட்ஸ் பிராவை எடுத்து நிக்சனிடம் நீட்டி சிரித்துள்ளார். இந்த காட்சி சோஷியல் மீடியா முழுவதும் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் மாயாவைக் கழுவி ஊத்துகின்றனர்.