பெண்கள் பின்னாலே சுற்றும் அர்னவ் … நாக்கை பிடுக்குற மாதிரி கேட்ட அருண்…

0
Follow on Google News

பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே துடித்து போகிறார் அர்னவ், ஆண்கள் அணியினர் அனைவரும் டிஸ்கஸ் செய்து கொண்டிருக்கும் பொழுது அர்னவ் மட்டும் வராமல் படுத்துக்கொண்டார், இப்படி பிக் பாஸ் வீட்டில் ஆண்களை பார்த்தாலே அர்னவ் வுக்கு ஒரு அலர்ஜியோ என்னமோ தெரியவில்லை பெண்களோடு தான் அதிக விரும்பி பேசி வருகிறார்.

மேலும் ஆண்கள் அணியினர் பெண்கள் மீது உள்ள கோபத்தை விட அர்னவ் மீது அதிக கோவத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. அர்னவ் கிச்சனில் இருக்கும் பொழுது அன்சிதாவும் சுனிதாவும் ஒரு கப் சுடுதண்ணீர் மட்டும் அர்னவ் கிடைக்குமா என்கிறார்கள். பெண்களுக்கு ஒன்று என்றால் துடித்து ஓடோடி உதவி செய்யும் அர்னவ் உடனே சுடு தண்ணீர் போட்டு கொடுத்திருக்கிறார். இப்படி ரூல்ஸை ஃபாலோ செய்யாமல் சுடுதண்ணி அர்னவ் போட்டு கொடுப்பதை தீபக் பார்த்து விடுகிறார்.

இதை தீபக் அப்படியே சென்று பாய்ஸ் அணியினரிடம் போட்டு கொடுத்து விட்டார் உடனே. பாய் அணியினர் அர்னவ்வை பேசுவதற்கு அழைத்தார்கள், அதற்கு என்னால் எல்லாம் இப்போது வர முடியாது நான் ஒர்க்அவுட் செய்ய வேண்டும் என்று அர்னவ்சொல்ல , அதற்கு வா உன்னைப்பற்றி தான் புகார் வந்துள்ளது என்று பாய்ஸ் அணியினர் அழைத்தனர். உடனே நான் என்ன செய்தேன் என்று அர்னவ் கேட்க.

காலையில் சுடு தண்ணீர் எதற்காக பெண்களுக்கு கொடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அர்னவ் சுனிதாவிற்கு தொண்டை பிரச்சனை இருந்தது அதனால்தான் சுடு தண்ணீர் கொடுத்தேன் என்கிறார் அர்னவ். அதற்கு அன்சிதாவுக்கு எதற்கு சுடுதண்ணீர் கொடுத்த என்று ஆண்கள் அணியினர் கேட்கிறார்கள், ஆமாம் அவருக்கும் லைட்டா தொண்டை வலி என்று சொன்னாங்க அதனாலதான் கொடுத்தேன் என்கிறார் அர்னவ்.

ஏன் மற்ற பெண்களுக்கெல்லாம் தொண்டை வலிக்கலையா? தண்ணீர் கொடுக்கலையா என ஆண்கள் அணியினர் கேட்க இதன் பின்பு அடக்கி வாசிக்க ஆரம்பித்தார் அர்னவ். இதனை தொடர்ந்து தர்ஷா குப்தா கோட்டை தாண்டி சென்று விட்டார், இதை தட்டி கேட்க வேண்டிய அர்னவ் எதற்காக இந்த கோட்டை தாண்டி சென்றீர்கள் என்று கேட்க. அதற்கு அங்கிருந்த பெண்கள் அனைவரும் ஆண்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறீர்கள் பாவம் இந்த பொன் தனியாக இருக்கிறது அதனால் தானே அர்னவ் அவள் வந்தால் என்று பெண்கள் கேட்க.

அதற்கு அர்னவ் நானும் தர்ஷா குப்தா கூட பேசிகிட்டு தான் இருக்கேன். இம்புட்டுக்கும் என்னுடைய அணியில் இருக்கிற அனைவரும் தர்சா கூட யாரும் பேசக்கூடாது சொல்லி இருக்காங்க அதையும் மீறியும் தான் நான் பேசிகிட்டு இருக்கேன் என்று ஆண்கள் அணிக்குள் பேசிய ஒரு விஷயத்தை பெண்களிடம் அப்படியே போட்டு உடைத்து விட்டார் அர்னவ் . உடனே தர்ஷகுப்தா என்னப்பா ரஞ்சித் அண்ணனிடம் காலைல பேசுறேன் அவரு மூஞ்சியை திருப்பிட்டு போறாரு என்றதும்.

உடனே அதெல்லாம் பத்தி கவலைப்படாத தர்ஷா என்று சில அறிவுரை அன்பாக தெரிவிக்கிறார். இந்த நிலையில் அர்னவ் சொன்ன விஷயத்தை அப்படியே சென்று அனைத்து ஆண்களிடமும் போட்டு உடைத்து விட்டார் தர்ஷா. நீங்க எல்லாரும் என்கிட்ட பேசாமல் மைண்ட் டார்ச்சர் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கீங்க என்னிடம் அர்னவ் எல்லாத்தையும் சொல்லிவிட்டார் என்று போட்டுவிட்டார் தர்சா.

உடனே அர்னவ்வை தேடுகிறார்கள் ஆண்கள் அணியினர். அப்போது ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஏன் தர்சாவிடம் இந்த விஷயத்தை சொன்ன என்று கேட்க, ஒரு வழியாக மலுப்பு அர்னவ் முயற்சி செய்தாலும் மொத்த ஆண்கள் அணியினரும் ஒன்று சேர்ந்து ஒரு டீமுக்குள் டிஸ்கஸ் செய்ததை எப்படி நீ அந்த பெண்ணிடம் சொன்ன என்று ரவுண்டு கட்டி கும்முகிறார்கள்.

இதனால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார் அர்னவ், ஆனாலும் அருண் பிரசாத் விடுவதாக இல்லை நாக்கை பிடுங்குவது போன்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அர்னவ்வை வெச்சு செஞ்சு விட்டார் அருண் பிரசாத். இந்நிலையில் அர்னவ் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here