ஓவரா துல்லிய ஜாக்லினை கிழித்த தொங்கவிட்ட அன்ஷிகா… பிக் பாஸ் உள்ளே குழாய்யடி சண்டை…

0
Follow on Google News

பிக் பாஸ் வீட்டில் நாமினேஷனில் ஃப்ரீ பாஸ் ஒன்று தருவதாக பிக் பாஸ் தெரிவித்துள்ளார். ஆண்கள் அணி பெண்கள் அணி இரண்டு அணியிலும் ஒருவர் இந்த பாசை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஆண்கள் அணி – பெண்கள் அணி இரு அணிகளும் கலந்து பேசி யாரு பெஸ்ட் என்று தெரிவிக்க வேண்டும் என தெரிவித்த பிக் பாஸ் அதற்கு சில விதிமுறைகளையும் கொடுத்தார். தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்கள் நாலு காரணங்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஒன்று அவருடைய கேரக்டர்ஸ், இரண்டாவது அவர்கள் பிக் பாஸ் வீட்டில் எப்படி செயல்படுகிறார்கள, மூன்றாவது பிரசன்டேஷன் மற்றும் strategy என் இந்த நான்கு காரணங்கள் அடிப்படையில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஆண்கள் அணி தங்களுடைய பெர்ஃபார்மன்ஸ் காண்பித்து வாக்கு கேட்டு வருகிறார்கள். ஆனால் பெண்கள் அணியில் வழக்கம்போல் தர்சா குப்தா தன்னுடைய பெயரை தெரிவிக்க இதற்கு சௌந்தர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சௌந்தர்யா எப்படி என்னை பேசலாம் என்று தர்ஷா குப்தா அழுது ஒரு மிகப்பெரிய நாடகமே பிக் பாஸ் வீட்டிற்குள் நடத்தி விட்டார். இப்படி பல குழப்பங்களுக்கு மத்தியில் பிக் பாஸ் அழைத்து யாரை செலக்ட் பண்ணி இருக்கிறார்கள் என்று கேட்டபோது. ஆண்கள் அணி – பெண்கள் அணி இரண்டு அணிகளுமே யாரையுமே செலக்ட் செய்யப்படவில்லை. இருந்தாலும் பிக் பாஸ் சற்று கெடுபிடி காட்ட ஆண்கள் அணியில் ஒருவரை தேர்ந்தெடுப்போம் என்று முடிவு செய்து விட்டார்கள்.

அதில் நாமினேஷன் பிரீ பஸ்ஸில் ஆண்கள் அணியில் அருண் பெயர் தெரிவித்துவிட்டார்கள் ஆண்கள் அணியினர். தற்பொழுது பெண்கள் அணியினர் ஒருவரை தெரிவிக்க வேண்டும் தொடர்ந்து பிக் பாஸ் பெண்கள் அணியினரிடம் யாரை ஃப்ரீ பாஸ் நாமினேஷன் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்றால் அதற்கும் பெண்கள் அணியில் யாரும் பதில் சொல்லவில்லை. காரணம் பெண்கள் அணியில் பலரும் எங்களுக்கு வேண்டும் எங்களுக்கு வேண்டும் என்று தான் கேட்கிறார்கள்.

அதில் அன்சிகாவும் நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் எனக்குத்தான் வேண்டும் என்று தெரிவித்து விட்டார். ஆனால் பெண்கள் ஒரு வழியாக ஒன்று சேர்ந்து சௌந்தர்யாவுக்கு கொடுக்கலாம் என்று முடிவுக்கு வந்து விட்டார்கள், அதாவது சௌந்தர்யாவை பிக் பாஸ் வீட்டில் இருக்கிற அனைவரும் கார்னர் செய்ததால் சவுந்தர்யாவே காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்த பிரீ நாமினேஷன் சௌந்தர்யாவுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.

அந்த வகையில் இந்த வாரமும் சௌந்தர்யா தான் நாமினேஷன் இருக்கிறார். அதே போன்ற அடுத்த வாரமும் எப்படியும் சௌந்தர்யா நாமினேஷன்க்கு வந்து விடுவார் அதனால் சௌந்தர்யாவுக்கு பிரீ நாமினேஷன் பகொடுக்க அனைவரும் முன் வந்தாலும் அன்சிகா தனி ஒரு ஆளாக நின்று, இல்லை எனக்குத்தான் அந்த நாமினேஷன் பாஸ் வேண்டும் என்று சண்டையிடுகிறார்.

ஆனால் இதை சரி செய்ய வேண்டிய கேப்டன் சௌந்தர்யாவுக்கு கொடுத்திருக்கலாம் ஆனால் ப இருவரும் கேட்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது என்று பிக் பாஸ் இடம் தெரிவிக்கிறார் கேப்டன். இதனைத் தொடர்ந்து பெண்கள் அணியில் யாருக்குமே நாமினேஷன் பிரீ பாஸ் இல்லை என்று பிக் பாஸ் அதிரடியாக தெரிவித்துவிட்டார். ஆனால் ஆண்கள் அணியில் அருணுக்கு நாமினேஷன் பாஸ் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

பிக் பாஸ்ன் இந்த முடிவு பெண்கள் அணியில் இருக்கும் அன்சிகாவுக்கும் தர்ஷாவுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது, காரணம் நமக்கும் கிடைக்கல யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கின்ற ஒரு மகிழ்ச்சி தான் இவர்களுக்கு. இதிலிருந்து பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சௌந்தர்யாவுக்கு நாமினேஷன் ப்ரீ பாஸ் தரவேண்டும் என்று பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரல் எழுப்ப.

அன்சிகா மற்றும் எதிர்ப்பு தெரிவித்தால் கடைசியில் பிக் பாஸ் யாருக்குமே இல்லை என்று சொன்ன பின்பு அன்சிகா பெண்கள் அணியில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குருபிசம் செய்கிறீர்கள் என்று கொந்தளித்து விட்டார். இதனை தொடர்ந்து ஒட்டுமொத்த பெண்களும் ஒன்று சேர்ந்து அன்சிகாவுக்கு எதிராக பேசினாலும் சிங்க பெண்ணாக ஒட்டுமொத்த பெண்களையும் எதிர்த்து நீங்க குரூப்பிசம் தான் பண்றீங்க என்று போல்டாக பேசுகிறார் அன்ஷிகா.

இடையில் இதுதான் கேப்பில் கிடா வெட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம், இந்த கேப்பில் உள்ளே புகுந்து நம்ம ஹைலைட் ஆயிருவோம் என்று உள்ளே புகுந்த ஜாக்லின். அன்சிகா நீங்கள் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று ஜாக்குலின் தெரிவித்ததும் உடனே கோபத்தில் கொந்தளித்த அன்ஷிகா நான் அப்படித்தான் பேசுவேன் என்ன தடுக்க நீ யாரு.? போ என்று அன்ஷிகா எகிறி அடிக்க வாயை மூடிக் கொண்டு ஜாக்ளின் கடந்துவிட்டார், கடைசியில் இந்த அவமானம் ஜாக்லீனுக்கு தேவை தானா என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here