விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 துவங்கப்பட்ட நாளில் இருந்தே காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. முதலில் 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்த நிலையில் அதன் தொடர்ச்சியாக மேலும் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களாக களம் இறங்கி உள்ளனர். இதனால் பிக் பாஸ் வீடு ரணகளமாக இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் மணி ரவீனா ஒரு பக்கம் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில் இப்போது புதிய காதல் ஜோடியாக மாறியுள்ளனர் நிக்சன் – ஐஷு இருவரும். சமீபத்தில் இவர்கள் இருவரும் மைக்கை கழட்டி விட்டு ரொமான்டிக்காக பேசி முத்தம் கொடுத்த வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில் ஒரு பக்கம் ஐஷு இருக்க, மறுப்பக்கம் கண்ணாடிக்குள் இருக்கும் நிக்சனைப் ஐஷு கிஸ் அடிக்க முயற்சிக்கிறார் ஆனால் கண்ணாடி தடுக்கிறது.
கடந்த 6 பிக் பாஸ் சீசனை விட இது வேற லெவல் ரொமான்டிக் ஆக இருந்தது என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் ஸ்மோக்கிங் ஏரியாவிற்குள் சென்று விட்டு அங்கே பேசுகின்றனர். அங்கு கேமரா மைக் கிடையாது. எனவே நமக்கு சில சத்தம் மட்டுமே கேட்க்கும். அதன் படி அவர்கள் ஏதோ முத்தம் கொடுப்பது போன்ற சத்தம் வருவதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உண்மையில் அது லைட்டர் சவுண்ட் தான். ஆனால் கேமரா இல்லாததால் வேறு ஏதும் நடக்குதா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த காட்சி சிலரை முகம் சுளிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதை பற்றி ஐஷுவின் பெற்றோர் கேட்டால், சேனல் தான் அப்படி பண்ண சொன்னாங்கனு சொல்லிடு என நிக்சன் பல திட்டங்களையும் போட்டு வருகிறார். ஆரம்பத்தில் நிக்சன் தனக்கு தம்பி மாதிரி என கூறி வந்த ஐஷூ, போகப்போக டிராக் மாறி சென்றுவிட்டார்.
ஐஷூ தான் காதலிப்பதை இதுவரை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் நிக்சன் தீவிரமாக காதலித்து வருகிறார். ஐஷூ தன் காதலை வெளிப்படுத்தாததற்கு காரணம், அவருக்கு ஏற்கனவே வெளியில் ஒரு ஆள் இருக்கிறதாம். அதை நிக்சனிடம், எனக்கு வெளியே காதலர் இருக்கிறான் என்று ஐசுவே தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி பேசும்போது ஐஷுவை விளாசி இருக்கிறார். தம்பி தம்பி என சொல்லிவிட்டு இப்போது இப்படி செய்வது கேவலமாக இருக்கு என கூறி இருக்கிறார். அண்ணன் தம்பி உள்ளிட்ட உறவு முறைகளையே கேவலப்படுத்துவது போல இருக்கிறது என்றும் சனம் ஷெட்டி தாக்கி பேசி இருக்கிறார். நாளுக்கு நாள் ஐஷூ – நிக்சன் இடையேயான நெருக்கம் அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் ஐஷுவின் தந்தை சில நாட்களுக்கு முன்பு ஐஷுவின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு ஒரு நபர்,இவளை பார்த்தாலே இரிடேடிங்கா இருக்கு கமெண்ட் செய்து இருக்கிறார். பதிலுக்கு ஐஷுவின் தந்தை, நீங்கள் 24/7 மணி நேர காட்சிகளை பாருங்கள் உங்களுக்கு பிடித்து விடும் என்று கூறி இருக்கிறார். முன்னதாக ரவீணாவுடன் சேர்ந்து கடலை போடுவதையே முழு வேலையாக வைத்திருந்தார் மணி. அதனால் மணி அல்லது ரவீணாவை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றுமாறு கூறி வந்தார்கள் பார்வையாளர்கள்.
இந்நிலையில் நிக்சன், ஆயிஷா நடந்து கொள்வதை பார்த்த பிறகு மணியும், ரவீணாவும் இருந்துவிட்டு போகட்டும் என்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் இந்த வாரம் ஐஷுவை தான் வெளியேற்ற வேண்டும் என பார்வைாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பார்க்க வார இறுதி நாட்கள் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.