பிக் பாஸ் வீட்டில் மலர்ந்தது காதல்… அண்ணே – தங்கச்சின்னு சொல்லிட்டு இப்படியா… அடே எல்லை மீறி போறீங்க…

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 8 தொடங்கியது முதலே எந்த ஒரு விறுவிறுப்பு இல்லாமல் சென்று கொண்டு இருக்கையில் தற்பொழுது ஒரு காதல் மலர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு பெண்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கும் பொழுது தர்ஷாகுப்தா ஜாக்குலினிடம் எனக்கு இந்த வீட்டிற்குள் முதல் முதலில் வந்தபோதே ஒருவரை ரொம்ப பிடித்திருந்தது, அவரிடம் நான் பேசி பழகிய பின்பு தான் தெரிந்தது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று.

அதனால் நான் அதை அப்படியே விட்டுவிட்டேன், எனக்கு காதல் எல்லாம் இல்லை. இருந்தாலும் எனக்கு அவரை ரொம்ப பிடித்திருந்தது என்று பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர் சத்யாவை பற்றி ஜாக்குலினிடம் தெரிவித்து இருந்தார் தர்ஷா குப்தா. சத்யாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது என்று தர்ஷா குப்தாவுக்கு தெரிந்திருந்தாலும் கூட சத்யாவுடன் அவர் நெருங்கி பழகி வருவதே பிக் பாஸ் வீட்டிற்குள் பார்க்கலாம்.

தனியாக அமர்ந்து அவருடன் பேசுவது அவருடன் சிரித்து விளையாடுவது, இரவு நேரங்களில் அவரவர் ஒவ்வொரு பக்கம் பேசிக் கொண்டிருந்தால் சத்யாவும் தர்ஷா குப்தாவும் வீட்டிற்குள் தனியாக அமர்ந்து பேசுவதை பார்க்க முடியும். ஆனால் சத்யா மிகவும் ஜாலியாக மற்ற பெண்களிடம் எப்படி பேசுகிறாரோ அதேபோன்றுதான் தர்ஷா குப்தாவிடம் பேசுகிறார். குறிப்பாக தர்ஷா குத்தாவிடம் தங்கச்சி தங்கச்சி என்று தான் பேசுகிறார் சத்யா.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது ஒரு டாஸ் கொடுக்கப்பட்டது. அதில் சமைக்க வேண்டும் என்றால் செயின் போன்று பெண்கள் அனைவரும் வரிசையாக ஒருவரை ஒருவர் பிடித்து நிற்க வேண்டும் என உள்ளே விட்டு இருப்பார்கள். கடைசியாக ஜாக்லின் சமைத்து கொண்டு இருப்பார், அப்படி ஜாக்குலின் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே எல்லாரும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த இடத்தில் திடீரென்று சத்யா என்ட்ரி கொடுத்தார் அப்போது அங்கு இருந்தவர்களிடம் விடுங்கப்பா என் தங்கச்சிய, நான் பாத்துக்குறேன் என்று தர்ஷா குப்தாவை பற்றி சொல்லிவிட்டு சத்யா சென்று விடுவார், உடனே அங்கு இருந்த தர்ஷிகா தங்கச்சியா ஐயோ தங்கச்சி அண்ணனா இதைக் கேட்டா தர்ஷா குப்தா அவ்வளவுதான் என்ன செய்யப் போகிறார் தெரியலையே, என்று நேர தர்சா குப்தாவிடம் உன்னை தங்கச்சி என்று சத்யா சொல்லிவிட்டார் என தெரிவிக்கிறார் தர்ஷிகா.

அதற்கு தர்ஷா குப்தா ஆமாம் என் அண்ணன் தான் என்று சொல்லி கடந்திருக்கலாம் ஆனால் அதற்கு சிரித்துக் கொண்டே எல்லாரும் கூட்டமாய் இருப்பதால் சத்யா அப்படி சொல்லி இருப்பார் என்று தர்ஷா குப்தா தெரிவிக்கிறார். இதன் பின்பு லிவிங் ரூம் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது அனைவரும் நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பெண்கள் அணியினர் பாட்டு பாடுகிறார்கள், அதற்கு தர்ஷா ஆடுகிறார்.

அப்போது பெண்கள் அணியினர் முத்துக்குமாரை போய் டான்ஸ் ஆடுங்க என்கிறார்கள். உடனே தர்சா குப்தா முத்துக்குமார் நீங்க சுனிதா உடன் டான்ஸ் ஆடுங்க என்கிறார். உடனே அங்கிருந்து பெண்கள் அணியினர் அப்படியானால் தர்ஷா நீ சத்யா கூட டான்ஸ் ஆடு என்று சொன்னவுடன் உடனே தர்ஷா வாங்க சத்யா வாங்க டான்ஸ் ஆடுவோம் என்று அழைக்கிறார்.

உடனே முத்துக்குமாருடன் டான்ஸ் ஆடு என்று சொன்னால் முத்துக்குமாரை சுனிதாவுடன் ஆட சொல்லுகிறார். ஆனால் சத்யாவுடன் ஆடு என்றதும் சத்யா வா என்கிறார் தர்ஷா குப்தா என்று பிக் பாஸில் உள்ளே இருக்கும் பெண்கள் சிலர் கலாய்க்கிறார்கள். இதன் பின்பு தர்ஷா குப்தா சத்யா இருவரும் டான்ஸ் ஆடுகிறார்கள், இதை பார்க்கும் பொழுது என்னடா நடக்குது பிக்பாஸ் வீட்டில் ஏதோ ஒரு காதல் மலருது ஆனால் அது உண்மையான காதல் அல்ல கண்டென்டுக்கான காதல் என்பது மட்டும் தெரிகிறது.

அதாவது எப்படி ஓவியா ஆரவ்வை விரட்டி விரட்டி லவ் பண்ணி தன்னை மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக ஆக்கினாரோ, அதேபோன்று தர்சா குப்தா, சத்யா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்தாலும் கண்டன்டுக்காக இப்படி விரட்டி விரட்டி லவ் பண்ணுகிறார் என்கின்ற விமர்சனமும் இருந்து வரும் நிலையில், இந்த காதல் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.