பிக் பாஸ் தமிழ் 7 ஆவது சீசன் சுவாரஸ்யமாக 75 நாட்களை நடந்து இருக்கிறது. இதையடுத்து மிக்ஜாம் புயல் காரணமாக பொது மக்கள் மின்சாரம் இல்லாமலும், தொலைத் தொடர்பு இல்லாமலும் தவித்து வரும் நிலையில் அவர்களால் வாக்களிக்க முடியாததை கருத்தில் கொண்டு கடந்த வாரம் எலிமினேஷனை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வாரம் விஷ்ணு, விஜே அர்ச்சனா, நிக்சன், கூல் சுரேஷ், தினேஷ் மற்றும் அனன்யா ராவ் உட்பட ஆறு போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில் வார நடுவே அனன்யா வெளியே அனுப்பட்டார். நிக்சன் மற்றும் கூல் சுரேஷ் குறைவான வாக்குகள் பெற்று உள்ளார். இரண்டு பேரும் ஸ்டார்ங் போட்டியாளர்கள் என்பதால் யார் இதில் இருந்து வெளியே செல்வார்கள் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில் பிக் பாஸ் 7 ஆவது சீசனில் இருந்து இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்றார் என்ற அடிப்படையில் கூல் சுரேஷ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பட்டு உள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் கூல் சுரேஷ் தனக்கு பிக் பாஸ் வீட்டில் விளையாட விருப்பம் இல்லை என சொல்லி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்பினார்.
மேலும் சுவர் ஏறி வெளியே குதித்து செல்லவும் முயற்ச்சி செய்தார். பிறகு அவரை பிக் பாஸ் அழைத்து ஆலோசனை கூறி விளையாட்டை தொடர வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி வனிதா ஒரு புதிய தகவலை பகிர்ந்துள்ளார். இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அந்த சீசனின் டிஆர்பி ராணி வனிதா எனக் கூறினால் அது மிகையாகாது.
மூன்றாவது சீசனை தொடர்ந்து சிம்பு தொகுத்து வழங்கிய அல்டிமேட் சீசனிலும் வனிதா பங்கேற்றுக்கொண்டார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக கலந்து கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாக்குகள் அடிப்படையில் ஜோவிகா விஜயகுமார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார். இத்தகைய சூழ்நிலையில் தற்போது வனிதா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பி ஆர் மார்க்கெட்டிங் செய்கிறார்கள். இதனால் மக்களின் ஓட்டு மதிப்பை இழக்கிறது. ஏனென்றால் பிஆர் டீம் அவர்களுக்கு தேவையான போட்டியாளருக்கு அதிகம் ஓட்டு வருமாறு செய்கின்றனர் எனக்கு இதுவரை பத்தாயிரம் மெசேஜ் வந்திருக்கும். அவை அனைத்தும் பி ஆர் மார்க்கெட்டிங் இடம் இருந்து தான். பொதுவாகவே எனக்கு அதிகம் மெசேஜ் வரும்.
ஆனால் இந்த பிக் பாஸ் சீசனில் அது மிகவும் அதிகமாக உள்ளது. அதுவும் ஜோவிகா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றாள். அதனாலேயே எனக்கு நிறைய மெசேஜ் வந்தது. நாங்கள் பி ஆர் செய்கின்றோம் என்று பலர் மெசேஜ் செய்தனர். உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் சிலரும் இந்த பி ஆர் ஐ பயன்படுத்தி தான் உள்ளே இருக்கின்றனர். பொதுவாக நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் விருப்பப்பட்டு ஓட்டு போடுவார்கள். ஆனால் இந்த பி ஆர் டீம் அந்த ஓட்டின் மதிப்பை இழக்க செய்கின்றனர்.
அவர்களின் ஓட்டுப் படியே போட்டியாளர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் நடக்கும் விவாதங்களுக்கும் இவர்கள்தான் காரணம். அர்ச்சனா இவர்களை நன்றாக பயன்படுத்தியுள்ளார். இந்த வாரம் ஈஸ்வரி கேரக்டராக மாறி அவர் மிகவும் அருமையாக செய்திருந்தார். ஆனால் அவர் வீட்டிற்குள் வந்ததை மாயா பூர்ணிமாவை பிரிக்கத்தான். அப்படி என்ன கோபம் என்று எனக்கு தெரியவில்லை. பி ஆர் டீம் வைத்து அர்ச்சனா இவ்வளவு லீடிங்கில் ஓட்டு வாங்கி இருக்கிறார். எனவே விஜய் டிவி மக்கள் ஓட்டு எது, பிஆர் ஓட்டு எது என்று ஆராய்ந்து முடிவை எடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்