விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த முறை விஜய் டிவியில் ஒழிப்பாரப்பான பிக் பாஸ் சீசன்களில் முதல் சீசன் மட்டுமே மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது, அடுத்தடுத்து ஒளிபரப்பான சீசன்கள் டிஆர்பி ரேட்டிங் குறைந்து விஜய் டிவிக்கு எதிர்ப்பார்த்த லாபத்தை பெற்று தரவில்லை.
இந்நிலையில் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆறாவது சீசனுக்கு முதல் சீசனில் என்ன வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பும் இந்த சீசனுக்கும் இம்முறையும் கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளம் மூலம் வீடியோ வெளியிட்டு நன்றாக சம்பாரித்து வரும் ஜிபி முத்து மனைவி ஒரு மாற்றுத்திறனாளி, இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கூட்டு குடும்பமாக தன்னுடைய தம்பி குழந்தைகள் உட்பட தன்னுடை குழந்தைகள் என அனைவரையும் படிக்க வைத்து அவர்களுக்கு தேவையான அணைத்து செலவுகளையும் ஜிபி செய்து வருகிறார்.இது தனக்கு சுமையாக தெரியவில்லை மகிழ்ச்சியாக இருக்கிறது என ஜிபி முத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஜி.பி.முத்து இருந்த போது, அவருடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்கின்ற தகவல் அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்த தகவல் அறிந்த ஜி.பி.முத்து உடனே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி என்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க தொடங்கினார். ஜி.பி.முத்து வெளியேறினால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி ரேட்டிங் மிகப்பெரிய அளவில் குறைந்துவிடும் என்பதால், பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்துவை இருக்க வைக்க அவரிடம் தொடர்ந்து விஜய் டிவி நிர்வாகம் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
ஆனால், பணமா.? பாசமா.? என்கிற நிலை வரும்பொழுது, ஜி.பி.முத்து பிடிவாதமாக எனக்கு பணம் முக்கியம் இல்லை, என்னுடைய குடும்பம் தான் முக்கியம் என தன்னுடைய மகனைப் பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஜி.பி.முத்து. பிக் பாஸ் வீட்டை விட்டுவிட்டு ஜிபி முத்து வெளியேறிய பின்பு அந்த நிகழ்ச்சிக்கான டிஆர்பி ரேட்டிங் மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது.
இந்நிலையில பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான டிஆர்பி ரேட்டிங்கை மீண்டும் அதிகரிக்க, வைல்டு கார்ட் மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டின் உள்ளே ஜிபி முத்துவை அழைத்து வருவதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறது விஜய் டிவி நிர்வாகம். ஆனால் ஜி.பி.முத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு தன்னுடைய குடும்பத்துடன் தொடர்பு இல்லாத ஒவ்வொரு நிமிடமும் தனக்கு நரகத்தில் வாழ்வது போன்று இருந்தது என குடும்பத்தினரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அதே போன்று குடும்பத்தினரும் இனிமேல் எங்களை விட்டு பிரிந்து நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே வருவதற்காக ஜி.பி.முத்துவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம். ஆனால் தன்னுடைய குடும்பத்தை விட்டு இனி ஒரு நிமிடம் கூட என்னால் பிரிந்து பிக் பாஸ் வீட்டில் உள்ளே இருக்க முடியாது என மறுத்துவிட்டார் ஜிபி முத்து.
அனாலும், விஜய் டிவி நிர்வாகம் விடுவதாக இல்லை, விஜய் டிவி நிர்வாகத்தினர் சிலர் நேரடியாக ஜிபி முத்து வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஜிபி முத்துவிடன் பேசி சமாதனம் செய்ய முயற்சித்துள்ளார்கள், ஒரு கட்டத்தில் அதிகம் சம்பளம் தருவதாக கூட பணத்தாசையை காட்டியுள்ளார்கள். ஆனால், ஜிபி முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்கள். இருந்தாலும் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தொடர்ந்து காலில் விழாத குறையாக ஜிபி முத்துவிடம் கதறி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.