ஜோவிகா – கமல்ஹாசன் இருவருக்கும் தரமான பதிலடி கொடுத்த கோபிநாத்… கல்வி என்ன சாதாரண விஷயமா.?

0
Follow on Google News

பிக்பாஸ் போட்டியாளர்களான விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே படிப்பின் அவசியம் பற்றி நடந்த கடுமையான வாக்குவாதம் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.படிப்பு எனக்கு வரலனு நிப்பாட்டினேன். நான் கஷ்டப்பட்டேன்” என ஜோவிகா தெரிவிக்க.ஜோவிகாவிடம் நடிகை விசித்ரா தமிழில் எழுதிக் காட்டச் சொல்கிறார். அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் வரலை, அதனால நான் எழுதமாட்டேன். வராத ஒன்றை எதற்கு பண்ணனும்? என்று கேட்கிறார்.

மேலும், ஒன்பதாம் வகுப்போடு எனக்கு படிப்பு வரவில்லை என்று படிப்பை நிறுத்திவிட்டேன். படிப்பு மட்டும் தான் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை. அதை தாண்டி நிறைய திறமைகள் உள்ளன. அந்த திறமையின் படி நம் வாழ்க்கையை கொண்டு போக வேண்டும் என ஜோவிகா தெரிவிக்க, அதற்கு விசித்தரா, கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார், அதற்கு செம்ம டென்ஷனான ஜோவிகா, எல்லோரும் டாக்டரா போய்விட்டால் யார் தான் கம்பவுண்டர் ஆகுறது. படிச்சி தான் பெரிய ஆள் ஆகணும் என இல்லை” எனப் ஜோவிகா பேசியிருந்தார்.

இந்நிலையில் கல்வி முக்கியமா.? இல்லையா? என பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற விவாதத்திற்கு கமல்ஹாசன் என்ன தீர்ப்பு வழங்க போகிறார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்.உயிரைக்கொடுத்தாவது படிக்க வேண்டும் என்று சொல்வது முக்கியமில்லை என்று நினைக்கிறேன்.

கல்விதான் கலங்கரை விளக்கம். ஆனால், அதற்கு முதலில் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிய வேண்டும் அல்லவா?. நான் காட்டில் இருந்து கொண்டு கலங்கரை விளக்கத்தை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. கை மண்ணளவை வைத்துக்கொண்டு, இதுதான் கல்வி என்று சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது என ஜோவிகாவுக்கு ஆதரவாகவும்.

மேலும் பேசிய கமல்ஹாசன், விசித்ராவின் எண்ணத்தையும் நான் இந்த விஷயத்தில் தவறு என்று சொல்ல மாட்டேன். காரணம், அவரின் ஊரான கேரளாவில் படி படி என்று சொல்லி ஒரு தலைமுறையையே கடத்தி தேற்றி விட்டார்கள். அதன் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு முன்னுதாரணமாக அவரே இருக்கிறார். அவர் இந்த வயதில் பி.ஹெச்.டி படித்திருக்கிறார்.

ஜோவிகா எப்போது விட்டதை பிடிக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்யட்டும். அதற்காக நான் படிக்கவே வேண்டாம் என்று தோளை குலுக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் ஜோவிகா போல, எனக்கு படிப்பு வரவில்லை, என்னை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்களை, கொஞ்சம் விடத்தான் செய்ய வேண்டும். கற்றல் விதி இருக்கலாம். கற்றல் வதை இருக்கக்கூடாது. நீங்கள் சொன்னது உங்கள் நியாயம். அவர் சொன்னது அவருக்கான நியாயம்” என்று கமல்ஹாசன் பேசியது ஈயம் பூசிய மாதிரியும், பூசாத மாதிரியும், அதாவது கல்வி முக்கியமா.? வேண்டாமா.? என தெளிவாக ஒரு முடிவை சொல்லமால் அனைவரையும் குழப்பிவிட்டு சென்று விட்டார் கமல்ஹாசன்.

இந்நிலையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறியாத ஜோவிகா மற்றும், கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி சொல்ல வேண்டிய கமல்ஹாசன் ஜோவிகாவுக்கு ஆதரவாக பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நீயா நானா கோபிநாத் பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது, அதில் பேசிய கோபிநாத். படிக்காதவர்கள் தான் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார்கள், சச்சின் டெண்டுல்கர் படித்தாரா.? காமராஜர் படித்தாரா.? அவர் படித்தாரா.?ஆயா படித்ததா.?என்று நாம் கேட்கின்றோம்.

இப்படி படிக்காமல் வெற்றி அடைந்தவர்கள் 10 பேரை சொல்கிறீர்கள் 11வது ஆளா ஒரு நபரை சொல்லுங்கள் எவனும் கிடையாது. படிக்காமல் வெற்றி அடைந்தவர்கள் 10 பேரை சொல்ல முடியும் என்றால் படித்து வெற்றி அடைந்தவர்கள் 10 லட்சம் பேரை என்னால் சொல்ல முடியும், படிப்பு ரொம்ப முக்கியம் என பேசிய கோபிநாத், மேலும் காமராஜர் வந்த பிறகுதான் தமிழகத்தில் கல்வி பெரும் அளவுக்கு தலை தூக்கியது.

ஏழைப் பிள்ளைகள் படிப்பதற்கான வாய்ப்பை பள்ளியில் உருவாக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் காமராஜர்.அப்படி மதிய உணவு கிட்ட வந்த பின்பு தான் பெரும்பாலானோர் படிக்க பள்ளிக்கு சென்றனர், படிக்காமல் வெற்றி பெற்றவர்களில் முதல் இடத்தை பிடிக்கக்கூடிய காமராஜர். ஆனால் படிக்காத ஒருவர்தான் இன்று பலரும் படிக்க காரணமாக இருந்துள்ளார் எதற்காக.

படிக்காத என்னாலே இவ்வளவு செய்ய முடியும் என்றால் பிள்ளைகள் எல்லாம் படித்தால் என்ன எல்லாம் செய்வார்கள் என்கின்ற காமராஜர் கண்ட கனவு தான் இன்று இத்தனை ஆயிரம் பேர் படித்து முன் வரிசையில் அமைந்துள்ளார்கள் என்று கோபிநாத் பேசியுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கும் கத்துக்குட்டி ஜோவிகாவுக்கும் மேலும் கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி புரிய வைக்க வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய கமலஹாசன் ஒரு தெளிவான பதிலை சொல்லாமல் கடந்து சென்றதற்கும் கோபிநாத்தின் வீடியோ தரமான பதிலடியாக அமைந்துள்ளது.