ஜாக்லின் என்கிற பெயரை கேட்டதும், ராயலான பெயராக இருக்கிறது, வசதியான குடும்பத்தில் இருந்து வந்திருப்பார் என்று தான் தோன்றும், ஆனால் ஜாக்லின் குடும்பம் அப்படி இல்லை. ஸ்ரீ பெரம்பதூர் பக்கத்தில் பன்னூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஜாக்லின். இவருக்கும் 6 வயதிருக்கும் போது, அவருடைய தந்தை தன்னைத்தானே உயிரை மாய்த்துக் கொள்கிறார்.
ஜாக்குலின் வீட்டில் மூத்த குழந்தை, அவருக்கு அடுத்ததாக குழந்தையாக அவருடைய தம்பி இருக்கிறார், 30 வயதான அவருடைய தாய் கணவன் உயிர் விட்டதை தொடர்ந்து ஜாக்லின் தாயும் மன்னனை ஊற்றி தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார், ஆனால் அவர் அந்த சம்பவத்திலிருந்து காப்பாற்றப்படுகிறார், இதனைத் தொடர்ந்து தன் கணவனை இழந்தாலும் தன்னுடைய குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுக்கிறார் ஜாக்களின் தாய்.
கணவனை இழந்தாலும் இரண்டவாவது திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வந்து இருக்கிறார் ஜாக்களினின் தாய். சிறு வயதில் ஏதாவது ஒரு சுற்றுலா தளத்திற்கு ஜாக்லின் செல்வதற்கு ஆசை இருந்தாலும் குடும்பத்தின் வறுமையை காரணமாக அவர் எங்கும் செல்ல முடியாத சூழல். இந்த நிலையில் தான் படித்துத்தான் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்கின்ற ஒரு சூழல்.
ஜாக்லின் சென்னை லயோலா கல்லூரியில் பிஎஸ்சி விஸ்காம் படித்திருக்கிறார். அப்படி அவர் சென்னையில் படித்திருந்த காலகட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பக்கத்தில் உள்ள கிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், இரவு நேரங்களில் பஸ் வசதி இல்லாமல் இருட்டில் பயந்து கொண்டு நடந்தே செல்வாராம் ஜாக்லின், தன்னுடைய கடுமையான முயற்சியால் ஏர் கோஸ்ட் படித்த ஜாக்லின்.
அந்த துறையில் வேலைக்கு 40,000 சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். ஆனால் அங்கே உணவு அவருக்கு செட் ஆகல, அந்த வேலையை விட்டு விலகிய ஜாக்குலின் விஜய் தொலைக்காட்சியில், நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார் என்கின்ற போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக அவருடைய தாயாரிடம் தெரிவிக்கிறார். அதற்கு தாயார் நீ என்ன மென்டலா நல்ல சம்பளத்தில் ஏர் கோஸ்ட் ஆக இருந்த வேலையை விட்டுவிட்டு இதில் போய் கலந்து கொள்கிறாயே என்று தெரிவித்திருக்கிறார்.
இருந்தாலும் நிச்சயம் இந்த துறையில் வெற்றி பெறுவேன் என்று பத்தாயிரம் பேர் பங்கேற்ற அந்த போட்டியில் கலந்து கொண்ட ஜாக்குலின் அதில் வெற்றியும் பெற்று, கலக்கப்போவது யாரு என்கின்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இடம்பெறுகிறார். அதனை தொடர்ந்து நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெறுகிறார். அதன் பின்பு தேன்மொழி என்கின்ற சீரியலில் நடித்த ஜாக்லின் அதன் பின்பு வாய்ப்பு இல்லாமல் முடங்கி போகிறார்.
இந்த நிலையில் தொடர்ந்து விஜய் டிவியில் பெரிதாக வாய்ப்பு இல்லை, அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கடந்த மூன்று சீசனாக வாய்ப்புக்காக போராடியும் கிடைக்கவில்லை. இப்படி ஒரு காலகட்டத்தில் இந்த மீடியாவை விட்டு சென்றுவிடலாம், வேற ஒரு தொழிலை செய்யலாம் என்று ஜாக்லின் முடிவு செய்த ஒரு நேரத்தில், பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஜாக்குலினுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த போட்டியில் நிச்சயம் நான் 100 நாட்கள் இருந்து வெற்றி பெறுவேன் என்று தன்னுடைய தாயாரிடம் உறுதி கொடுத்து வந்த ஜாக்குலினை எத்தனை முறை நாமினேட் செய்தாலும் அவரை மக்கள் தொடர்ந்து வாக்களித்து ஆதரவை தெரிவித்து பிக் பாஸ் வீட்டில் தங்க வைத்து வந்தனர்.
அந்தவகையில் மக்களின் ஆதரவு பெற்ற ஒரு போட்டியாளரை விஜய் தொலைக்காட்சி டாஸ்க் என்ற சூழ்ச்சியின் மூலம் வெளியேற்றி விட்டது என்று மக்களின் ஆதங்கமும் வெளிப்பட்டு கொண்டிருக்கையில், சிறுவயதில் இருந்தே தன்னுடைய கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தொடர்ந்து வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் ஜாக்குலினை நீங்களும் பாராட்டலாமே