அன்று பிரதீப்.. இன்று ஜாக்குலின்… திட்டமிட்டு ஏமாற்றும் பிக் பாஸ்…

0
Follow on Google News

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜாக்லின் வெளியேற்றப்படும் பொழுது அவர் கதறி அழுது காட்சியை பார்த்த பிக் பாஸ் ரசிகர்களையும் கதறி அழ வைத்துள்ளது. இந்நிலையில் ஜாக்குலினுக்கு நடந்த அநீதிக்கு எதிராக பலரும் பிக் பாஸ் குழுவினரையும் விஜய் டிவியையும் சமூக வலைதளத்தில் கழுவி கழுவி ஊத்தி வருகிறார்கள். ஜாக்குலின் திட்டமிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.

அதாவது அந்த டாஸ்க்ல் பணப்பெட்டியை எடுத்துவிட்டு 35 செகண்ட் குள் ஜாக்லின் ஓடி வந்து விட வேண்டும், அப்படி அவரால் முடியாது என்றால் பாதியிலேயே கூட வந்து விட்டாலும், அவர் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கலாம், ஆனால் எப்படியும் அந்த பணப்பெட்டியை எடுத்துவிட்டு திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையில் ஜாக்லின் ஓடிச்சென்று, அந்த பணப்பெட்டியை எடுத்து விட்டு திரும்பினார்.

ஆனால் இரண்டு நிமிடம் அல்லது ஒன்றரை நிமிடம் தான் ஜாக்குலின் தாமதமாக வந்திருப்பார், இதற்காக மக்கள் ஆதரவு பெற்ற ஒரு போட்டியாளரை ஒரு கடுமையான டாஸ்க் மூலம் திட்டமிட்டு விஜய் தொலைக்காட்சியும் பிக் பாஸ் டீமும் வெளியேற்றியுள்ளது என்கின்ற குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் தற்பொழுது சமூக வலைதளங்கில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மக்கள் ஒருவர் மீது அவ்வளவு எளிதாக அன்பை வைத்து விடமாட்டார்கள், அப்படி அவர்கள் மீது அன்பை வைத்து விட்டால், அவர்களை விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள், அது மாதிரி தான் கடந்த பிக் பாஸ் சீசனில் பிரதீப் மீது மக்கள் பேராதரவு கொடுத்து, பிரதீப்புக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த அநீதியை தட்டி கேட்டார்கள், இதுவே அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி தந்தது.

இந்நிலையில் அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு என்ன அநீதி நடந்ததோ.? அதுதான் தற்பொழுது ஜாக்குலீனுக்கும் நடந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜாக்களின் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று ஒரு பக்கம் கடுமையாக போராடினாலும் மறுபக்கம் கண் கலங்க வைக்கும் அவருடைய குடும்ப சூழல் பலருக்கும் தெரியாது.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஜாக்குலின் மற்றும் அவருடைய தம்பியையும் , அவர் தாயார், மிகக் கடுமையாக போராடித்தான் வளர்த்து இந்த லெவலுக்கு கொண்டு வந்திருக்கிறார். ஏர்கிராஃபில் வேலை செய்து கொண்டிருந்த ஜாக்லின் மீடியா ஃபீல்டுக்கு வந்த ஜாக்குலின், மிகக் குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக உருவெடுத்தார்.

இப்படி ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த வாழ்க்கையிளையும் கடுமையாக போராடி வந்த ஜாக்குலின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய கடுமையான போராட்டம், அவருடைய இயல்பான குணம் தான் மக்களை, இந்த அளவுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

ஆனால் மக்களின் ஈர்ப்பும் ஆதரவு முக்கியமில்லை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் யார் வெற்றி பெற வேண்டும். இந்த வீட்டில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது நாங்கள்தான் என்று திட்டமிட்டு , எப்படி கடந்த சீசனில் பிரதிப்பை வெளியேற்றி பிக் பாஸ் நிகழ்ச்சி அநீதியை விளைவித்ததோ, அதோ போன்று ஜாக்ளினை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ஒரு டாஸ்கை வைத்து ஜாக்லி னை வெளியேற்றி அநீதி இழைத்து விட்டது பிக் பாஸ் என்கின்ற குரல் தற்பொழுது ஓங்கி ஒலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here