செவிலியராக பனி புரிந்து 2017ம் ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானார் ஜூலி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில், சென்னையில் மெரினா பீச்சி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு, அப்போது முதல்வராக இருந்த ஒ.பன்னீர் செல்வம், மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக ரைமிங்கா கொடுத்த கோஷம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஜூலி என அழைக்கப்பட்ட இவர் பெரும் பாராட்டையும், நன் மதிப்பையும் பெற்றார், இதனை தொடர்ந்து தனக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழை பயன்படுத்தி விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதம் இவருக்கும் பெரும் அவமானத்தையும், கெட்ட பெயரை மக்கள் மத்தியில் பெற்று தந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி வீட்டுக்குள் சென்ற உடன் அனைவரும் ஜூலியை ஒதுக்கி வைத்து பழக, நடிகர் பரணி மட்டும் ஜூலிக்கு ஆதரவாக இருந்தார், ஆனால் ஒரு கட்டத்தில் தனக்கு உதவியாக இருந்த பரணிக்கு எதிராக ஜூலி திரும்பினார். ஜூலியின் இந்த துரோகம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு அவர் மீது கடும் கோவத்தை ஏற்படுத்தியது மேலும், நடிகை ஓவியாவுக்கு எதிராக இவர் பேசிய பொய் மொத்தத்தில் ஜூலி என்றாலே பித்தலாட்டம் செய்யக்கூடிய நேர்மையற்ற பெண் என்கிற முத்திரை விழுந்தது.
இதனை தொடர்ந்து பெரும் சர்ச்சைகளுக்கு பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து முகத்தை துணியால் முட்டிக்கொண்டு யார் கண்ணில் படாதபடி இரு சக்கர வாகனத்தில் வெளியில் வந்த ஜூலி சிறிது காலம் வெளியில் தலை காட்டாமல் தலைமறைவாக இருந்தார், இதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜூலி வெளியே வரும் போது. அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மக்கள் உங்கள் மீது கடும் கோவத்தில் இருக்கின்றனர், சில காலம் அமைதியா பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டர்.
இதனை தொடர்ந்து தன்னை விளம்பரம் படுத்தி கொள்ள ஏதேனும் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் செயல்பட்டு வரும் ஜூலி தற்போது ஒரு ஆணுடன் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் அந்த ஆண் மேலாடை இல்லாமல் இருக்கின்றர், அவர் பின்புறம் முகத்தை மட்டும் புகைப்படத்தில் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் ஜூலி.
இது இந்த புகைப்படத்தை வெளியிட்டு இதில் இருப்பது என் உயிர் என்றும், இவர் எனக்கு மற்றொரு அம்மா, என்னுடைய சகோதரர் என குறிப்பிட்டுள்ளார், இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பிக் பாஸ் ஜூலி தன்னை அவ்வப்போது விளம்பரம் செய்து கொள்ள இது போன்று புகைப்படம் வெளியிடுவது வழக்கம், ஆகையால் இது ஓன்று பெரிய விஷயம் இல்லை என்கின்றனர் ஜூலியின் அட்டூழியத்தை தொடர்ந்த பார்த்து வரும் வலைதளவாசிகள்.