அரைவேக்காட்டு பெண்ணியப் படம்… பா.ரஞ்சித், மாரிசெல்வராஜுக்கு நச் பதிலடி கொடுத்துள்ளார் பெண் எழுத்தாளர்..

0
Follow on Google News

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்பொழுது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்த படத்திற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் என கலவையான விமர்சனங்களுடன் திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

ஆனால் தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவற விட்டுவிட்டது என பல திரைப்பட விமர்சனங்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக வந்திருந்த கமலஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படம் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசியது மாரி செல்வராஜுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

பொதுவாக ஒரு படத்தின் இயக்குனர் சர்ச்சைக்குறிய வகையில் பேசும்போது, அது அந்த படத்தின் இயக்குனரின் படத்திற்கு விளம்பரமாக அமையும், ஆனால் மாரி செல்வராஜ் சர்ச்சை பேச்சு மாமன்னன் படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்று கூட சொல்லலாம். இந்த நிலையில் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் சினிமா மூலம் சொல்ல வரும் கருத்தியல் குறித்து தற்பொழுது கடும் விவாத பொருளாக மாறி உள்ளது.

தங்களை ஜாதி ஒழிப்பு போராளியாளராக காட்டிக் கொள்ளும் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களின் கருத்தியல் இந்த சமூகத்திற்கு உண்மையில் ஜாதி ஒழிப்பை வழி வகுக்குறதா.? அல்லது அழிந்து கொண்டிருக்கும் ஜாதியை மீண்டும் கொம்பு சீவும் வகையில் அவர்கல் படம் எடுக்கிறார்களா.? என்கின்ற விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் மாமன்னன் படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் தேவர் மகன் படம் குறித்து சர்ச்சை கூறிய வகையில் மாரி செல்வராஜ் பேசியது கூட அது அவர் படத்திற்கான விளம்பர யுக்தி தான் என்றும் கூட மாரி செல்வராஜ் மீது கடும் விமர்சனம் எழுந்து வந்தது. இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் லீனா மணிமேகலை, இயக்குனர்கள் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் சாதிவெறியர் பட்டம் பெறுவது ரொம்ப எளிது, மாரி செல்வராஜ் அல்லது பா.ரஞ்சித் படங்களை விமர்சித்தால் போதும். நீங்கள் உங்கள் வாழ்க்கையையே சாதி ஒழிப்பிற்கு ஒப்புக் கொடுத்திருந்தாலும் அதுதான் கெதி. வெற்றிமாறனின் ‘அசுரனை’ விமர்சித்தால் வராத பட்டமும் அவதூறும் ‘கர்ணன்’ போன்ற சாதி ஒழிப்பென்ற பெயரில் – அல்னிமேட்டாக ஆண்களை மிகைப்படுத்துவது- வன்முறை – சாதிப்பெருமை பேசும் படத்தை குறித்து பேசும் போதும், ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற பாசாங்கான அரைவேக்காட்டு பெண்ணியப் படத்தைக் குறித்து பேசும்போதும் வருகிறதென்றால் எங்கே பிரச்சனை என்பது அப்பட்டம்.

Anti Caste warrior பட்டம் பெறுவதும் எளிது. கலை நேர்மையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு இவர்கள் செய்வதையெல்லாம் வானளாவ புகழ்ந்துவிட்டால் போதும். Very easy. களத்தில், கருத்தியலில் எல்லாம் எதுக்கு வேலை செய்யனும். இன்னும் பத்து மு்ப்பது வருடங்கள் கழித்து ஒரு அருந்ததியரோ, குறவரோ, புதிரைவண்ணாரோ வந்து நான் பேசுவதையெல்லாம் பேசுவார்கள், பேச வேண்டும்.

மற்றபடி வியாபார சினிமாவில், லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் சந்தையில் எல்லாமே சரக்கு தான். அதில் சாதி ஒழிப்பு பேசுகிறேன், புரட்சி செய்கிறேன், பொன்னுலக பூமி படைக்கிறேன் என்றெல்லாம் க்ளைம் செய்வதும், அதை தமிழ் அறிவுப் புலமும் இலக்கிய முகாம்களும் முற்போக்கு இடதுசாரி கூட்டங்களும் கொண்டாடுவதும் உண்மையில் ஒரு அவல நாடகம். வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு என பிரபல எழுத்தாளர் லீனா மணிமேகலை மிக கட்டமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.