ஏ ஆர் ரகுமான் குஜராத்தை சேர்ந்த சாய்ரா என்கின்ற பெண்ணை 29 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் செய்த மிகக் குறுகிய காலத்திலேயே அவருடைய மனைவியின் சிறு சிறு ஆசைகளை கூட நிறைவேற்ற முடியாத ஒரு சூழலில் இருக்கிறார் ஏ ஆர் ரகுமான். அதாவது தன்னுடைய கணவருடன் திரையரங்குக்கு சென்று படம் பார்க்க வேண்டும்.
தன்னுடைய கணவருடன் ஷாப்பிங் மாலுக்கு செல்ல வேண்டும். என்கிற சாய்ரா பானுவின் ஆசை எல்லாம் ஏ ஆர் ரகுமான் வெளிப்படையாகவே இது போன்ற உன்னுடைய ஆசை எல்லாம் என்னால் நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்து விடுகிறார். இருந்தாலும் தன்னுடைய கணவர் ரகுமான் இருக்கும் உயரம் அறிந்து கணவர் தன்னுடன் வெளியே சுதந்திரமாக எங்கேயும் வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டு தொடர்ந்து கணவரை புரிந்து கொண்டு வாழ்ந்து வருகிறார் சாய்ரா.
இது மட்டும் இல்லாமல் ஆரம்பத்தில் சாய்ரா பானுக்கு, ஏ ஆர் ரகுமானின் கூட்டு குடும்பத்திற்குள் வாழ்வது மிகவும் சிரமமாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக ஏ ஆர் ரகுமான் தாயார் அவருடைய சகோதரி ஆகியோருடன் இணைந்து வாழ்வதற்கு சிரமப்பட்டு இருக்கிறார் ஏ ஆர் ரகுமான் மனைவி சாயிரா பானு. காலங்கள் ஓட அதையும் ஏற்றுக்கொண்டு வாழும் பக்குவம் சாய்ரா பானுவிற்கு வந்திருக்கிறது.
இப்படியே மூன்று குழந்தைகளுக்கு பெற்றோர்களான ஏ ஆர் ரகுமானும் சாய்ரா பானு தங்களுடைய ஏ ஆர் ரகுமானிடம் சவுண்ட் இன்ஜினியராக வேலை செய்த ஒருவருக்கு மகளை திருமணம் செய்தும் வைத்தார்கள், இப்படி கணவன் மனைவி குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு இருவருக்கும் இடையில் ஒரு பிரிவு வருவதற்கு என்னதான் காரணம் ஏன் சாய்ரா பானு எஅவருடைய கணவரை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிடுகிறார் என பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஒரு மேடையில் கூட ஏ ஆர் ரகுமானும் அவருடைய மனைவியும் இருவரும் இணைந்து பேசும்போது அதில் அவருடைய காதல் வெளிப்பாடு பலரையும் இப்படி ஒரு அந்நூனியமான கணவன் மனைவியா என்று பாராட்ட வைத்தது. அதாவது ஏ ஆர் ரகுமானும் அவருடைய மனைவி சாய்ரா பானு இருவரும் பேசி முடிவெடுத்து தான் ஒருவரை ஒருவர் விவாகரத்து செய்து பிரிந்து விட வேண்டும் என்கிற முடிவு.
சாய்ரா பானு வெளியிட்ட அறிக்கை அதன் பின்பு வெளியான ரகுமான் அறிக்கை, அதனை தொடர்ந்து இவர்களின் குழந்தைகள் வெளியிட்ட அறிக்கை, மேலும் சாய்ரா பானு – ஏ ஆர் ரகுமான் இவர்கள் இருவருக்குமே ஒரே வழக்கறிஞர் வந்தனா ஷா, வந்தனா ஷா பல சினிமா பிரபலங்களின் விவாகரத்து வழக்கை நடத்தியவர். விவாகரத்து குறித்து வழக்கறிஞர் கூறுகையில். ஒரு கட்டத்தில் செலிபிரிட்டிகள் கோடீஸ்வரர்கள் இவர்களுக்கெல்லாம் வாழ்க்கை போர் அடித்து விடும்.
அப்படி போரடிக்கும் போது நாம் பிரிந்து போனால் என்ன என்கிற கலாச்சாரம் மேற்கத்திய நாடுகளில் உள்ளது. அந்த கலாச்சாரம்தான் தற்பொழுது இந்தியாவில் நடக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இது போன்று பல கோடீஸ்வரர்கள் பல சினிமா பிரபலங்கள் தங்களுடைய பிரிவு குறித்த காரணங்களை தெரிவிக்க மாட்டார்கள் நாங்கள் பிரிந்து போகிறோம் அவ்வளவுதான் என்பார்கள். என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.