அவசர பட்ட சாய்ரா பானு… மனைவிக்காக ஏ ஆர் ரகுமான் என்னெல்லாம் செய்து இருக்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

ஏ ஆர் ரகுமானின் நெருங்கிய நண்பர் சாகுல் ஹமீது. அந்த சாகுல் ஹமீது வேறு யாருமில்லை திருடா திருடா படத்தில் ராசாத்தி உன்ன என் உசுரு என்கின்ற பாடலை பாடியவர் தான். இவரும் ஏ ஆர் ரகுமானும் மிக நெருங்கிய நண்பர்கள். முதன் முதலில் சாயிரா பானுவை தர்காவில் சாகுல் ஹமீது உடன் சேர்ந்துதான் பார்க்கிறார். அதன் பின்பு அந்த பொண்ணை எனக்கு பிடித்திருக்கிறது என்று சாகுல் ஹமீதிடம் ஏ ஆர் ரகுமான் தெரிவிக்கிறார்.

சாகுல் ஹமீது ஏ ஆர் ரகுமான் தயாரிடம் பேசி பின்பு இரண்டு குடும்பத்தினரின் பேச்சுவார்த்தை நடத்தி ரகுமான் திருமணம் நிச்சயமிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் பம்பாய் படத்தின் இசையில் பிஸியாக இருக்கிறார் ரகுமான். பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா பெயரை சமிலா பானு என்று மணிரத்தினம் வைத்திருப்பார். இது குறித்து அப்போது பம்பாய் படத்தில் இசையமைத்த ஏ ஆர் ரகுமானிடம் மணிரத்தினம் பேசுகையில்.

நீ திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணின் பெயர் சமீரா பானு. இந்தப் படத்தில் மனிஷா கொய்ராலா பெயரை சமிலா பானு என்று வைத்திருக்கிறேன். அதனால் இந்த படத்திற்கு வரும் காதல் காட்சிகள் பாடல்கள் என அனைத்திற்குமே உன்னுடைய வருங்கால மனைவியை நினைத்து நீ மியூசிக் போடு என்று மணிரத்தினம் ரஹுமானிடம் தெரிவித்து இருக்கிறார்.

பம்பாய் படத்தில் ஏ ஆர் ரகுமான் ஒரு பாடலை எழுதியிருப்பார் அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகை கண்டேனே என்று, அதாவது குஜராத்தை சார்ந்த தன்னுடைய வருங்கால மனைவி சமீரா பானுவை மனதில் வைத்து தான் இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் எழுதியதாகவும் மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து சொந்தமாக எழுதிய பல பாடல்கள் தன்னுடைய மனைவியின் மீது கொண்ட காதலை அந்த பாடலில் வெளிப்படுத்தி இருப்பார்.

இதனைத் தொடர்ந்து ஏ ஆர். ரகுமான் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் நம் பேசப்பட வேண்டும் என்பதற்காக வந்தே மாதரம் என்கின்ற ஒரு ஆல்பத்தை உருவாக்கி, அந்த ஆல்பத்தில் ஏ ஆர் ரகுமானே விஷுவலாக வந்து பாடுவார். இந்த பாட்டு இந்தியா முழுவதும் ஏ ஆர் ரகுமானை பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் சென்றது. இந்த ஆல்பம் வெளியான பின்பு சங்கர் உட்பட பலரும் ஏ ஆர் ரகுமானை ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு காட்சியில் விஷுவலாக கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்து இருக்கிறார்கள்.

ஆனால் ரகுமான் அதை தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளார். இதன் பின்பு விஜய் நடித்த பிகில் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த போது ஏ ஆர் ரகுமான் மனைவியை அந்த படத்தின் அட்லி அணுகி, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிங்க பெண்ணே பாடல் ஒரு மோட்டிவேஷன் பாடல், இந்த பாடலில் ரகுமான் சார் விசுவலாக வந்தால் நல்லா இருக்கும், நீங்க சொன்னா நிச்சயம் கேட்பார் என்று அட்லி ஏ ஆர் ரகுமான் மனைவியிடம் தெரிவிக்க.

ஏ ஆர் ரகுமான் மனைவி இது ஒரு மோட்டிவேஷன் சாங் நீங்க வந்தா நல்லா இருக்கும் என்று சொன்னதும் தட்டாமல் மனைவிக்காக பல வருடங்கள் எத்தனை இயக்குனர்கள் ரகுமானை விஷுவலாக கொண்டு வந்து விடனும் என்று முயற்சித போதெல்லாம் புறக்கணித்த ஏ ஆர் ரகுமான் மனைவிக்காக சிங்க பெண்ணே பாடலில் விஷுவலாக வந்திருப்பார், அந்த அளவுக்கு மனைவி மீது அன்பு வைத்திருந்தார் ரகுமான்.இந்த நிலையில் ஏ ஆர் ரகுமானின் மனைவி கணவரை விட்டு விலவதாக அறிவிப்பதற்கு முன் நிச்சயம் அவர் யோசித்து முடிவு எடுத்திருக்க வேண்டும் என்பது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here