ஏ ஆர் ரகுமானிடம் மோஹினி டே நெருக்கமானது எப்படி.? மனைவிக்கு எத்தனை கோடி ஜீவனாம்சம் தெரியுமா.?

0
Follow on Google News

ஏ ஆர் ரகுமான் அவருடைய மனைவி சாய்ரா பானு இருவரும் பிரிவதாக அறிவித்திருந்த நிலையில், சாய்ரா பானு தான் முதன் முதலில் தன்னுடைய 29 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு ஏ ஆர் ரகுமானை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஏ ஆர் ரகுமான் அவருடைய முடிவை அறிவித்தார். இப்படி இருக்கையில் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து பல கோடி ஜீவனாம்சம் பெறுவதற்காக தான் ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானு கணவரை விட்டு பிரிவதாக முடிவெடுத்துள்ளார் என்று பேசப்பட்டு வந்தது.

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் ஏ ஆர் ரகுமானின் இசை குழுவில் உள்ள கித்தார் கலைஞர் மோகினி டே அவருடைய கணவரை விட்டு விலகுவதாக அறிவித்ததும், ஓ இதற்கு தான் ஏ ஆர் ரகுமான் அவருடைய மனைவி விட்டு பிரிகிறாரா என கித்தார் கலைஞர் ரோகிணி டே உடன் ஏ ஆர் ரகுமானை இணைத்து வைத்து பல கிசுகிசுகள் வெளியானது.

இந்த நிலையில் ஓவர் நைட்டில் ஒபாமா கதையாக ஒரே அறிக்கையில் இந்தியா முழுவதும் பிரபலமான மோகினி டே யார் என்று பின்னணியும் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட மோகினி டேவின் தந்தை ஒரு மிஸிசியன். இவர்கள் குடும்பம் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு குடி பெயர்ந்த பின்பு ஒரு ஸ்டார் ஹோட்டலில் அவருடைய தந்தை மிஸிசியன் ஆக இருந்து வருகிறார்.

மோகினி டே மூன்று வயதிலேயே ககித்தார் வாசிக்க தொடங்கியவர், அவருக்கு 11 வயது இருக்கும் பொழுது வேற லெவலில் கித்தார் வாசிக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருடைய தந்தையை தாண்டி தன்னுடைய 11 வயதில் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டி தன்னுடைய குடும்பத்திற்கு கொடுத்து வருகிறார் மோகினி டே, அப்படி ஒரு முறை மோகினி டே ஒரு நிகழ்ச்சியில் கித்தார் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்த பிரபல இசை அமைப்பாளர் ரஞ்சித் பரடீர் பார்க்கிறார்.

மோகினி டே தந்தையிடம் இந்த பெண்ணை என்னுடைய இசைக்குழுவுக்கு அனுப்பி விடு என்று தன்னுடைய இசை குழுவில் இணைகிறார், இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் இசை குழுவில் கித்தார் வாசித்த மோகினி டே, ஏ ஆர் ரகுமான் இசை குழுவிலும் இணைகிறார், அதன் பின்பு பினோ கலைஞரான மார்க்கை காதலித்து திருமணம் செய்கிறார் மோகினி டே, மேலும் ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவில் இடம்பெற்ற மோகினி டேய் சுமார் 40க்கு மேற்பட்ட ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கித்தார் வாசித்திருக்கிறார்.

அந்த வகையில் ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவில் முக மிக முக்கியமானவராக கருதப்படுகிற மோகினி டே, ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானு தன்னுடைய கணவரை விட்டு பிரிவதாக நவம்பர் 19ஆம் தேதி அறிவித்த அடுத்த நாள் 20ஆம் தேதி ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மனைவி விட்டு பிரிவதை உறுதி செய்கிறார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் மோகினி டே அவருடைய கணவரை விட்டு பிரிவதாக அறிவித்தது தான் மிகப்பெரிய சர்ச்சையாக வெளித்துள்ளது.

ஆனால் ஏ ஆர் ரகுமானுக்கும் மோஹினி டே வுக்கும் எந்த ஒரு தவறான உறவு இல்லை என நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது, மேலும் ரகுமான் குறித்து பல சர்ச்சைகள் வருவது குறித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here