ஏ ஆர் ரகுமான் அவருடைய மனைவி சாய்ரா பானு இருவரும் பிரிவதாக அறிவித்திருந்த நிலையில், இவர்களுக்கு இடையில் தற்பொழுது புதிதாக ஏதோ ஒரு பிரச்சனை உருவெடுத்து, அதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் காரணமாக பிரியவில்லை என்றும், சாய்ரா பானு மற்றும் ஏ ஆர் ரகுமான் இவர்கள் இருவருக்கும் இடையிலையே நீண்ட காலமாகவே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏஆர் ரகுமான் புதிதாக திருமணம் செய்து கொண்ட போது அவருடைய அம்மாவுக்கும் அவருடைய மனைவி சாய்ரா பானுவிற்கும் ஆரம்ப கட்டத்தில் ஒரு சுமூகமான உறவு இல்லை என்றும், இருந்தாலும் காலப்போக்கில் ஏ ஆர் ரகுமான் அம்மா மற்றும் சாய்ரா பானு இருவரும் ஒரு சமூகமான முடிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஏ ஆர் ரகுமான் கடவுளுக்கு நிகராக தன்னுடைய அம்மாவை போற்றக்கூடியவர்.
இடையில் தன்னுடைய அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்ற போது இந்தி சினிமா வாய்ப்பு எல்லாம் தட்டி கழுவி விட்டு, தன் தாயுடனையே இருந்து பார்த்துக் கொண்டார் ரகுமான். அவர் நினைத்திருந்தால் ஒரு பணிப்பெண்ணை அமர்த்தி தன்னுடைய தாயை பார்க்க வைத்துவிட்டு அவர் வேலையை பார்த்திருக்கலாம். ஆனால் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய தாயை உடல்நிலை சரியில்லாத போது கூடவே பார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் நடுவில் சினிமாவில் தோய்வு ஏற்பட்டு சினிமா வாய்ப்பு குறைந்தது, ஆனால் தற்பொழுது மிக பிஸியாக இருந்து வரும் நிலையில் தற்போது அவரை விட்டு அவருடைய மனைவி பிரிவதாக அறிவித்ததின் பின்னணியில் ஏ ஆர் ரகுமானை வேறொரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி பல செய்திகள் வெளியாகி வருகிறது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த செய்தியை நம்பலாமா.? வேண்டாமா.? என்கிற குழப்பம் மக்களுக்கு நீடித்து வரும் நிலையில், அந்த குழப்பத்தை தெளிவு படுத்தும் விதத்தில் பல தகவல் வெளியாகியுள்ளது. ஏ ஆர் ரகுமான் இதுவரை எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காதவர், குறிப்பாக சர்ச்சையில் சிக்க கூடிய சினிமா த துறையினரின் தொடர்பை கூட துண்டிக்க கூடியவர் ஏ ஆர் ரகுமான். அப்படி பலரின் தொடர்பை துண்டித்து இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.
மேலும் ஒரு படத்திற்கு இசை பணியில் இருக்கும் போது, இடைவேளையில் அந்த படம் சம்பந்தப்பட்ட நபர்கள், வேறு ஒருவரை பற்றி எதாவது பேசினால் கூட , இது நமக்கு தேவையில்லை, நாம் வேலையை பார்ப்போம் என்று சொல்லக்கூடியவர் ஏ ஆர் ரகுமான். அப்படி இருக்கும் பொழுது நிச்சயம் அவருக்கும் கித்தார் இசை கலைஞர் மோனிகா டேவுக்கும் எந்த ஒரு தவறான தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஏ ஆர் ரகுமானுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் பிரச்சனை வருவதற்கு காரணமான பெண் ஒருவேளை அவருடைய சகோதரிகளாகத்தான் இருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. காரணம் ஏ ஆர் ரகுமானின் அம்மா இருக்கும் வரை குடும்பத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் அவர் பேசி சரி செய்து விடுவார்.
குறிப்பாக அவருடைய சகோதரிகள் ரகுமானுக்கு அவருடைய மனைவிக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைகள் தலையிட்டால் இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் தலையிடக்கூடாது என அவருடைய தாயார் சகோதரிகளை கண்டிக்க கூடியவர் என கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் ஏ ஆர் ரகுமான் அவருடைய சகோதரிகள் மீது மிகவும் பாசமாக இருக்கக்கூடியவர் என்றும், அந்த வகையில் சாய்ரா பானுவுக்கு ஏ ஆர் ரகுமானுக்கும் இடையில் பிரச்சனை வருவதற்கு ஏ ஆர் ரகுமானின் சகோதரிகளும் ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம் என கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்