தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான் மியூசிக் டைரக்டர்களும் கூட சில கிசுகிசுகளில் சிக்கி இருக்கிறார்கள். ஆனால் ஏ ஆர் ரகுமான் இதுவரை சினிமா பல சாதனைகள் படைப்பதற்கு அவருடைய ஒழுக்கம்தான் என்று பலரும் பாராட்டி வந்தனர். அப்படி மிஸ்டர் கிளீன் என்று போற்றப்படக்கூடிய ஏ ஆர் ரகுமான் தற்போது கிசுகிசுவில் சிக்கியதும் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது பற்றியும் பல தகவல்கள் தொடர்ந்து வெளியே வந்து கொண்டு தான் இருக்கிறது.
ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானு அவருடைய விவாகரத்து அறிவிப்பை அறிவிப்பதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமான் மனதில் இருந்து சாய்ரா பானு தூக்கி எறியப்பட்டு வேறொருவர் ஏ ஆர் ரகுமான் மனதில் இடம் பிடித்தது தான் என்கின்ற விமர்சனத்தை சினிமா துறையைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் ஏ ஆர் ரகுமான் மனைவி தன்னுடைய விவகாரத்தை அறிவித்த பின்பு ஏ ஆர் ரகுமானுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைத்தது போன்று, உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது என்று அவரும் தன்னுடைய பிரிவை உறுதி செய்கிறார். இந்த வயதில் இவர்கள் பிரிந்து மீண்டும் வேறு ஒரு திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் இவர்களுக்குள் வேறு ஏதோ ஒரு பிரச்சனையாக தான் இருக்கும் என்று பரவலாக பேசிக் கொண்டிருந்த சில மணி நேரங்களிலேயே அடுத்த வந்த ஒரு தகவல் தான், அடடா ஏ ஆர் ரகுமானும் இப்படி தானா என்று விவாதம் அனல் பறந்து வருகிறது.
அதாவது ஏ ஆர் ரகுமான் மனைவி அவருடைய கணவரை விட்டு விலகுகிறேன் என்று அறிவித்த அடுத்த சில மணிநேரங்களில் ஏ ஆர் ரகுமானின் இசை குழுவில் கித்தார் இசைக்கும் பெண் கலைஞர் மோகினி டே அவருடைய கணவர் மார்க் கர்ஷாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதிலிருந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக ஏ ஆர் ரகுமான் கடந்த ஒரு வருடங்களாகவே அவருடைய இசைக் குழுவில் கிட்டார் இசைக்கும் இசை கலைஞர் மோகினி டேயுடன் மிக நெருக்கமாக இருந்து வருவதாக தற்பொழுது கிசுகிசுகள் எழுந்துள்ளது.
அதே நேரத்தில் மிஸ்டர் கிளீனாக இருந்த ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் இப்படி ஒரு கிசுகிசுவில் சிக்குவதற்கு காரணமே தனுஷ் தான் என்கின்ற ஒரு குற்றச்சாட்டும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அப்படி இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் போது தனுசும் ஏ ஆர் ரகுமானும் நெருங்கி பழகி வந்துள்ளார்கள்.
அதாவது தனுஷ் பற்றி சினிமா வட்டாரத்தில் சொல்லவே வேண்டாம் அவர் சிக்காத கிசு கிசுவே இல்லை, குறிப்பாக தனுஷ் உடன் நெருக்கமாக பழகுகிறவர்களும் பல்வேறு சர்ச்சையில் சிக்குவார்கள். அந்த வகையில் தனுசுடன் ஒரு காலத்தில் நெருக்கமாக பழகிய அனிருத் பல்வேறு கிசுகிசுகள் சிக்கினார். அதேபோன்று பாடகர் விஜய் ஜேசுதாஸ் அவருடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டிய சூழலுக்கும் வந்தார்.
இப்படி தனுசுடன் இணைகின்ற பலரும் அவர்களுடைய பழகிய பின்பு அவர்களுடைய வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படி தான் நடிகர் தனுஷ் உடன் ராயன் படத்தில் பணியாற்றிய போது நெருங்கி பழகிய ஏ ஆர் ரகுமானுக்கு சில மாற்றங்கள் அவருடைய வாழ்க்கையில் ஏற்பட, அவருடன் இசை குழுவில் பணியாற்றிய பெண் கித்தார் இசை கலைஞர் மோகினி டே உடன் நெருக்கமாக பழக தொடங்கி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.
குறிப்பாக வெளிநாடு நிகழ்ச்சிக்கு செல்லும் போது கித்தார் கலைஞர் மோகினி டே உடன் மிக நெருக்கமாக ரகுமான் இருப்பது போன்ற தகவல் மனைவிக்கு வந்துள்ளது. இதுதான் ஏ ஆர் ரகுமான் குடும்பத்தில் பூகம்பமாக வெடித்து கணவன் மனைவி இருவரும் பிரிவதற்கான காரணம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.