இந்த வயசுல இது தேவையா.? மனைவியை விட்டு ஏ ஆர் ரகுமான் பிரிய என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

ஏ ஆர் ரகுமான் சினிமா துறையில் இதுவரை எந்த ஒரு கிசுகிசுவில் சிக்காத ஒரு மிஸ்டர் கிளீன் என்று சொல்லக்கூடிய ஒரு நபர். அப்படி இருக்கும் பொழுது அவருடைய மனைவி தன்னுடைய கணவர் ஏ ஆர் ரகுமானை விட்டு பிரிவதாக அறிவித்த அறிவிப்பு மிகப்பெரிய குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏ ஆர் ரகுமானும் அவருடைய மனைவி சாய்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

அதாவது சுமார் 29 வருடங்களுக்கு முன்பு ஏ ஆர் ரகுமான் அடிக்கடி எக்மோரில் உள்ள தர்காவுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த எக்மோர் தர்கா பக்கத்தில் உள்ள பிளாட்டில் சாயிரா வசித்து வருகிறார். அவரும் அந்த தர்காவுக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார். இப்படி எதார்த்தமாக அடிக்கடி ஏ ஆர் ரகுமானும் சாய்ராவும் சந்தித்துக் கொள்கிறார்கள். இந்த சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்கிறது.

ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் படுத்திக் கொண்ட நிலையில் சுமார் ஆறு மாதம் கழித்து ஏ ஆர் ரகுமான் நேரடியாக சாய்ராவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி, என்னுடைய அம்மாவை உங்கள் வீட்டிற்கு அனுப்பி உங்கள் குடும்பத்தில் நம் திருமணம் குறித்து பேசலாமா என்று கேட்டிருக்கிறார். இதன் பின்பு ஏ ஆர் ரகுமான் குடும்பம் மற்றும் சாய்ரா குடும்பம் இரண்டு குடும்பமும் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் நிச்சயம் நடக்கிறது.

நிச்சயம் நடந்த பின்பு ஏ ஆர் ரகுமான் சாய்ராவை காதலிக்க தொடங்கி இருக்கிறார். இப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டு சுமார் 29 வருடம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்த தம்பதியினர்கள், குறிப்பாக தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து விட்ட இந்த நிலையில் பிரிவதற்கான காரணம் என்ன என்று விசாரித்ததில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது தங்களுடைய குழந்தைகளுக்கு திருமணம் செய்து முடித்து சுமார் 29 வருடம் கழித்து ஏ ஆர் ரகுமான் சாய்ரா இருவருக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் அமைதியாக கடந்து சென்று தனித்தனியாக பிரிந்து வாழலாம். தங்களுடைய பிரிவை வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருக்கும் பொழுது சாய்ரா எதற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு தன்னுடைய கணவருடான திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவிக்க வேண்டும்.

அதாவது ஏ ஆர் ரகுமான் ரோஜா படத்தில் தொடங்கி ஒரு பிசியான இசையமைப்பாளராக இருந்து வந்தவர். இடையில் சற்று குறைவான படங்களில் இசையமைத்து வந்தவர். அவருடைய குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த பின்பு மீண்டும் இசையில் பிசியானார் ஏ ஆர் ரகுமான். மேலும் புதிதாக ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கி அதில் ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கும் வகையில் வசதிகளை செய்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

மேலும் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இப்படி இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் ஏ ஆர் ரகுமான். அதாவது அவர் குடும்பத்துடன் இணைந்து நேரம் செலவிட கூட முடியாத ஒரு சூழலில் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் ஏ ஆர் ரகுமானுக்கு அவருடைய மனைவி தன்னுடைய கணவரை விட்டு பிரிவதாக அறிவித்த அறிக்கை கூட ஒரு எதிர்பாராத ஒரு அறிவிப்பாகத்தான் இருந்திருக்கும் என்கிறார்கள் பலரும்.

அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடாமல் அவர் குறிப்பாக மனைவியை விட இசையை அளவுக்கு அதிகமாக காதலிப்பது தான் ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ராவுக்கும் ஏ ஆர் ரஹ்மானுக்கும் இடையிலான விரிசலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இரண்டு குடும்பத்தினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதால் மீண்டும் சாய்ரா – ஏ ஆர் ரகுமான் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதா என்பதை உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here