திருடி திருடி மியூசிக் போடும் அனிரூத்… இனி உன் திருட்டு வேலை நடக்காது… முடிவுக்கு வருகிறது அனிருத் சினிமா கேரியர்..

0
Follow on Google News

சினிமா வட்டாரத்தில் காப்பி அடிப்பது என்னவோ அல்வா சாப்பிடுவது போலாகி விட்டது. அசால்ட்டாக ஒரு கதையையோ, இல்ல ட்யூனையோ காப்பி அடித்து வேறு ஒன்றை உருவாக்கி விடுகின்றனர். இதை சிலர் கண்டுபிடித்தாலும் அதை கடந்து விடுகின்றனர். ஆனால் அனிருத்தின் சமீபத்தில் எல்லா பாடல்களின் ட்யூனுமே வேறு ஒரு மியூசிக்கின் ட்யூனை ஒத்து இருப்பதாக தொடர்ச்சியாக சர்ச்சை நீடித்து வந்தது. இருந்தும் யாருமே அதை பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.

இந்நிலையில் லியோ படத்தின் ஐம் ஆர்டினரி பெர்சன் என்ற பாடலை பீக்கி ப்ளைண்டர் பாடலின் காப்பி என ரசிகர்கள் பிரச்னையை கிளப்பி விட்டனர். அதுமட்டுமில்லை இந்த பாடலை ஒரிஜினலாக இசையமைத்த ஓடிநிக்காவுக்கு நேரடியாக ரசிகர்கள் மெசேஜை அனுப்பி விட்டனர். இதனையடுத்து பிரபல ஆங்கில பாடகர் ஓடிநிக்காவே இந்த பிரச்னை குறித்து வாய் திறந்து இருக்கிறார்.

அதில் என்னுடைய இன்ஸ்டா, மெயிலில் ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் குவிந்துகொண்டே இருக்கிறது. அதிலும் வேர் ஆர் யூ பாடலுக்கு கீழ் லியோ படம் காப்பி குறித்து தொடர்ந்து கமெண்ட் செய்து வருகிறீர்கள். இன்னும் நிலைமை குழப்பமாகவே இருக்கிறது. இந்த பிரச்னை குறித்து இப்போ தான் பார்க்க இருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார். மேலும், மேலும் சில ஸ்க்ரீன்ஷாட்களும் இணையத்தில் கசிந்து இருக்கிறது. அதில் என்னுடைய பாடல்களுக்கு எனக்கே தெரியாமல் லைசன்ஸ் வாங்க முடியாது. என்னையோ, என் டீமினையோ யாருமே தொடர்பு கொள்ளவில்லை என்று இருந்தது.

மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் 2. இதே கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2017ல் தொடங்கப்பட்ட இந்தியன் 2 இந்தாண்டு தான் முடிவுக்கு வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் இரு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அது இந்தியன் தாத்தாவான சேனாபதி கேரக்டர் கம்பேக் கொடுக்கும் பாடலாக இது உருவாகியுள்ளது. Come Back Indian என்ற கோரஸுடன் அனிருத் இசையில் அவரே பாடியுள்ள இந்தப் பாடல் தான், இந்தியன் 2 இன்ட்ரோவில் பிஜிஎம்-ஆக உருவாகியுள்ளது. ஆனால், இது இந்தியன் தாத்தா கேரக்டருக்கு செட்டாகவில்லை என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அனிருத்தின் மியூசிக் சுத்தமாக எடுபடவில்லை எனவும், இந்தியன் 2 படத்தோட லெகஸியே மிஸ் ஆகிவிட்டதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.Come Back Indian என பெயரிடப்படும் இந்த பாடலை கேட்ட நெட்டிசன்கள் சிலர் இந்த பாடல் ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் இடம்பெறும் கொலம்பஸ் கொலம்பஸ் பாடலை காப்பியடித்து போடப்பட்டது போல் இருக்கிறது என கூறி வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள். எப்போதுமே அனிருத் இசையில் எதாவது பாடல் வெளிவந்தால், காப்பி என்ற சர்ச்சையும் அதனுடன் சேர்ந்தே வரும். ஷங்கர் படத்தின் இசையை ஷங்கர் படத்திலேயே பயன்படுத்தியதாக அனிருத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள் மக்கள்.

இன்னும் சில நெட்டிசன்கள், ”இந்தப் படத்தோட வேல்யூ தெரியுமா உனக்கு..?” என அனிருத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இந்தியன் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் போட்ட பிஜிஎம் எப்படி இருக்குன்னு கேட்டுப் பாரு என பங்கம் செய்து வருகின்றனர். விக்ரம், ஜெயிலர், லியோ படங்களில் அனிருத்தின் பிஜிஎம் வரவேற்பைப் பெற்றாலும், ஒரேமாதிரி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் மாட்டிக்கிட்ட பங்கு என ஏகப்பட்ட மீம்களை போட்டு அனிருத்தை ரசிகர்கள் ஓட்டி வருகின்றனர். அதேபோல், இந்தியன் படத்தில் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்திருந்த பிஜிஎம்களை, தற்போது வெளியான இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவில் எடிட் செய்து அனிருத்தை டேக் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியன் 2 இன்ட்ரோ எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.