குக் வித் கோமாளியில் திவ்யா துரைசாமி பேசும்போது மணிமேகலை பேச வேண்டிய இடத்தில் ஒரு தொகுப்பாளினியாக மணிமேகலை பேச வேண்டிய இடத்தில் மணிமேகலையை பேச விடாமல் தொடர்ந்து பிரியங்கா பேசிக் கொண்டே இருந்ததால், இது நான் பேச வேண்டிய இடம், ஆங்கர் வேலையை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று பிரியங்காவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் மணிமேகலை.
இதனை தொடர்ந்து என்னையே நீ கேள்வி கேட்கிறாயா.? நான் யார் என்று காட்டுகிறேன் என கோபித்துக் கொண்டு பிரியங்கா கேரவனில் சென்று அமர்ந்து விடுகிறார். இதன் பின்பு குக் வித் கோமாளி டீம் சென்று பிரியங்கா விடம் சமாதானம் பேசுகிறார்கள். அதற்கு பிரியங்கா என்னிடம் வந்து மணிமேகலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பிரியங்கா விடம் பேசிய குக் வித் கோமாளி டீம், மணிமேகலையிடம் பேசுகிறார்கள், அதாவது நீங்கள் சென்று பிரியங்காவிடம் மன்னிப்பு கேளுங்கள், கொஞ்சம் அவரை அட்ஜஸ் செய்து போங்க என்று தெரிவிக்க, நான் என்ன தவறு செய்தேன் நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று உறுதியாக இருந்துருகிறார் மணிமேகலை.
உடனே நீங்கள் பிரியங்கா விடம் மன்னிப்பு கேட்டால் உங்களுக்கு அதிக ஷோஸ் வாய்ப்பு வரும் என்று அந்த குழுவினர் மணிமேகலையிடம் தெரிவிக்கிறார்கள். மேலும் நீங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்த நிகழ்ச்சியுடன் உங்களுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்கள். இருந்தும் மணிமேகலை கடைசி வரை மன்னிப்பே கேட்கவில்லை.
இதையும் மீறி அடுத்த வார நிகழ்ச்சி தொடங்குகிறது ஆனால் அடுத்த நடந்த நிகழ்ச்சியிலும் மணிமேகலையை சீண்டும் வகையிலேயே பிரியங்கா நடந்து கொள்கிறார். அதாவது செஃப் தாமு வரும்போதும் மணிமேகலை செய்ய வேண்டிய வேலையை அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட பிரியங்கா செய்கிறார். அதே போன்று குரேசி வரும்போதும் ஒரு ஆங்கராக மணிமேகலை செய்ய வேண்டிய வேலையை செய்ய விடாமல் தொடர்ந்து பிரியங்காவே செய்கிறார்.
இப்படி ஒவ்வொருவரும் விருது வாங்கும் போது மணிமேகலையை மீண்டும் சீண்டும் விதத்தில் மணிமேகலையை ஆங்கர் வேலை செய்ய விடாமல் பிரியங்காவையே அதை செய்கிறார். ஆனால் ஏற்கனவே என்னுடைய வேலையை செய்யவிடாமல் பிரியங்கா செய்கிறார் என்று தான் குற்றச்சாட்டை வைத்து பெரும் பஞ்சாயத்து நடந்திருந்தது.
இருந்தாலும் வேண்டுமென்றே நீ என்ன குறை சொன்னால் என்ன.? உன்னால் என்ன செய்ய முடியும் நான் அப்படித்தான், இந்த தொலைக்காட்சி என் கட்டுப்பாட்டில் தான், என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்கின்ற தோரணையில் மணிமேகலையை சீண்டும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார் பிரியங்கா, ஒரு கட்டத்தில் கோபமடைந்த மணிமேகலை இதற்கு மீறியும் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து, எனது தன்மானத்தை அடகு வைத்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அந்த நிகழ்ச்சியை விட்டு போகிறேன் என்கின்ற முடிவில் மணிமேகலை வெளியேறி இருக்கிறார்.