எங்களுக்கு பீகார் பிரியங்கா தான் முக்கியம்… தமிழச்சி மணிமேகலை இல்லை…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சி என்றாலே கலாச்சாரத்தை சீரழிக்கும் ஒரு சேனலாக உருவெடுத்து மக்கள் மத்தியில் அவ பெயரை எடுத்து உள்ளது. அதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமர் வாய மூடுடி தே …. என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து தேவசேனா என்று சொல்லுகிறார், அதற்கு அடுத்த வரம் பதிலுக்கு சு… அப்படி என்று தொகுப்பாளர் சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து சும்மா இருடா என்று சொல்லுகிறார்.

இப்படி சிறுவர்கள் பார்க்கக்கூடிய இந்த நிகழ்ச்சியிலேயே பல உள் அர்த்தங்களுடன் காமெடி என்கின்ற பெயரில் முகம் சுளிக்கும் வசனங்களும் விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறுவது பார்ப்பதற்கு அருவருப்பாக உள்ளது. இந்த நிலையில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற பிரியங்காவின் ஓவர் அட்டூழியத்தால் இதற்கு மேல் நாம் தொடர்ந்தால் நம்முடைய தன்மானத்தை இழக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் மணிமேகலை.

பீகாரை பூர்வீகமாக கொண்ட பிரியங்கா டேஸ் பாண்டே வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் ஒரு தொகுப்பாளராக பெயரும் புகழும் பெற்று இன்று முன்னணி சேனலில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அந்த சேனலில் நடைபெறும் அனைத்து ஷோக்களிலும் எப்படியோ இடம்பெற்று வருவதர்க்கு இவர் விஜய் டிவி கட்டுப்பாட்டில் இல்லை, விஜய் டிவி தான் பிரியங்கா தேஷ் பாண்டே கட்டுப்பாட்டில் உள்ளது என்கின்றனர்.

அந்த வகையில் ஒரு கோமாளியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா தேஷ் பாண்டே, அந்த நிகழ்ச்சியில் சமைக்க வேண்டிய அவருடைய வேலையை மட்டும் செய்யாமல், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மணிமேகலையை சீண்டும் விதத்திலேயே செயல்பட்டு வந்துள்ளார் பீகாரை பூர்விகமாகக் கொண்ட பிரியங்கா தேஷ் பாண்டே.

குறிப்பாக திவ்யா துரைசாமி அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது மணிமேகலை பேச வேண்டிய இடத்தில் அவரைப் பேச விடாமல் தொடர்ந்து பிரியங்கா பேசி வந்துள்ளார், இது தொடர்ந்து மணிமேகலைக்கு கோபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது, ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியின் தயாரிப்பு குழுவரிடம் பிரியங்கா மீது புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்களோ பீகாரை பூர்விகமாக கொண்ட பிரியங்கா தேஷ் பாண்டேவிடம் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மணிமேகலையை அட்ஜஸ்ட் செய்து போங்க என்று சொல்லி இருக்கிறார்கள், இதனைத் தொடர்ந்து தன்மானம் தமிழர்களின் ரத்தத்தில் ஊறி இருக்கும் மரபின் பின்னணியில் இருந்து வந்த மணிமேகலை தன்மானத்தை அடகு வைக்க முன்வரவில்லை.

இந்த நிகழ்ச்சியில் என்னுடைய தன்மானத்தை அடகு வைத்து இப்படி எல்லாம் அட்ஜஸ்ட் செய்தால் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என்றால் அப்படி ஒரு நிகழ்ச்சியை தேவையில்லை என்று அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறியிருக்கிறார் மணிமேகலை. இதனைத் தொடர்ந்து மணிமேகலை – பிரியங்கா இருவருக்குமான மோதலில் 90 சதவீதத்திற்கு மேல் மணிமேகலைக்கு தான் மக்கள் அதிக ஆதரவளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் சமூக வலை பக்கத்தில் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பிரியங்காவுக்கு எதிராகவும் மக்கள் கமெண்ட் செய்வதை பார்க்க முடிகிறது. இருந்தாலும் நீங்க என்ன மணிமேகலைக்கு ஆதரவு தருவது, எங்களுக்கு பீகார் பிரியங்கா தான் முக்கியம், தமிழச்சி மணிமேகலை முக்கியமில்லை என்கின்ற ஒரு தோரணையில் அடுத்தடுத்து பிரியங்கா புகைப்படத்துடன் பல பதிவுகளை விஜய் தொலைக்காட்சி அவர்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருவது பிரியங்கா ஹியேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுப்பது போன்று அமைந்துள்ளது.

இது மக்களை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கினாலும், தமிழக மக்களுக்கு ஞாபக மறதி என்பது அதிகம், அந்த வகையில் இன்னும் சில மாதங்களில் இந்த நிகழ்ச்சி எல்லாம் மறந்துவிட்டு கடந்து சென்று விடுவார்கள், பிரியங்கா இன்னும் விஜய் டிவியை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழர்களுக்கான வாய்ப்பை தட்டிப் பறித்து கொண்டு தான் இருக்கப் போகிறார் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.