டபுள் மீனிங்… பாடி செமிங்.. சேனல் உள்ளே நடக்கும் கேவலங்கள்…

0
Follow on Google News

செயற்கையான சத்தமான சிரிப்பு, விருந்தினர், அல்லது நிகழ்ச்சி பங்கேற்பாளருடன் காமெடி என்கிற பெயரில் முகம் சுழிக்க வைக்கும் பேச்சு, அதீத சத்தத்துடன் பேசுவது இவற்றைதான் நிகழ்ச்சி தொகுப்பு என நினைத்து தொடர்ந்து பிரியங்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது விஜய் டிவி. பிரியங்கா உடன் ஒப்பிடுகையில் மணிமேகலையும் கொஞ்சம் சளைத்தவர் அல்ல. அவரும் விஜய் தொலைக்காட்சி உருவாக்கம் தான்..

ஆனால் ப்ரியங்கா அளவுக்கு மோசமான நிகழ்ச்சி தொகுப்பாளர் அல்ல. விஜய் தொலைக்காட்சியின் பாடிஷேமிங், டபுள் மீனிங் பேச்சு இதெல்லாம் இருந்தால் தான் விஜய் டிவி என்று சொல்லும் அளவுக்கு விஜய் டிவி நிகழ்ச்சியின் தரம் நாளுக்கு நாள் தாழ்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த விஜய் டிவி நிகழ்ச்சியும் அப்படி சொல்ல முடியாது, குறிப்பாக நீயா நானா கோபிநாத் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அதற்கு அனுமதி இல்லை என்பதை மக்களுக்கு உறுதி அளிக்கலாம்.

விஜய் தொலைக்காட்சியில் நீடித்து நிற்க்க வேண்டும் என்றால் டபுள் மீனிங், படி சேமிங் இதெல்லாம் தான் தகுதி என்று சொல்லும் அளவுக்கு, அங்கே தொகுப்பாளர்கள், மற்றும் காமெடி என்கிற பெயர் ஸ்டான் ஆப் காமெடியன்கள் செய்யும் முகம் சுழிக்க வைக்கும் பேச்சு ஆக மொத்தத்தில் சமுதாய சீரழிவுக்கு இதுவும் காரணம் என்கிற குற்றசாட்டு நீண்ட காலமாக இருந்து கொண்டே தான் இருக்கிறது.

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கின்றவர்கள், எதிர் பாலின விருந்தினரை பார்த்து வழிய வேண்டும். அதில் பிரியங்கா திறமையாக செயல் பட கூடியவர், ஆனால் மணிமேகலை ப்ரியங்கா அளவிற்கு மோசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிரியங்காவிற்கு யாரையும் பாராட்டினால் கொஞ்சமும் பிடிக்காதோ என்னவோ.?சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் மாகபா சில நேரம் ஏதேனும் சரியான கவுண்டர் கொடுத்து தன் பக்கம் திருப்பினால் உடனே சத்தமாக சிரித்து அவரை கட்டிப்பிடிக்க அல்லது அருகே செல்ல முயற்சிப்பார்.

இது ஒரு அட்டென்சன் சீக்கிங் தான். நானும் இருக்கிறேன் என்பது. இது எல்லா நிகழ்ச்சிகளிலும் தெரியும் .அவருக்கு தெரியும் எந்தெந்த நேரத்தில் கேமராவில் தான் வருவோம் அல்லது எடிட்டில் நம்மை சேர்ப்பார்கள் என தெரியும்.. ஆனால் இவரிடம் முழு செயற்கைதனம் அதன் மூலம் வெளிப்படும். குக் வித் கோமாளியில் இவரின் ராமர் வழிசல், இர்பான் தம்பி கொஞ்சல், அடிக்கடியான குறுக்கிடூ எல்லாமே ஒவர் ரகம். இதெல்லாம் செஞ்சா தான் கூடுதல் கவனம் கிடைக்குமென்ற ஒரு டெக்னிக்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரை இது போதாத காலம் போல. எந்த புது நிகழ்ச்சியும் இல்லை. பழைய மாவும் ரொம்ப புளித்துப்போய் கிடைக்கிறது. இருந்த ஒரு குக் வித் கோமாளியும் செல்ப் எடுக்காமல் கிடைக்கிறது. இருந்தாலும் மணிமேகலை – பிரியங்கா விவகாரத்தை நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் செல்ப் எடுக்க விஜய் தொலைக்காட்சி முயற்சியில் இறங்கலாம், அல்லது இந்த நெகடிவ் பப்ப்ளிசிட்டியை பாசிட்டிவ் பப்ளிசிட்டியாக மாற்ற முயற்சி செய்யலாம். இருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் தமிழ் தொலைக்காட்சிகளில் கேலவங்களின் உச்சம் என்கிற ஒரு அவப்பெயரை மக்கள் மத்தியில் பெற்று வருவதை பார்க்க முடிகிறது.