பிக் பாஸ் போட்டியாளராக மணிமேகலை… எல்லாம் செட்டப் நாடகம் தானா.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வேண்டும் என்று யாராவது ஒருவர் விருப்பம் தெரிவித்தால் அவர்களிடம் முதலில் நீங்கள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி மீடியாவில் இடம் பெறுங்கள் என்று அறிவுறுத்துவார்களாம் பிக் பாஸ் குழுவினர், அப்படித்தான் கூல் சுரேஷ், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை பிக் பாஸ் குழுவினரிடம் தெரிவித்து இருக்கிறார்.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு 50 நாள் இருந்தால் கூட போதும், அதனால் எனக்கு கிடைக்கும் பணம் மிக பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார் கூல் சுரேஷ். அதற்கு பிக் பாஸ் குழுவினர், நீங்கள் ஏற்கனவே பரபரப்பாக தான் இருக்கிறீர்கள். ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் பொழுது , திரையரங்கு முன்னால் பரபரப்பு ஏற்படுத்தி தான் வருகிறீர்கள்.

ஆனாலும் இந்த நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பு அனைத்து சேனல்களிலும் நீங்க தலைப்புச் செய்தியாக வரவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள், அப்படி தலைப்பு செய்தியாக இடம் பெற வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்கு முன்பு, கூல் சுரேஷ் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சியை மேடையில் தொகுத்து வழங்கிய பெண்ணின் கழுத்தில் மாலையை போட்டார்.

இந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது, மேடையிலே அந்த பெண் தொகுப்பாளர் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார், அதற்கு கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்கிறேன் என மன்னிப்பும் கேட்டார், அந்த வகையில் விஜய் டிவி நினைத்தது போன்று அனைத்து சேனல்களிலும் கூல் சுரேஷ் செய்தியாக இடம் பெற்றார்.

நினைத்தது போன்று பிக் பாஸ் வீட்டில் சென்றார் கூல் சுரேஷ், அந்த வகையில் கூல் சுரேஷ் போன்றே அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணிமேகலை செல்ல வேண்டும் என்றால் அவர் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அனைத்து மீடியாக்களின் தலைப்பு செய்தியாக இடம் பெற வேண்டும் என்கின்ற விஜய் டிவி கொடுத்த ஐடியாவின் படி தான் மணிமேகலை இப்படி செய்வதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் படியே பிரியங்கா உடன் சண்டையிட்டு வெளியேறி தனக்கு தன்மானம் தான் முக்கியம் என ஒரு அறிக்கையை வெளியிட்டு மணிமேகலை பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அது அந்த அளவுக்கு உண்மை இல்லை என்றும், காரணம் மணிமேகலை எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்று ஒட்டுமொத்தமாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

மேலும் அவர் குற்றச்சாட்டு வைத்தது பிரியங்கா மீது மட்டுமல்ல அந்த தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது நிச்சயம் தன்மானத்தைக்காக ஒரு நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவர் தன்மானத்தை அடகு வைத்து மீண்டும் ஒரு அதே தொலைக்காட்சி நிர்வாகம் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்று உறுதியாக நம்பக தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.