எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். எலிக்கும், மனிதனுக்கும் இடையே நடக்கும் போராடத்தை மையமாக வைத்து வெளிவந்த அந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக இதர நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் எந்தவிதமான கதையம்சத்தில் உருவாகவிருக்கிறது என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேலும், இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் ரிபப்ளிக், பீம்லா நாயக் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது